Tamil Nadu Weather: தமிழகத்தின் வானிலை எப்படி? மழை வருமா? வராதா?

தமிழ்நாடு வானிலை தகவல்: தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று வடதமிழக மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நாளை (16.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் … Read more

சீர்காழி: கோயிலுக்கு சென்ற சிறுமியை கேலி செய்த இளைஞர்கள்; இரு தரப்பினரிடையே கடும் மோதல்

சீர்காழி அருகே கோயிலுக்கு வந்த சிறுமியை கேலி செய்ததால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்தனர். இதையடுத்து மூவரை கைது செய்த போலீசார் ஆறு பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மாதானம் கிராமத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. நேற்று மாலை இக்கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயுடன் வழிபாட்டிற்காக வந்துள்ளார். அப்போது இளைஞர்கள் சிலர் அப்பெண்னின் மீது தண்ணீரை பீச்சு அடித்து … Read more

‘முதலமைச்சரின் திடீர் தேச பக்தி வியப்பளிக்கிறது’ – அண்ணாமலை

பிரிவினைவாதத்தை பற்றி நாமக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் திமுக எம். பி ஆர்.ராசா முதல்வர் பேசியதை நாடே பார்த்தது. முதலமைச்சர் திடீரென தேசபக்தி பற்றி பேசுவது வியப்பு அளிக்கிறது என தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை பாஜக ஆளாத அரசு கூட வெகு விமர்சையாக கொண்டாடிக் … Read more

வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலையில் முடிந்த கோடம்பாக்க சம்பவம் .!

சென்னையில் உள்ள  கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 9-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர், கோடம்பாக்கத்திலேயே ஒரு கடையில் தையல்காரராக பணியாற்றி வந்தார். இவருடன் கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த மாதவன் என்பவரும் தையல்காரராக பணிபுரிந்து வந்தார். இதையடுத்து ,நேற்று முன்தினம் கடையில் பணியாற்றி கொண்டிருக்கும்போது, சரவணன் சரியாக துணி தைக்கவில்லை என்று மாதவன் கூறினார். தன்னை குறை கூறியது பொறுக்காததால்  மாதவனுடன், சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருக்கட்டத்தில்  வாக்குவாதம் முற்றிப்போக ஆத்திரமடைந்த மாதவன் அருகே … Read more

கடிதம் எழுதி வைத்து விட்டு திருமணமான பெண்ணுடன் மடாதிபதி எஸ்கேப்..!

கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டத்தில் கத்துகே எனும் மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிவானந்த சுவாமிகள் (25) என்பவர் நியமிக்கப்பட்டார். இவருக்கு, திருமணமான பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை மடாதிபதி சிவானந்த சுவாமிகள் கடிதம் எழுதி வைத்து விட்டு, மடத்திலிருந்து அந்த பெண்ணுடன் ஓடிவிட்டார். பெண் காணாமல் போனது குறித்து தாவனகரே காவல் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. ஆனால், மடாதிபதி காணாமல் போனது … Read more

விருது தொகை ரூ.10 லட்சத்தை முதலமைச்சர் நிவராண நிதிக்கு வழங்கினார் “தகைசால் தமிழர்” நல்லகண்ணு 

சென்னை: விருதுக்கான பத்து லட்சம் ரூபாயுடன் தனது சொந்த நிதி ரூ. 5 ஆயிரம் சேர்த்து 10 லட்சத்தி 5 ஆயிரத்தை முதலமைச்சர் நிவராண நிதிக்கு வழங்கினார் “தகைசால் தமிழர்” நல்லகண்ணு தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு “தகைசால் தமிழர் விருது” வழங்கப்படும் … Read more

நீங்க ஒன்னும் பரமாத்மா கிடையாது… பாத்து நடந்துக்கோங்க- கொந்தளித்த சீமான்!

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கடல் தீபனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கடல் தீபனின் உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது இலங்கையில் சீனக் கப்பல் வருகை குறித்த கேள்விக்கு, இறுதிப் போரின் போதே சீனா இலங்கைக்குள் வந்துவிட்டது. வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி தருகிறோம் என்று கூறி உள்ளே நுழைந்துவிட்டனர். தற்போது சீனக் … Read more

விருதுத்தொகையை திருப்பிக் கொடுத்து திகைக்க வைத்த நல்லக்கண்ணு

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிய அவர், தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கினார். இதில்,  ’தகைசால் தமிழர் விருது’ தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் … Read more

முதுமலை: வளர்ப்பு யானைகள் முகாமில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி – மரியாதை செலுத்திய யானைகள்

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. நீலகிரி மாவட்டம் முதுமலை காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நாட்டின் 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் தேசியக் கொடிகளுடன் அணிவகுத்து நின்றன. இதையடுத்து தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது அணிவகுத்து நின்ற வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி பிளிறி சத்தம் எழுப்பி தேசியக் கொடிக்கு … Read more

சென்னையில் அடுத்த 9 மாதத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது – பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்.!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து கிடைக்கும் நீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பதால் கிருஷ்ணா நதிநீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. பூண்டி ஏரியில் 974 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 131 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 2 ஆயிரத்து 970 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை … Read more