தமிழக செய்திகள்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம்: சிஐடியூ, ஏஐடியூசி கையெழுத்திடவில்லை
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளப்படாததால், 14-வது ஊதிய பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை” என்று சிஐடியூ செயலாளர் சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை குரோம்பேட்டையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 7 கட்டங்களாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணியிட மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைள் குறித்து பேசப்படன. இந்நிலையில் … Read more
பாமக தலைவர் அன்புமணியை தரக்குறைவாக தொண்டர் பேசும் ஆடியோ வைரல்
நல்லம்பள்ளி: தர்மபுரி பகுதியில் பாமக தலைவர் அன்புமணியை தரக்குறைவாக தொண்டர் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி, கடந்த வாரம் 3 நாட்கள் பிரசார நடைபயணம் நிகழ்ச்சியை நடத்தினார். கடந்த 20ம் தேதி நல்லம்பள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் மேடை அமைத்து அன்புமணி பேசுவதற்கு ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். அன்று இரவு பாமக தலைவர் அன்புமணி அங்கு அரை … Read more
தேசிய கிக் பாக்சிங் போட்டி: தலையில் பலத்த காயமடைந்த அருணாச்சலப் பிரதேச வீரர் மரணம்
தேசிய அளவிலான கிக் பாக்சிங் விளையாட்டுப் போட்டியில் தலையில் பலத்த காயமடைந்த அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான வாகோ இந்தியா கிக் பாக்ஸிங் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற கிக் பாக்சிங் போட்டியில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான யோரா டாடே என்பவர், மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த கேசவ் முடேல் என்பவருடன் மோதினார். போட்டியின் போது, மகாராஷ்ட்ரா … Read more
இரு பெண்கள் பாலியல் புகார்: எழுத்தாளர் சிவிக் சந்திரன் முன்ஜாமின் ரத்து
இரு பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில் பிரபல மலையாள எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை கேரள மாநில உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்தது.கேரளத்தின் எழுத்தாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் திகழ்பவர் சிவிக் சந்திரன். 73 வயதான இவர் கோழிக்கோட்டில் வசித்துவருகிறார்.இவர் மீது இளம்பெண் எழுத்தாளர் ஒருவர் ஏப்ரல் 2ஆம் தேதி புகார் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சிவிக் சந்திரன் முன்ஜாமின் பெற்றுவிட்டார். இந்த நிலையில் மற்றொரு பெண் எழுத்தாள் ஒருவர் சிவிக் சந்திரன் … Read more
அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – பிரச்சனையை சுமுகமாக முடித்த தமிழக அரசு.!
போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை குரோம்பேட்டை பணிமனையில் ஊதிய உயர்வு குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் 66 தொழிற்சங்கங்களுடன் 7 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து, இன்று சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் ஊதிய உயர்வு … Read more
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்ற முற்பட்டால் தொடர் உண்ணாவிரதம் – எடப்பாடி பழனிசாமி
கோவை: கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை இடம் மாற்ற செய்ய முற்பட்டால் கோவை மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி தமிழக அரசை எச்சரித்துள்ளார். கோவையில் அதிமுக பிரமுகரின் இல்ல நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “கோவை மாநகர மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சியில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான பணிகள் தொடங்கின. இந்நிலையில், திமுக … Read more
எம்எல்ஏ வீட்டு காதணி விழா மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூல்
பேராவூரணி: பேராவூரணியில் நடந்த மொய்விருந்தில் ரூ.10 கோடி வசூலானது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரிடையே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொய் என்ற பழக்கம் இன்று சாதி, மத சமய எல்லைகளை கடந்து அனைவருக்கும் பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி தொகுதியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் நெடுவாசல், அனவயல், வடகாடு உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகமாக மொய் விருந்து நடைபெறுகிறது. ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் நடைபெற்ற … Read more
அதிமுக விவகாரம்: தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? நீதிமன்றம் கண்டனம்
அதிமுக பொதுக்குழு மற்றும் தேர்தல் தொடர்பான வழக்குகளை ஒரே அமர்வில் பட்டியலிடும்படி கடிதம் கொடுத்த மனுதாரர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே.சி. பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். அதில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த … Read more
கடனை விரிவுப்படுத்தும் அதானி: பிட்ச் கிரெடிட் தர நிறுவனம் சொல்வதென்ன?
கடன் வாங்கி தொழில் நடத்துகிறார், அதுவும் கொஞ்சம் நஞ்சம் கடன் அல்ல. கப்பலே மூழ்கி போகும் அளவுக்கு கடன் என கௌதம் அதானி நிறுவனம் குறித்து பிரபல நிதி தர நிறுவனமான பிட்ச் தெரிவித்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் அதிகமாக ஒலிக்கும் ஒரு பெயர் கௌதம் அதானி. இவர் தான் பல்துறை தொழில் நிறுவனமான அதானி குழுமங்களின் தலைவர். இவர் குறித்து பிட்ச் நிதி தர நிறுவனம் அளித்துள்ள அறிக்கைதான் இன்றைய ஹாட் டாபிக்.தற்போதுள்ள சூழலில் அதானி நிறுவனம் அதிகப்படியான … Read more