தமிழக செய்திகள்
கட்கரி வெளியே, பட்னாவிஸ் உள்ளே: பாஜக உயர்மட்ட குழுவில் எடியூரப்பா, வானதி.. முழு விவரம்!
பாரதிய ஜனதா கட்சியின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த மத்திய தேர்தல் குழு புதன்கிழமை (ஆகஸ்ட் 17) சீரமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். பாரதிய ஜனதா கட்சியின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பாக இந்த மத்திய தேர்தல் குழு உள்ளது. 11 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவில் தற்போது 6 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். ஏடியூரப்பா, முன்னாள் ஐஏஎஸ் … Read more
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் – ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்.!
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீசெல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்பது உறுதியாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான். அந்த இடத்திற்கு வேறு யாரும் இனி வர முடியாது, வரக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் முடிவு எடுத்து அதற்கு பதிலாக அதிமுகவை இரட்டை தலைமையாக … Read more
கள்ளக்குறிச்சி கலவர சம்பவ வழக்கு.. சொத்துக்களை சேதப்படுத்தியதாக மேலும் ஒருவர் கைது.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரத்தில் சொத்துக்களை சேதப்படுத்தியதோடு அங்கிருந்த சில பொருட்களையும் எடுத்துச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கலவரத்தின் போது பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சங்கராபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரை அடையாளங் கண்டு கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். Source link
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை நாட்டின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவால்: முத்தரசன்
சென்னை: பில்கிஸ் பானு வல்லுறவு வழக்கின் கொடுங்குற்றவாளிகள் விடுதலை செய்திருப்பது நாட்டின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவால் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மண்ணில் 2002 ஆம் ஆண்டு, முஸ்லிம் இன அழிப்புப் படுகொலை சம்பவங்கள் மனிதகுல வரலாற்றில் மிகக் கொடூரமானது. இதில் அகமதாபாத் அருகில் உள்ள ரஸ்தீக்பூர் கிராமத்தை சேர்ந்த ஐந்துமாத கர்ப்பினி தாய் பில்கிஸ் பானு … Read more
அக்காவை வழியனுப்ப சென்றபோது பள்ளி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி
கெங்கவல்லி: சேலம் அருகே, தனியார் பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி, ஒன்றரை வயது பெண் குழந்தை இறந்தது. சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே உள்ள லத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி காசி(37). இவரது மனைவி சுதா(30). இவர்களுக்கு 4 வயதில் தேவிஸ்ரீ, ஒன்றரை வயதில் பவானிகாஸ்ரீ ஆகிய குழந்தைகள் உள்ளனர். தேவிஸ்ரீ, வீரகனூர் அருகே தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறாள். நேற்று காலை மகள் தேவஸ்ரீயை பள்ளிக்கு பஸ்சில் அனுப்புவதற்காக, சுதா அழைத்துச்சென்றார். அப்போது குழந்தை … Read more
கொடைக்கானலில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: ஊர் திரும்ப முடியாமல் சுற்றுலா பயணிகள் தவிப்பு
கொடைக்கானல் பங்க்குகளில் பெட்ரோல், டீசலுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர். கொடைக்கானலுக்கு ஆக.13 முதல் ஆக.15 வரை என 3 நாட்கள் தொடர் விடுமுறையால் வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் சொந்த ஊர் திரும்பினர். சுற்றுலா பயணிகள் வருகை, உள்ளூர் மக்களின் தேவை காரணமாக இங்குள்ள 3 பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதலே … Read more
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் 26ம் தேதி தேரோட்டம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, காலை 4 மணிக்கு கொடி பட்டம் பல்லக்கில் முக்கிய வீதிகள் வலம் வந்து 4.30 மணிக்கு கோயிலில் உள்ள கொடி மரத்திற்கு வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து 5.40 மணிக்கு அரிகரசுப்பிரமணியன் பட்டர் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது. இதில் திருவாவடுதுறை … Read more
’அதிமுக பிரச்சினையில் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை’ – பேரவைத் தலைவர் அப்பாவு
சென்னை: அதிமுக பிரச்னையில் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். 16 வது சட்டப் பேரவை நடவடிக்கை குறிப்புகள் மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத் திறப்பு விழாவின் சிறப்பு வெயியீடு ஆகியவற்றை பொது மக்களின் பார்வைக்கு சட்டப் பேரவையின் இணையதளத்தில் (www.assembly.tn.gov.in) பதிவேற்றம் செய்யும் நிகழ்வை சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமைச் செயலகத்தில் இன்று (17.08.2022) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் … Read more
ஐகோர்ட் கிளையில் மனு தள்ளுபடி துப்பாக்கி வைக்கும் உரிமத்தை உரிமையாக கேட்க முடியாது
மதுரை: துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை உரிமையாக கேட்க முடியாது எனக்கூறியுள்ள ஐகோர்ட் கிளை, மனுவை தள்ளுபடி செய்தது. நெல்லையைச் சேர்ந்த மனோகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கான்ட்ராக்டராக உள்ளேன். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் விவசாய நிலங்கள் உள்ளன. இதனால், விலங்குகள் தொல்லை உள்ளது. எனவே, எனக்கு துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்து எனக்கு துப்பாக்கி உரிமம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். … Read more