‘தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளியுங்கள்’ – அரசுக்கு எழுந்த கோரிக்கை

தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு பட்டாசு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மூன்றாவது மாநில மாநாடு சிவகாசியில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு வணிகர்கள், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், சிவகாசி காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், பட்டாசுக்கான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதமாகக் குறைப்பது உள்ளிட்ட, பட்டாசு வர்த்தகம் குறித்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுளிடம் முன்வைத்து, 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மூன்று மாதமாக திமுக போட்ட ஸ்கெட்ச்.. நள்ளிரவு டாக்டருக்கு நடந்த ஆப்ரேஷன்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த மதுரையை சேர்ந்த லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் திரும்பிய போது பாஜக தொண்டர்கள் அவரது காரைசுற்றி வளைத்து காரின் மீது செருப்பு வீசினர். காலையில் கண்டிப்பு நள்ளிரவு மன்னிப்பு இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் என்ற வகையில் டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் அமைச்சரை மிகக்கடுமையான முறையில் தாக்கி பேசினார். … Read more

75வது சுதந்திர தினம்.. சென்னையில் 33 கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு.. அனைத்து அமைச்சர்கள் பங்கேற்பு.!

நமது நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 33 கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சபாநாயகர் மு.அப்பாவு, அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.  நமது நாட்டின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை மண்டலத்தை சேர்ந்த 33 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது. இதில் சபாநாயகர் மு.அப்பாவு, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். அதன்படி, தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசாமி கோவில் – சபாநாயகர் மு.அப்பாவு‌. … Read more

அரும்பாக்கம் தனியார் வங்கியில் நகைகள் கொள்ளை.. வலிமை பட வில்லனின் வசனத்தை ஸ்டேட்டஸ் வைத்து க்ளூ கொடுத்த முருகன்.!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் நடைபெற்ற கொள்ளைக்கு முதல் நாள் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் ஸ்டேடஸ் வைத்து க்ளு கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முருகன் தன்னுடைய செல்லில் வலிமை பட வில்லனின் வசனத்தை கொள்ளைக்கு முதல் வாட்ஸ் ஸ்டேடஸாக வைத்திருந்தான். இந்த வங்கியில் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர்கள் கத்திமுனையில் வங்கி ஊழியர்களை மிரட்டி மயக்க மருந்து கொடுத்து சுமார் 20கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். Source link

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 27 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான போலீஸ் விருதுகள் தமிழகத்தில் கூடுதல் டிஜிபி (நிர்வாகம்) கி.சங்கர், ஐ.ஜி. (நுண்ணறிவு பிரிவு – உள்நாட்டு பாதுகாப்பு) சி.ஈஸ்வரமூர்த்தி, சேலம் மாநகரதுணை ஆணையர் ம.மாடசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன. குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான போலீஸ் விருதுகள், தமிழ்நாடு காவல் துறையில் 24 பேருக்கு வழங்கப்படுகின்றன. விருது பெறுவோர் விவரம். சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா, சென்னை குற்றப் புலனாய்வு எஸ்.பி-2 ஜா.முத்தரசி, சென்னை பெருநகர … Read more

காவல் துறை அதிகாரிகளுக்கு விருது: என்னென்ன பிரிவுகளில் தெரியுமா?

தமிழ்நாடு காவல் துறையில் மிக சிறப்பான செயல்பாட்டை வழங்கிய 15 அதிகாரிகளுக்கு சிறந்த பொதுசேவைக்கான முதல்வரின்பதக்கம், புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கம், ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் துறை அதிகாரிகளின் சீரிய பணியை பாராட்டி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த பொது சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை பெருநகர காவல் … Read more

76வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் முதலமைச்சர்

சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு விருதுகளை வழங்கிறார். 76-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ … Read more

தேசபக்தி லேபிள்… அரசியல் மூடத்தனத்தை அடக்குவோம்: ஸ்டாலின் எச்சரிக்கை

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்.” என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் உயிரிழந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு நேற்று (ஆகஸ்ட் 13) நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். அப்போது அங்கு கட்சிக் கொடியுடன் … Read more

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கொண்டிருந்த ஒருவரையும் கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர்.  இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பொத்தேரி பகுதியை சேர்ந்த பாபு(51) என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பாபுவை … Read more