பழனிசாமியும் செய்யல, ஸ்டாலினும் செய்யல – தொடங்கியது அன்புமணியின் புதிய பயணம்! 

தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, நாளை முதல்  3 நாட்கள் பிரச்சார எழுச்சி நடைபயணம் செல்கிறார் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.  இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் ஓடும் போதிலும் அம்மாவட்டத்தில் பாசனத்திற்கும் தண்ணீர் இல்லை; குடிக்கவும் நீர் இல்லை. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்தும் கூட நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த சிக்கலுக்கு இப்போது … Read more

அதிமுகவினர் நல்ல முடிவு எடுக்க வேண்டும்: பொன். ராதா கிருஷ்ணன் கருத்து

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகாவது அதிமுகவினர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிமன்ற தீர்ப்பை அதிமுகவினர் மதிக்க வேண்டும். இந்த தீர்ப்புக்கு பிறகாவது அக்கட்சி நிர்வாகிகள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இக்கட்சி எப்போதும்போல பலத்துடன் திகழ வேண்டும். முதல்வர் ஸ்டாலின் பாஜகவோடு குறைந்தபட்ச சமரசத்துக்குக் கூட … Read more

அதிமுக அலுவலக சாவி வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றார். அந்த சமயத்தில், ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனர். இதனை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே … Read more

துபாயில் இருந்து கடத்தப்பட்ட தங்கம்! லேட்டா வந்ததால் பிடிபட்ட கடத்தல்காரர்கள்

சினிமாவில் வருவதைப் போல நம்ப முடியாத வகையில் தங்கம் கடத்திய நபர்களை போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்துள்ளனர்.  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தே.பொடையூர் கிராமத்தைச் சேர்ந்த பாலையா இவர் கடந்த எட்டு மாதம் முன்பு துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார் அங்கு அவருக்கு வேலை கிடைக்கவில்லை.. இதனால் எட்டு மாதம் வேலை இல்லாமல் இருந்துள்ளார்.  எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்று இருந்த நிலையில் துபாயில் இருக்கும் ஒருவர் நான் உங்களை ஊருக்கு அனுப்பி … Read more

புதுக்கோட்டை அருகே ஆட்சியர் முன் தேசியக்கொடியை ஏற்றிய பட்டியலின ஊராட்சி தலைவர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை பள்ளிக்கூடத்தில் தேசியக்கொடி ஏற்ற விடவில்லை என புகார் எழுந்த நிலையில், அவர் கொடியேற்ற ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழையூர் அரசு உயர்நிலை பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக சுதந்திர தினத்தன்று, பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் கொடியேற்ற அனுமதி மறுப்பதாக, அவ்வூராட்சியின் தலைவர் தமிழரசன் கடந்த 15ம் தேதி சமூக வலைத்தளங்களில் மிக உருக்கமாக பேசி பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், … Read more

'அழைப்பு விடுத்த ஓபிஎஸ்; கண்டுகொள்ளாத இபிஎஸ்' மீண்டும் நீதிமன்றத்தை நாட முடிவு!

`இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு செல்லாது’ என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.   கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுக்கூட்டத்துக்குப்பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே புதிய நிர்வாகிகளை நியமித்தனர். ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் … Read more

சிறுகோள்கள் பூமிக்கு நீர் கொண்டு வந்ததா? ஹயபுசா-2 ஆய்வு கூறுவது என்ன?

நேச்சர் அஸ்ட்ரோனமி இதழில் கடந்த (ஆகஸ்ட் 15) ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து நமது கிரகத்திற்கு தண்ணீர் மற்றும் கரிம பொருட்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மூலம் ஹயபுசா-2 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் ரியுகு என்ற சிறுகோளை ஆய்வு செய்து அதன் தரவுகளை கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் அனுப்பியது. ஹயபுசா-2 ஆய்வு மூலம் … Read more

#BREAKING : ஓபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த ஈபிஎஸ் தரப்பு.!

அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பவழங்கியது. இந்த தீர்ப்பில் பொதுக்குழுவின் முடிவுகள் செல்லாது என அறிவித்திருத்தது. அதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளர் ஆனது மற்றும் ஓ. பன்னீர்செல்லவத்தை கட்சியை விட்டு விலகி வைத்தது போன்ற முக்கிய முடிவுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றுபட வேண்டும். சசிகலாவும் , தினகரனும் வந்தால் கட்சியில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். மேலும்,  சின்னமாவும், தினகரனும் கட்சியில் … Read more

தருமபுரியில் 3 நாட்கள் அன்புமணி பிரச்சார நடைபயணம்

ஒகேனக்கல் உபரி நீரை தருமபுரி மாவட்ட பாசனத்துக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் நாளை (19-ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து, தருமபுரி மாவட்ட பாமக செயலாளர்கள் வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ(மேற்கு), செந்தில் (கிழக்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரியாறு ஓடுகிறது. வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. இருப்பினும், தருமபுரி மாவட்டத்தின் பெரும்பகுதி விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவே … Read more

சென்னை வானகரத்தில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் சர்வீஸ் சாலை பகுதியில் மிஸ்டர் கோல்டு எண்ணெய் குடோன் உள்ளது. இதன் அருகிலேயே பிளைவுட் குடோன், டைல்ஸ் குடோனில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேமித்து வைக்கும் குடோன்கள் உள்ளன. அதன்படி இங்கே பிளைவுட்ஸ், சமையல் எண்ணெய் மற்றும் டைல்ஸ் ஆகியவற்றை தனியார் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 9.45 மணியளவில், எண்ணெய் குடோனில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் … Read more