3 1/2 மணி நேரம் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்: சேலம் மாவட்டத்திற்கு தனி கவனிப்பு

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ஓ.பி.எஸ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன் செவ்வாய்க்கிழமை சுமார் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, சேலம் மாவட்டத்துக்கு தனிக் கவனம் செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் மற்றும் தலைமைப் பொறுப்பாளர்களுடன் செவ்வாய்க்கிழமை சுமார் மூன்றரை மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது, சேலம் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் அங்கே உள்ள பிரச்னைகளைக் கேட்டு தனிக் கவனம் செலுத்தியுள்ளார். … Read more

புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை விரைவில் முதல்வர் தாக்கல் செய்வார்: செல்வம் தகவல்

புதுச்சேரி: விரைவில் அலுவல் ஆய்வுக்குழு கூடி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதியை அறிவிப்போம் என்றும், புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்வார் என்றும் அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “2022 – 2023 நிதியாண்டுக்கான புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று நமது நாட்டின் … Read more

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: ராமதாஸ் வைத்த கோரிக்கை!

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று நிறுவனர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே காரில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்ற 4 பேர் கும்பல், கொளுத்துவாஞ்சேரி என்ற இடத்தில் முள்புதருக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இளம் பெண்ணை கடத்தி சீரழித்த … Read more

‘சூரி ஆன்மிகத்திற்கு எதிரானவரா?’-சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ பகிரும் ரசிகர்கள்

நடிகர் சூரி தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோயில் விழாவில் ஒயிலாட்டம் ஆடும் வீடியோவை அவரது நண்பர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூரி, சூர்யாவை பாராட்டி பேசும் போது… 1000 கோயில் கட்டுவதைவிட, 1000 அன்ன சத்திரம் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது பலநூறு ஆண்டுகள் பேசும் எனக் கூறியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதோடு, சர்ச்சையையும் ஏற்படுத்தியது. … Read more

பி.எம். கிசான்: ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ.2,000 நிதி

சென்னை: மத்திய அரசு வழிகாட்டுதல் படி, ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி’’ திட்டமானது ஒன்றிய அரசின் 100 சதவீத பங்களிப்புடன் பிப்ரவரி 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூபாய் … Read more

அரியணை ஏறும் சசிகலா – ஓபிஎஸ்.,க்கு பறந்த மெசேஜ்; எடப்பாடி அன்கோ கப்சிப்!

பிளவுகளைக் கடந்து அதிமுக நிச்சயமாக ஒன்றிணையும் என, வி.கே.சசிகலா தெரிவித்து உள்ளார். அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முதல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன மாயத்தேவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உடல் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அதிமுக தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். மதுரை விமான … Read more

பிளவுகளை கடந்து அதிமுக அம்மாவின் ஆட்சியை அமைக்கும் – சசிகலா ஆருடம்

பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, அம்மாவின் ஆட்சி உருவாகும் என மதுரை விமான நிலையத்தில் சசிகலா தெரிவித்தார். திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது… புரட்சித் தலைவர் அதிமுகவை தொடங்கிய சிறிது காலத்திலயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர் மாயத்தேவர். கழகத்தின் … Read more

250 கிலோ, 76 சதுர அடி பரப்பளவு உள்ள கேக்.. கோவை கல்லூரி மாணவர்கள் அசத்தல்

கோவையில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக  கல்லூரி மாணவர்களால் தயாரித்த 250 கிலோ எடை கொண்ட 76 சதுர அடி பரப்பளவு கேக் அப்துல்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பெற்றுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் அனைத்து வீடுகளிலும், நிறுவனங்களிலும் தேசிய கொடியினை ஏற்றியும், கல்வி நிறுவனங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள்ளன. இந்நிலையில் இந்த 75வது சுதந்திர தினவிழாவை வரவேற்க்கும் விதமாக கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் … Read more

2 மாத இடைவெளியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று..!!

 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே, கடந்த ஜூன் மாதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரது மகள் பிரியங்கா காந்திக்கும் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.  இரண்டு மாத … Read more

“பிஹாரில் ஏற்பட்டுள்ளது நல்ல மாற்றம். இது தொடரும்…” – திருப்பூரில் முத்தரசன் பேட்டி

திருப்பூர்: பிஹார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பாராட்டுகிறோம் என, திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியது: ”இந்திய கம்யூனிஸ் கட்சியின் 25-ம் மாநில மாநாடு திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. திருப்பூர் மாநகரில் நடந்த பிரமாண்ட பேரணி மூலம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மாநாட்டில் 101 மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். … Read more