கள்ளக்குறிச்சி மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன 110 கிலோ மீன்கள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நடுத்தக்கா பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன 110 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கெட்டுப்போன மீன்களை வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

தமிழக முதல்வரின் தாயார் தயாளு அம்மாளை சந்தித்த தமிழிசை

துணைநிலை ஆளுநர், தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின் சகோதரி மற்றும் அவரது அம்மாவையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்றிருந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின் சகோதரியான தமிழ்ச்செல்வியை சந்தித்துள்ளார். இல்லத்துக்கு சென்று  தயாளு அம்மாவின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயில் சென்றேன். திரும்பும்போது தமிழக … Read more

ஆன்லைன் ரம்மிக்கு தடை, போதைப் பொருள் விற்பனை தடுப்பு – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான அவசரச் சட்டம் நிறைவேற்றுவது மற்றும் போதைப் பொருட்களைத் தடுப்பது தொடர்பாக, சட்டத் துறை அமைச்சர், தலைமைச் செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். ‘ஆன்லைன் ரம்மி’ போன்ற இணையதளம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்குப் பலரும் அடிமையாகி, தங்களது வாழ்வைத் தொலைத்து வருகின்றனர். குறிப்பாக, நடுத்தர, ஏழைக் குடும்பங்களை சேர்ந்த ஏராளமானோர் இதில் அதிக பணத்தை இழந்து, கடன் தொல்லை, மன உளைச்சலுக்கு … Read more

அதிமுக அலுவலகத்தில் கலவரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பதிவான வழக்கில் 4 மாவட்ட செயலாளர்களின் முன் ஜாமீன் மனுக்களில் சென்னை காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி புகார் அளித்தார். அதன்பேரில், இரு தரப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் … Read more

3 நாள் நடைப்பயணத்தை தொடங்கினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

தருமபுரி: தருமபுரி- காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3 நாள் நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். தருமபுரி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று முதல் 3 நாள் பிரச்சார பயணம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தார். நடைப்பயணத்தில் அரசியல் நிலைகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க அவர் வேண்டுகோள் விடுத்தார்.

”மின்சாரக் கட்டணம் உடனடியாக செலுத்த வேண்டும்” :  போலி குறுச் செய்தி மூலம் பல லட்சம் மோசடி

சென்னை காவல்துறையினருக்கு 50 மேற்பட்ட மின்சார கட்டணம் தொடர்பான மோசடி புகார்கள் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மற்றும் காவல்துறையினர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக போலி குறுச் செய்திகளுக்கு பலியாக வேண்டாம் என்ற விழுப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் மின்சாரம் தொடர்பான போலி மோசடி புகார்கள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள அடையார் காவல்நிலையத்தில் 23 புகார்களும், தி.நகரில் 12 புகார்களும் பதிவு … Read more

தொடர்ந்து 4-வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து 4வது நாளாக குறைந்துள்ளது. அதன்படி, … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 20, 21, 22-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் … Read more

வன்முறை சம்பவத்தில் ஈடுப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: செந்தில் பாலாஜி

இலவசம் வேண்டாம் என்று சொல்பவர்களே அவர்கள் ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை கொடுத்து வருவதாகவும், இரட்டை வேடங்களை, தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கிறார்கள் என கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜகவை சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15 ஆம் தேதி கோவை வந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சரின் கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற … Read more

சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு உதகையில் பிரத்யேக கேமரா அருங்காட்சியகம்…

நீலகிரி: சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு உதகையில் தனியார் கேளிக்கையா பூங்காவில் 2600 கேமராக்கள் பிரத்தியேக அரங்கம் அமைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த அரங்கில் 1880 ஆண்டில் இருந்து 2017ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட பலவகையான கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. உலகில் மிக பெரிய கேமரா என்று அழைக்கப்படும் மம்மூத் கேமரா முதல் நவீன டிஜிட்டல் கேமரா வரை அனைத்து கேமராகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டம் உலக போரின் போது போர் முனையில் பயன்படுத்தப்பட்ட … Read more