வீராணம் ஏரி நிரம்பியது; சென்னைக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும் தண்ணீர்

கடலூர்: கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமான வீராணம் ஏரி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னைக்கும் தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய நீர் ஆதாரம் ஆகும். கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளாக காட்டுமன்னர்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறது. அதோடு இந்த ஏரி சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய … Read more

ஆந்திராவிலிருந்து மொத்தமாக வாங்கி சென்னையில் விற்பனை.. சிக்கிய மாணவர்கள் பகீர் வாக்குமூலம்

துரைப்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை துரைப்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக துரைப்பாக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளருக்கு தொடர் புகார்கள் வந்தது. அதன் பேரில் ஆய்வாளர் செந்தில் முருகன், உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில், தலைமை காவலர் சுபாஷ் சந்திர போஸ், சுதாகர், முதல் நிலை காவலர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் … Read more

பொக்கிஷமாக மிளிரும் அபூர்வ போட்டோஸ்; சென்னையின் ஆச்சரிய மனிதர் ஆனந்த்

Chennai News – பல்வேறு விதமான சமூகத்தில் இருந்து வரும் மனிதர்கள் ஒன்றுபட்டு எந்த ஊரில் வாழ முடியும்? என கேட்டால் அது சென்னையில் மட்டும் தான் என்ற பதில் மட்டுமே நமக்கு கிடைக்கும். பல விதமான சமூகத்திலிருந்து, பல விதமான கதைகளுடன், பல விதமான வரலாற்றை கொண்டு மக்கள் இங்கு பாகுபாடு இல்லாமல் வாழ்வது ஆச்சரியத்தையும் மன நிறைவையும் கொடுக்கும்.  அப்படிப்பட்ட நம்மூரில் இன்னொரு அறிய கதையைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். சென்னையின் பழமையான … Read more

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் கோபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் கோபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக பொறுப்பு வகித்த கோபி மாணவி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில் கைது கைது செய்யப்பட்ட கோபி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கோபியை பணி இடைநீக்கம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவு. Source link

“கருணாநிதி பேனா நினைவுச் சின்ன எதிர்ப்புக்கு பொறாமைதான் காரணம்” – கே.எஸ்.அழகிரி

கடலூர்: “முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ரூ.80 கோடி செலவில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இது சோனியா காந்தியை அலைக்கழிக்கும் செயல் எனக் கூறியும், இதைக் கண்டித்தும் இன்று (ஜூலை.26) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. … Read more

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் உரிமையாளரின் கட்டடங்களில் அதிகாரிகள் ஆய்வு

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரது கட்டடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த மார்ச் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது சகோதரருக்கு தொழில் ரீதியாக நெருக்கமான ஜே.ஆர்.டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை … Read more

ஏர்வாடி மனநோயாளி கொலை வழக்கு: சக மனநோயாளிக்கு அபராதம் விதித்த உத்தரவு ரத்து

மதுரை: ஏர்வாடி தர்ஹாவில் சிகிச்சை பெற்ற கேரள மனநோயாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், தஞ்சாவூர் மனநோயாளிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த அபராதத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைபூண்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (29). இவர் மனநல பாதிப்பக்காக 2015-ல் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதே தர்ஹாவில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த நாசர் என்ற அப்துல் நாசரும் மனநல சிகிச்சைக்காக தங்கியிருந்தார். தர்ஹாவில் … Read more

நாடாளுமன்றத்தில் தொடர் அமளி: 19 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் பின்னணி!

அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களின் பெயரை அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் படித்த பிறகு, மத்திய இணை அமைச்சர் முரளிதரன் அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என தீர்மானம் முன்மொழிந்தார். 6 திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒரு வாரத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கத்திலிருந்து தினமும் அமளியால் நாடாளுமன்றம் முடங்கி வரும் நிலையில், மக்களவைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பதாகைகளை ஏந்தி அவை தலைவர் இருக்கையை முற்றுகையிடுவது, … Read more

மோடியுடன் தம்பித்துரை சந்திப்பு: பேசியது என்ன?

பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக மூத்தத் தலைவர் தம்பிதுரை சந்தித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே ஒற்றை தலைமை விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்காலிக பொதுச்செயலாளரக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.கட்சியின் தலைமை அலுவலகத்தில் இரு தரப்பு ஆதரவாளர்களும் … Read more

சென்னையில் நாளை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்: எந்ததெந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் வாய்ப்பு?

சென்னை: சென்னையில் நாளை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஒரு சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி முதல் 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாநிலக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் வரை ஜோதி ஓட்டம் நடைபெறவுள்ளது. இதன்படி மாநிலக் கல்லூரி மைதானத்திலிருந்துத் துவங்கி காமராஜர் சாலை, … Read more