'ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் தவறில்லை – ஏன் தெரியுமா?' – சீமான் விளாசல்

தமிழக ஆளுநரை சந்தித்து  நடிகர் ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை, யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மாலை முரசு நிறுவனர் பா. ராமச்சந்திர ஆதித்தனாரின் 88வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள  மாலை முரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், ”ஆளுநர் ஆர்.என்.ரவியை … Read more

மண் அள்ளும் போது எதிர்பாராத விதமாக 30 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 2 பெண்கள் பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மண் அள்ளும் போது, எதிர்பாராத விதமாக 30 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பெண் கூலித்தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். தச்சங்காடு பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவரது தோட்டத்தில் இருந்து மண் அள்ளிய பின், பள்ளத்தில் இருந்து மேலே சென்ற டிராக்டர் அதிக பாரம் காரணமாக பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் அஜாக்கிரதையால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.   Source link

வைகை ஆற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிஐஎஸ்எஃப் வீரர் 3-ம் நாளில் சடலமாக மீட்பு

மதுரை: வைகை ஆற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்று வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான பாதுகாப்பு படை வீரர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தேனி பகுதியில் பெய்யும் தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் அதிகரித்து வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை திருமங்கலம் அருகிலுள்ள கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான வினோத்குமார் (25) அவரது நண்பர் அன்பரசன் (25) உள்ளிட்ட மேலும், 4 பேர் சோழவந்தான் திருவேடகம் பகுதியிலுள்ள வைகையாற்று … Read more

ஓபிஎஸ் மீது புகார் – சிபிஐ விசாரணை கேட்ட சி.வி.சண்முகம்: விசாரணை தள்ளிவைப்பு!

அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், பொருள்களை எடுத்த சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீதான புகாரை விசாரிக்க சிபிஐ விசாரணை கேட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் நடந்தது. அப்போது கட்சிக்கு ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்பட்டது. அதே நேரம் ஓ. பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். இதை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தடுத்ததால் … Read more

காஷ்மீர் தற்கொலைப்படை தாக்குதல்! 24 வயதேயான தமிழக வீரர் வீரமரணம்!

காஷ்மீரில் ரஜோரி பகுதியில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருந்த ராணுவ முகாமில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக வீரர் உட்பட 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு நாடு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஏற்கனவே உஷார் நிலையில் உள்ளனர். … Read more

வாளையார் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; நடந்தது என்ன?

2017 ஆம் ஆண்டு கேரளாவின் வாளையாரில் 2 சகோதரிகள் சிறுமிகள் இறந்து கிடந்தனர். அவர்களின் பிரேத பரிசோதனையில் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. பரவலான மக்களின் கோபத்திற்கு வழிவகுத்த இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாலக்காடு, வாளையாரில் 2 தலித் சகோதரிகள் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மேலும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு கேரள செஷன்ஸ் நீதிமன்றம் புதன்கிழமை (ஆகஸ்ட் 10) உத்தரவிட்டது. சிபிஐயின் புதிய … Read more

இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து – கூலி தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது பஸ் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி அப்பாச்சி. இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அப்பாச்சி நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வடுகபாளையம் பகுதியைத் தாண்டி கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த தனியார் மில்லுக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக அப்பாச்சி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. … Read more

அவங்க லைஃபே போயிடும்… ஆதாரம் இருக்கு… டிஜிபி சார் ப்ளீஸ்- கதறும் கனியாமூர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அவர்கள் மீது பல்வேறு வழக்குகளை போட்டுள்ளனர். இவர்களில் பலர் அப்பாவிகள் என்றும், வேண்டுமென்றே மாட்டி விடப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி அவர்களை பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வருவதாகவும் கூறுகின்றனர். இதுதொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் பொய்வழக்கு போடப்பட்ட … Read more

75வது சுதந்திர தினம்: அஞ்சல் அட்டைகளில் தியாகிகள் படம் வரைந்து அசத்திய பள்ளி மாணவர்கள்

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 அஞ்சல் அட்டைகளில் சுதந்திர போராட்ட தலைவர்கள் குறிப்பு மற்றும் தேசிய சின்னங்கள் வரைந்து  பள்ளி மாணவர்கள் அசத்தினர். திருச்சி, தென்னூரில் உள்ள தென்னூர் நடுநிலைப்பள்ளியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மாணவ, மாணவிகள் 75 அஞ்சல் அட்டைகளில், 750 வினாடிகளில் சுதந்திரப் போராட்ட தலைவர்களின் குறிப்பு மற்றும் தேசிய சின்னங்களை வரைந்து திருச்சி மாவட்ட நூலகத்திற்கு அஞ்சல் அனுப்பினர். மறந்துபோன அஞ்சல் கடிதம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் … Read more

ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார்!

இந்தியாவின் 14ஆவது குடியரசுத் துணை தலைவராக மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் இன்று (ஆகஸ்ட் 11) பதவியேற்றுக் கொண்டார். ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தன்கருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தன்கர் மாநிலங்களவை தலைவராகவும் செயல்பட உள்ளார். குடியரசுத் துணை தலைவர் தேர்தல் கடந்த ஆகஸ்ட் … Read more