காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் | தங்கம் வென்ற ஜெரிமி லால்ரினுங்காவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

சென்னை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஜெரிமி லால்ரினுங்காவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது: ”பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 67 கிலோ ஆடவர் பளுதூக்கும் போட்டியில் 300 கிலோ எடை தூக்கி தங்கம் வென்ற இந்திய வீரர் ஜெரமி லால்ரினுங்காவுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். பளுதூக்கும் பிரிவில் இது இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம். மற்ற போட்டிகளிலும் … Read more

’எனக்கு பயத்துடன் வாழ முடியவில்லை’ -கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற பெண் கண்ணீர்

திருத்துறைப்பூண்டி அருகே கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவர் மனைவி அமுதா (33). இவர் துணி விற்பனை, அழகு நிலையம் மற்றும் மளிகை பொருள்கள் விற்பனை செய்துவருகிறார். இவரது கணவர் மலேசியாவில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், அமுதா தொழில் மேம்பாட்டிற்காக திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த சிலரிடம் ரூ.18 லட்சம் பெற்று வட்டி செலுத்தி வந்துள்ளார். தான் பெற்ற கடனுக்காக இதுவரை ரூ.80 … Read more

வானிலை முன்னறிவிப்பு |  5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் 

சென்னை: தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (ஜூலை 31) மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய … Read more

செங்கல்பட்டு: பாலாற்றில் குளித்த 2 சிறுமிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பாலாற்றில் குளித்த இரண்டு சிறுமிகள் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த சதீஷ் அவரது சகோதரர் குமரேசன் மற்றும் அவர்களது நண்பர் சீனுவாசன் ஆகியோர் குடும்பத்தோடு மேல்மலையனூர் அம்மன் கோவிலுக்கு நேற்றிரவு சென்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சதீஷின் மகள் வேதஸ்ரீ (11) மற்றும் குமரேசனின் மகள் சிவசங்கரி (15) ஆகியோர் செங்கல்பட்டு மாமண்டூர் … Read more

அரசுப் பள்ளிகளில் நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவா?

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நாளை முதல் (ஆகஸ்ட் 1), தங்களது வருகைப்பதிவை கல்வித்துறை செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல், மாணவர்களின் வருகையையும் செயலி மூலமே பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் கடந்த 15 மற்றும் 16-ம் தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் … Read more

நாட்டிலேயே அதிக நன்கொடை பெறும் இரண்டாவது மாநில கட்சி திமுக!.. எத்தனை கோடிகள் தெரியுமா?

நாட்டிலேயே அதிகபட்ச நன்கொடை பெறும் மாநிலக் கட்சிகளின் பட்டியலில் திமுக இரண்டாமிடத்தில் உள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்தில் அந்தந்த கட்சிகள் தாக்கல் செய்த நன்கொடை தகவல் அடிப்படையில், ஜனநாயக சீர்திருத்த சங்கம்ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில கட்சிகளில் பீகாரைச் சேர்ந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அந்த ஆண்டில், 60 கோடியே 15 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. 58 கார்ப்ரேட் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து 59 கோடியே 24 … Read more

லுலு மால் முதல் கேரளாவின் மிகப்பெரிய தொழிலதிபர் வரை; யார் இந்த யூசுஃபலி?

Shaju Philip , Liz Mathew  UAE-based Yusuffali, one of Kerala’s richest entrepreneurs and the man behind Lucknow’s Lulu Mall: ஜூலை மாத பகலில், 42 வயதான ஆமினா மற்றும் அவரது சகோதரி 50 வயதான மைமூனா, கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாட்டிகாவில் உள்ள முஹ்யுதீன் ஜும்ஆ மஸ்ஜித் முன், மனுக்களுடன் காத்திருந்தனர். மலப்புரத்தில் இருந்து வந்து, தங்கள் நன்கொடையாளரைச் சந்திக்க காத்திருந்தனர். “வீடு கட்ட பணம் வேண்டும்; என் சகோதரி தனது … Read more

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் சாய்ந்து விபத்து: 5 பேர் காயம், பொதுமக்கள் அதிர்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோயில் இன்று (ஜூலை31) நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் மிகவும் பழமையான பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் பழமையான, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலானது கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மன் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில், … Read more

காமன்வெல்த் போட்டியில் பதக்கம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “பளுதூக்கும் வீரர்கள் தங்களது அபார முயற்சிகளால் பதக்கப் பட்டியலில் இந்தியாவைத் தூக்கி நிறுத்தியுள்ளனர். காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டுள்ள இந்திய அணியினர் சிறப்பாகச் செயல்பட எனது வாழ்த்துகள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,”பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குச் சிறப்பான தொடக்கம் அமைந்துள்ளது. பளுதூக்கும் வீரர்கள் தங்களது அபார முயற்சிகளால் பதக்கப் பட்டியலில் இந்தியாவைத் தூக்கி நிறுத்தியுள்ளனர். தங்கம் வென்ற மீராபாய் சானு, வெள்ளி வென்ற பிந்தியாராணி தேவி, … Read more

சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்.!

சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது முதின்(32). இவர் நேற்று முன்தின இரவு தனது காரில் மெரினா கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது முகமது முதின் கார் மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுனர் குமார் (59) மற்றும் ஆட்டோவில் இருந்த பாபு (35) என்பவர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த … Read more