இன்னும் ரெண்டு நாட்கள் தான்… திமுகவிற்கு தாவும் முக்கியப் புள்ளிகள்- செந்தில் பாலாஜி சர்ப்ரைஸ்!

கோவை ஈச்சனாரி பகுதியில் முதல்வர் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி நடைபெறும் ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி கோவை வருகை தருகிறார். இதையடுத்து ஈச்சனாரி பகுதியில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில் … Read more

அண்ணாமலைக்கு சொல்வதை புரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டும்: செந்தில்பாலாஜி காட்டம்!

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காட்டமாக பல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார். ‘பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்கிற பக்குவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் இல்லையென்றால் அவர் பல விஷயங்கள் பற்றி பேசி நேரத்தைக் வீணடிக்க வேண்டாம். நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை அவர் பதலளிக்கவில்லை. எனவே அவர் பற்றிய கேள்விகளை செய்தியாளர்கள் தவிர்த்துவிடலாம்’ என … Read more

பெருந்துறையில் உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது

ஈரோடு; பெருந்துறையில் உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தை சேர்ந்த அலாவுதீன், ஆம்சுஸ்ஜாமன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி: சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள் மரக்கிளைகளில் நின்றுகொண்டு போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், தங்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, முகாமில் உள்ள மரத்தின் கிளைகளில் ஏறி நின்றுகொண்டு போராட்டம் நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு முகாமில் இலங்கையைச் சேர்ந்த 115 தமிழர்கள் உள்பட குற்ற வழக்குகளில் தொடர்புடைய 165 வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 11 அகதிகளிடம், கடந்த மாதம் 20-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 13 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். … Read more

பாசிப் பயறு 3 மணி நேரம் ஊற வைத்து… சுகர் பிரச்னைக்கு எவ்ளோ ஈஸி தீர்வுன்னு பாருங்க!

ஆண்களிடம் உள்ள டெஸ்டோஸ்டீரான் (Testosterone) ஹார்மோன்தான் அவர்களின் செயல்களைத் தீர்மானிக்கிறது. இந்த ஹார்மோன், மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி தூண்டுதல் மூலம் விதைப்பையில் சுரக்கும்; பாலியல்ரீதியாகவும் மனரீதியாகவும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தும். இந்த ஹார்மோனைச் சரியான அளவில் வைத்துக்கொள்வதில்தான் ஓர் ஆணின் செயல்பாடு இருக்கும். பொதுவாக, இதமான உணவு உடலையும் மனதையும் செழிப்பாக வைத்திருக்க உதவும். டெஸ்டோஸ்டீரானை சீராக வைத்துக்கொள்ள நார்ச்சத்தும் புரதமும் நிறைந்த உணவுகளே போதுமானவை. உளுந்து, பாசிப் பயறு, ஆட்டுக்கால் சூப், கடலை மிட்டாய், … Read more

8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தூய்மை பணியாளர் போக்சோவில் கைது.!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தூய்மை பணியாளரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எடையூர் சிவராமன் நகரில் தூய்மை பணியாளரான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார் . இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் … Read more

அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அப்புறப்படுத்தக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “வனப்பகுதிகளில் அப்புறப்படுத்தப்படும் மரங்களை … Read more

டாஸ்மாக் கடைக்கு கூட்டம் வரல… உடனே போதை பொருட்கள் ஒழிப்பு – சீமான் 'புஹாஹா'

சென்னை கலைவாணர் அரங்கத்தில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழாவானது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் போதை பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது. அரசின் இந்த தேவையான முன்னெடுப்புக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் டாஸ்மாக் குறித்து அரசை விமர்சித்து வருகின்றன. ஒரு பக்கம் போதை பழக்கத்தை ஒழிக்க அரசு தீவிரம் காட்டு வருகிறது மறுபக்கம் டாஸ்மாக்கை … Read more

ஒரே சேலையில் வாழ்க்கையை முடித்து கொண்ட காதல்ஜோடி!!

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள சிதம்பரநகர்…. இதே பகுதியில் வசித்துவருபவர் முத்துலட்சுமி. கணவரை இழந்து தனது இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று துணிக்கடைக்கு வேலைக்கு சென்ற முத்துலட்சுமி, இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது. உள்ளே சென்ற பார்த்த முத்துலட்சுமி, அதிர்ச்சியில் உடைந்து போனார். தன்னுடைய இளைய மகள், 21 வயதான உமா கவுரி தூக்கில் பிணமாக தொங்கியிருந்தார். அவருடன் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், மகள் தொங்கிய அதே சேலையில் … Read more

இலங்கையிலிருந்து 3 குழந்தைகள் உட்பட 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்: இலங்கை திரிகோணமலை, யாழ்பாணம் பகுதியை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 8 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்திறங்கினர். இவர்களிடம் ராமேஸ்வரம் மரைன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இலங்கை யாழ்பாணம் சாவடி பகுதியை சேர்ந்த கார்த்திக் (26), ரத்தினம் ரஞ்சித் (59), இதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் கீதாகுமாரி (27), இவரது குழந்தைகள் துவாரகன் (6), நிரஞ்சன் (2), திரிகோணமலையை சேர்ந்த ராமன தபிலேந்தகுமாரி (32), இவரது மகள் மித்ரா (2) மற்றும் … Read more