அதிகரிக்கும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் | ‘பாலியல் கல்வி’ தான் ஒரே தீர்வு – முன்னாள் நீதிபதி எஸ்.விமலா கருத்து

சென்னை: இந்தியாவில் ‘போக்சோ’ போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும்,பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதற்கு காரணம் சட்டம் பற்றிய சரியான புரிதல் இல்லாததே என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம் ‘பாலியல் கல்வி தான் இதற்கு ஒரே தீர்வு’ என்கிறார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா. கடந்த 1972-ம் ஆண்டு இந்தியாவில் சிறைக்காவலில் இருந்த மதுரா என்ற பழங்குடியினப் பெண், மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்நிலைய வளாகத்தில் 2 போலீஸாரால் பாலியல் … Read more

உணவு பழக்கம் எப்படி இருந்தாலும் உடற்பயிற்சி மிக அவசியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: நம் உணவுப் பழக்கம் எப்படி இருந்தாலும், அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று, சென்னையில் நடந்த ‘மகிழ்ச்சியான தெருக்கள்’ நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர காவல் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், ஞாயிறுதோறும் சென்னையின் முக்கியமான சாலைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ‘மகிழ்ச்சியான தெருக்கள்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்துக்கு போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு … Read more

நோயாளிக்கு நலமுடன் இருப்பதாக சான்று: மருத்துவரின் பதிவை நிறுத்தும் உத்தரவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

சிகிச்சையில் இருந்த நோயாளி நலமுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய மருத்துவரின் பதிவை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2015 செப்.27-ல் அனுமதிக்கப்பட்ட பிச்சுமணி என்பவர் சிகிச்சை பலனின்றி அக்.11-ல் இறந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக பிச்சுமணியின் மகள் சுபிதா மருத்துவ ஆணையத்தில் அளித்தபுகாரில், தனது தந்தை சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் … Read more

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் சென்னை தின கொண்டாட்டம்

சென்னை மாநகராட்சி சார்பில் இரு நாட்கள் நடைபெறும் சென்னை தின விழா மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று தொடங்கியது பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை தினத்தைகொண்டாடும் வகையில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் இரு நாட்கள் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சி தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறைஅமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று கலாச்சார நிகழ்ச்சிகளை தொடங்கி … Read more

கேரளாவை பின்பற்றி ஆட்டோ முன்பதிவுக்கான ‘அரசு செயலி’ தமிழகத்திலும் அறிமுகமாகுமா?

ஆட்டோ முன்பதிவுக்கான அரசு செயலியை கேரள அரசு தொடங்கியுள்ளது. இதைப் பின்பற்றி தமிழகத்திலும் செயலியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆட்டோ என்னும் வாகனம் பொது போக்குவரத்தில் பெரும் பங்களிப்பைச் செய்து வந்தாலும், பயணிகளுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே கட்டணம் தொடர்பான மோதல் தொடர் கதையாகவே உள்ளது. இந்நிலையில் தான் கேரளாவில் டாக்சி, ஆட்டோவுக்கான முன்பதிவு செயலியை ஆக.17-ம் தேதி அரசே தொடங்கியுள்ளது. இந்தச் செயலியில் பேனிக் பட்டன் உட்பட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. … Read more

காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

வேலூர்: ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று வேலூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வேலூர் சத்துவாச்சாரியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியவர்கள் 3.50 கோடியாக உள்ளனர். இவர்களை இலக்காக வைத்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 27 லட்சம் தடுப்பூசி தமிழகத்தில் … Read more

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட விழிப்புணர்வு பிரச்சாரம்

கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் மற்றும் நீர் மேலாண்மை போன்ற பணிகளை மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளும் வகையில், ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ், மா.ஆர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கிராம ஊராட்சி பகுதிகளில் சுகாதாரம் மற்றும் நீர் மேலாண்மை போன்ற பணிகளை மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளும் வகையில், ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டத்தை தமிழக … Read more

3% அகலவிலைப்படி உயர்வை ஜன.1 முதல் அமலாக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம்

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் தீனதயாள் தலைமையில் பூந்தமல்லியில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, பொருளாளர் ருக்மாங்கதன், தலைமைச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் அகவிலைப்படியை ஜூலை 1 முதல்வழங்காமல் ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை உயர்த்தி 34 சதவீதமாக நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். 2019 ஏப்.1 முதல் கடந்த … Read more

ஆர்எஸ்எஸ்க்கு திருமாவளவன் ஆதரவு அளிக்க வேண்டும் – வானதி அழைப்பு

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தரவு மேலாண்மை பிரிவினருக்கு பயிற்சி கொடுக்க பெரம்பலூரில் முகாம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன் இவ்வாறு கூறினார்… இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசுவதை தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவார்கள் மீது புகார் கொடுத்தாலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை…. … Read more

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தமிழகத்தில் தடை செய்ய கடுமையான சட்டம்: பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் எம்.முகமது சேக் அன்சாரி வெளியிட்ட அறிக்கை:இணையத்தின் வழியாக பணத்தை வைத்து விளையாடும் எண்ணற்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகள் சமீபகாலமாக பெருகி வருகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வீடுகளில் முடங்கிய சூழ்நிலையில் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும், பேராசையின் காரணமாகவும் பலர் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமைகளாக மாறினர். தற்போது சூதாட்ட செயலிகளால் கடனில் சிக்கி தற்கொலை முயற்சிகளை மேற்கொள்பவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பலர் … Read more