வீடியோ! கடலில் குளிக்கும் போதே, வலிப்பு வந்து வீழ்ந்த சிறுவன்! அதிஷ்டவசமாக முதலுதவி செய்து காப்பற்றிய டிஜிபி!

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று மாலை 5.30 மணிக்கு மெரினா கடற்கரையில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த வேளையில், அங்கே கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வலிப்பு ஏற்பட்டு நீரில் விழுந்தான். இதனை கவனித்த டிஜிபி சைலேந்திரபாபு, தண்ணீரில் மயங்கி விழுந்த சிறுவனை காப்பாற்றி கடற்கரைக்கு தூக்கி வந்து அவனுக்கு … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்: தமிழக அரசு  

சென்னை: 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுச் சேவைக்கான பதக்கங்கள் மற்றும், காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்களை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் … Read more

சரோஜ் நாராயண்சுவாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: “அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது சரோஜ் நாராயண்சுவாமியின் குரல்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: “அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது சரோஜ் நாராயண்சுவாமியின் குரல். மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன்.எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக, அகில இந்திய வானொலியில் … Read more

உசிலம்பட்டி: பழமையான பாடல்களை பறைசாற்றும் மாபெரும் இசைப் போட்டி திருவிழா!

பழமையான நினைவுகளையும், கலாச்சார பாடல்களையும் பறைசாற்றும் வகையில் மதுரை உசிலம்பட்டி அருகே மாபெரும் இசைப் போட்டி திருவிழா நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு டி.எம்.சௌந்திராஜன் நினைவு மன்றம் சார்பில் பழைய பாடல்களை நிகழ்கால இளைஞர்களுக்கு கொண்டு செல்லும் வகையிலும், பழைய கலாச்சார பாடல்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் மாபெரும் இசை போட்டி திருவிழா நடைபெற்றது. இந்த இசை விழாவில் பழங்கால ரெக்கார்டர்கள் மற்றும் கூம்பு வடிவ குழாய் ஆகியவற்றில் பாடல்களை ஒலிபரப்பு செய்து … Read more

சீன உளவுக் கப்பல் | இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் 

சென்னை: சீன உளவு கப்பலுக்கு அனுமதி அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன உளவுக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். சீன கப்பல் இலங்கை … Read more

50 ஆண்டுகள் நிறைவு.. ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்திப்பு

படித்து முடித்து 50 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.  சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 1971 ஆம் ஆண்டு மருத்துவபடிப்பை துவங்கிய மருத்துவர்கள் கல்லூரி படிப்பை துவங்கி 50 வது ஆண்டு நிறைவு பெறுவதை பொன்விழாவாக கொண்டாட திட்டமிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று(13-08-2022 முதல்  15-08-2022 தேதி வரை) மூன்று தினங்கள் குடும்பத்தினருடன் பொன்விழாவை … Read more

திருப்பூர் பல்லடம் அருகே ஆதார் சிறப்பு முகாம்.!

பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் இந்திய அஞ்சல் துறை,கோடங்கிபாளையம் ஊராட்சி நிர்வாகம், இணைக்கும் கரங்கள் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய ஆதார் கார்டு எடுத்தல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்து தரப்பட்டது. இதில் கோடங்கிபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் காவி.பழனிச்சாமி, இணைக்கும் கரங்கள் அமைப்பு தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ஈஸ்வரன், அஞ்சல் துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து … Read more

ஆக.17-ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் | குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திக்கிறார்

சென்னை: டெல்லியில் வரும் ஆக.17-ம் தேதியன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் இருந்து வரும் ஆக.16-ம் தேதி இரவு டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அடுத்தநாள் ஆக.17-ம் தேதியன்று, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவையும், 14-வது துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கரையும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிக்கவுள்ளார். … Read more

”தேசபக்தி என்ற பெயரில் நடக்கும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்” – மு.க.ஸ்டாலின்

தேசபக்தி என்ற முத்திரையை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் 76ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு மடல் வரைந்துள்ளார். அதில், இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவர்ணக் கொடியையும், விடுதலைக்காக பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஒன்றியமும் அதில் இணைந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் மேலும் வலிமை பெற உறுதியேற்பது … Read more

சரோஜ் நாராயண்சுவாமி நேயர்கள் நினைவில் என்றென்றும் வாழ்ந்திருப்பார்: முத்தரசன் இரங்கல் 

சென்னை: சரோஜ் நாராயண்சுவாமி நேயர்கள் நினைவில் என்றென்றும் வாழ்ந்திருப்பார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அகில இந்திய வானொலியின் மூத்த செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமி (87) நேற்றிரவு மும்பையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனையுற்றோம். காலை கண் விழித்ததும், வானொலியை இயக்கி, செய்தி கேட்க காதுகளை திறந்து வைக்கும் லட்சோப, லட்சம் நேயர்களின் நெஞ்சங்களில் குடியிருப்பவர் சரோஜ் … Read more