#மதுரை || கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

மதுரை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கே.பரசுராமன்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி சித்ரா (23). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சித்ரா வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து … Read more

‘சாதி – மதம் அற்றவர்’ என சான்றிதழ் கோரியவருக்கு 2 வாரங்களில் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘சாதி – மதம் அற்றவர்’ என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு இரண்டு வாரங்களில் சான்று வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மேற்கு அண்ணா நகரை சேர்ந்த மனோஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘எனது மகன் யுவன் மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்கவுள்ளேன். எனவே எனது மகனுக்கு சாதி – மதம் இல்லை என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கக் கோரி அம்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அவ்வாறு … Read more

கருணாநிதி சொல்லி திருமா செய்யாதது : திருமாவளவன் மணிவிழாவில் ஸ்டாலின் சொல்லிய மெசேஜ்…!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்தநாள் மணிவிழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் “இன்றைக்கு போல 30ஆண்டுகளுக்கு முன்பு திருமாவும் நானும் நெருக்கமாக இருந்திருந்தால், அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன். கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய கூறினார்; கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான்” என்று பேசியுள்ளார். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்துகொண்டார்; கட்சி தொண்டர்கள்தான் அவருக்கு … Read more

நித்தியின் வழியில் அன்னபூரணி அம்மா! அம்மன் வேடத்தில் அசத்தல்!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு பகுதியில் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி ஆஸ்ரமம் அமைத்து அன்னபூரணி அரசு அம்மா என்ற பெண் சாமியார் பொதுமக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவை ஆற்றி வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கினார். பட்டுப்புடவை, நகைகள் என புல் மேக்கப்பில் இவர் அமர்ந்திருக்க, இவரது பக்தர்கள் இவரிடம் குறி கேட்கும் வீடியோ வெளியாகி வைரலானது. அதன்பின்னர் தான் இவர் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தெரியவந்தது.  … Read more

’என்ன செய்யுறதுனே தெரியல’.. அரியவகை சிதைவு நோயால் அவதிப்படும் சிறுமி.. வேதனையில் பெற்றோர்!

ஆவடி அருகே அரியவகை முக சிதைவு நோயால் சிறுமி பாதிக்கப்பட்டுள்ளநிலையில், என்ன வகை நோய் என தெரியாமல் 6 ஆண்டுகளாக பெற்றோர் மருத்துவமனைக்கு அலைந்து வருகின்றனர். மேலும் தங்களது குழந்தைக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என தமிழக அரசு குழந்தையின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் வீராபுரம் கிராமம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் – சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், … Read more

சி.பி.சி.எல். சுத்திகரிப்பு நிலையத்திற்கு கட்டுப்பாடு: தமிழகத்தில் சிலிண்டர்கள் தட்டுப்பாடு வருமா?

Tamil Nadu News: தமிழகத்தில் சி.பி.சி.எல். நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 75 சதவீத சுத்திகரிப்பு பணிகள் மட்டுமே நடைபெற வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது என்று மக்கள் அஞ்சுகின்றனர். சென்னைக்கு அருகில் இருக்கும் மணலியில் சி.பி.சி.எல். நிறுவனம் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், சமையலுக்கு தேவையான எரிவாயு ஆகிய பல்வேறு எரிபொருட்கள் பிரித்தெடுக்க உதவுகிறது. இந்த ஆலையில் இருந்து … Read more

குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்த பெண் பலி

சேலம் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வால்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி கலையரசி (34). இந்நிலையில் சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக மன வேதனை அடைந்த கலையரசி, தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கலையரசியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை … Read more

கொதிக்கும் நெய் சட்டியில் கைகளை விட்டு வடை சுட்டு 60 வயது மூதாட்டி நேர்த்திக்கடன்

திருவண்ணாமலையில் கொதிக்கும் நெய் சட்டியில் கைகளை விட்டு வடை சுட்டு 60 வயது மூதாட்டி ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தினார். அங்குள்ள செ.அகரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தியம்மன் கோவில் திருவிழாவில் சந்தி அம்மாள் என்ற பெண் பக்தர் இவ்வாறு நேர்த்திக்கடனை செலுத்தினார். கரண்டியை பயன்படுத்தாமல் வெறும் கைகளை கொதிக்கும் நெய் சட்டியில் விட்டு அவர் நேர்த்திக்கடன் செலுத்தியதை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்தனர்.   Source link

நிதியமைச்சர் கார் மீதான காலணி வீச்சு சம்பவம்: பாஜக மகளிர் அணியினர் 3 பேர் சிறையில் அடைப்பு

மதுரை: தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணியை வீசிய சம்பவம் தொடர்பாக, தமிழக பாஜக மகளிரணியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த மதுரை மாவட்டம், து. புதுப்பட்டி ராணுவ வீரர் லட்சுமணன் உடல் கடந்த சனிக்கிழமை பகல் 11.30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது, அரசின் விதிமுறைப்படி, ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் … Read more

அமைச்சருடன் மோதிய டி.ஐ.ஜி; ஷாக் தந்த அரசியல் மின்சாரம்!

வேலூர் காவல் சரக டிஐஜியாக பணியாற்றி வந்தவர் ஆனி விஜயா. இவர், மீது தமிழ்நாடு காவல் துறையில் நல்ல அபிப்ராயம் உள்ளது. இவருக்கு கொடுக்கப்படும் பணிகளை திறமையுடன் செய்து முடிப்பதில் கைதேர்ந்தவர் என காவல் துறை வட்டாரத்திலேயே பரவலாக ஒரு பேச்சு உள்ளது. இந்நிலையில் வேலூர் காவல் சரக டிஐஜி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு புதிய பணியிடம் உடனடியாக ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதே சமயம் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி சத்ய பிரியா வேலூர் … Read more