நகைக்கடையில் கவரிங் செயினை வைத்துவிட்டு தங்க நகையை திருடிச் சென்ற திமுக வார்டு செயலாளர்.!

திருச்செந்தூரில் வாடிக்கையாளர் போன்று நகைக்கடைக்கு வந்த திமுக வார்டு செயலாளர், கவரிங் நகையை வைத்து விட்டு தங்க நகையை திருடிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 4 நாட்களுக்கு முன், வடக்கு ரத ரீதியில் உள்ள நகைக்கடைக்கு வந்த பெண்ணிடம் உரிமையாளர் நகை டிசைன்களை காண்பித்துள்ளார். அப்போது ஒரு செயினை எடுத்து மேஜையில் வைத்த பெண், வேறு டிசைன்கள் காண்பிக்கும் படி கூறிய நிலையில், உரிமையாளர் உள்ளே சென்று நகைகளை எடுத்து வருவதற்குள் கவரிங் செயினை மாற்றி … Read more

விதிகளை மீறி ஆம்னி பேருந்துகள் இயக்கம்: உரிமையாளர்களிடம் ரூ.9.65 லட்சம் அபராதம் வசூலிப்பு

தொடர் விடுமுறையின்போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சுதந்திர தினத்தையொட்டி அளிக்கப்பட்ட விடுமுறையின்போது ஆம்னி பேருந்துகளில் மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து திடீர் சோதனை நடத்திய போக்குவரத்துத் துறைஅதிகாரிகள், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக புகாரளித்த 97 பேரிடம், அந்தந்த இடத்திலேயே உரிமையாளர்கள் மூலம் கூடுதல் கட்டணத்தைத் திருப்பி வழங்க வைத்தனர். மும்மடங்கு கட்டணம் இதேபோல் கடந்த 19-ம் தேதிகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தை ஒட்டி பெரும்பாலானோருக்கு ஆக.19, … Read more

நெருங்கும் காவல்துறை? திமுகவில் கரை ஒதுங்கும் வி.சி.ஆறுகுட்டி!

அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அக்கட்சியில் நாள்தோறும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்து வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானது பின்னர் அவசர அவசரமாக ராஜினாமா செய்தது. ஓபிஎஸ் தர்மயுத்தம், ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, அதிருப்தி அணி, அமமுக, சசிகலா ஆதரவு என கட்சியின் நிலைப்பாடு என்னவென்று தெரியாமல் உள்ள இடியாப்ப சிக்கலால் தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதனை சாதமாக பயன்படுத்திக்கொண்ட மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் … Read more

ஈரோடு,பெருந்துறை சாலையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை..

ஈரோடு: ஈரோடு குமலன்குட்டை, பழையபாளையம், பெருந்துறை சாலையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். உணவகம் ஒன்றில் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். 

என்ன குற்றம் செய்தார்கள்? கனியாமூர் பள்ளி மாணவியின் மரண வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜாரக உத்தரவிட நேரிடும் என்று சிபிசிஐடி-யை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரைச் சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் … Read more

தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த திமுக எம்.எல்.ஏ வீட்டு மொய் விருந்து, கருப்பு பணத்தை மாற்றும் முயற்சியா.?!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நடத்திய பேரனின் காதுகுத்து மற்றும் மொய் விருந்தில் 100 ஆடுகள் வெட்டப்பட்டு சுமார் 8000 நபர்களுக்கு விருந்து வைக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் நா.அசோக் குமார் 8000 நபர்களுக்கு மொய் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் 100 கிடா, 1300 கிலோ கறி வெட்டி விருந்து சமைக்கப்பட்டது.  மேலும், சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு பாயாசம், வடை, … Read more

இபிஎஸ் குணாதிசயங்களைத்தான் கண்டிக்கிறேன்; அவருடன் விரோதம் இல்லை: டிடிவி தினகரன்

தஞ்சாவூர்: “அனைவரும் இணக்கமாக செயல்பட்டால்தான், தீய சக்தியான திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற முடியும், என்ற உயரிய நோக்கத்தோடு ஓபிஎஸ், வைத்திலிங்கம் கூறியுள்ள கருத்தை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் அதிமுகவில் உள்ள சில துரோகிகள், துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால்தான், இவர்களது எண்ணங்கள் நிறைவேறும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” பன்னீர்செல்வம், … Read more

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் தாயார் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது … Read more

கனியாமூர் மாணவி வழக்கு: கைதுகளுக்கான காரணம் என்ன? மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர்  கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜாரக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாக, அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, … Read more

லட்சக்கணக்கானோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்வதே திமுக அரசின் சாதனை: அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

கோவை: லட்சக்கணக்கானோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்வதே திமுக அரசின் சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் கோவையில் ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.271 கோடி மதிப்பில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 15 மாதங்களில் … Read more