4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கான சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் விடுத்த செய்திக்குறிப்பில், இன்று நீலகிரி, ஈரோடு, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழையும், தூத்துக்குடி, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை, நீலகிரி, ஈரோடு, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழையும், வரும் 4ஆம் தேதியன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி … Read more

‘தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 94% அதிகமாக தென்மேற்கு பருவ மழை பதிவு’

சென்னை: “கடந்த ஜூன் 1 முதல் ஆக.2 வரையிலான காலக்கட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான தென்மேற்கு பருவ மழையின் அளவு 242 மி.மீ. இந்தக் காலத்தின் இயல்பான அளவு 125 மி.மீ. இது இயல்பை விட 94 சதவீதம் அதிகம்” என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கேரளாவில் … Read more

வால்பாறை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் யானை… மீட்புப் பணியில் வனத் துறையினர்!

ரகுமான், கோவை Kerala floods – Wild elephant drowned video Tamil News: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி பகுதியில் நேற்று இரவு வனப்பகுதியில் பெய்த கனமழையால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் காற்றாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் அருகில் பெருங்கள்குத்து என்ற அனை திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், பில்லபார என்ற இடத்தில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை … Read more

“ரெட் அலர்ட் விடுத்தும் மீனவர்களை மீட்பதில் திமுக அரசு மெத்தனம்” – இபிஎஸ் சாடல்

சென்னை: “ரெட் அலர்ட் விடுத்தும் திமுக அரசு மீனவர்களை மீட்பதில் மெத்தனப் போக்குடன் இருந்திருக்கிறது” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடல் சீற்றம் மற்றும் கனமழை அடுத்த சில நாட்களுக்கு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த பின்பும் இந்த அரசு, மீனவர்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை தகவலை அறிவிக்காத காரணத்தினால், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலி நகரைச் … Read more

ஓடாத வாகனங்களுக்கு எப்போ டீசல் போட்டீங்க? மோசடியில் ஈடுபட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்

நீலகிரி மாவட்டத்தில் ஓடாத காவல்துறை வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பியதாக முறைகேட்டில் ஈடுபட்டதாக தலைமைக் காவலர் உட்பட 3 காவலர்களை பணியிடை நீக்கம்செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், உதகையில் ஆயுதப் படை காவல் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில், ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பியதாகக் கூறி ரூபாய் 10 முதல் 15 லட்சம் வரை போலியான பில்களை வாங்கி கணக்கு காட்டியுள்ளனர். இதுகுறித்த தகவல் மாவட்ட காவல் … Read more

கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு , 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் ராமலிங்கம், மணிகண்டன், சரண்குரு, கோகுல் , பிரதீப் ஆகிய ஐந்து பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த பின் சிறப்பு புலனாய்வு குழு போலீசார், கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.   Source link

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தனியாரின் செயற்கை அருவிகள் அகற்றம்

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தனியார் நிலங்களில் உள்ள செயற்கை அருவிகளை அகற்றும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. இப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் உள்ளன. பெரும்பாலான தனியார் அருவிகள் இயற்கையாக வரும் நீரோடைகளை வழிமறித்து, நீரோட்டத்தை திசை மாற்றி செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரம் வரை குளிக்க 100 ரூபாய் முதல் ஆயிரக்கணக்கிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேக்கரை … Read more

அரக்கோணம்: சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த எஸ்ஆர் கண்டிகை பேருந்து நிறுத்தத்தின் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (43), கன்னியப்பன் (60) மற்றும் உண்ணாமலை குமாரி (55) என்ற பெண் உட்பட மூன்று பேர் மீது சோளிங்கரிலிருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற கார் மோதிய விபத்தில் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த … Read more

கலைப்புலி தாணு உட்பட 4 சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை

IT Raid at Tamil cinema producers offices: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களான கலைப்புலி தாணு, அன்புச்செழியன், ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனின் தயாரிப்பு நிறுவனம் கோபுரம் பிலிம்ஸ். இந்த கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளது. இதையும் படியுங்கள்: நயன்தாரா- விக்கி நிஜக் காதலை மூட்டிவிட்டதே இந்த … Read more

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 3 வார காலம் அவகாசம்: தமிழக அரசுக்கு கடிதம்

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை நடத்தி முடித்து, விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு 13-வது முறையாக வழங்கப்பட்ட கால … Read more