புதுவிதமான 'ரோபோடிக்' பிரச்சாரத்தை கையில் எடுத்த தமிழக பாஜக.!

திருப்பூரை அடுத்த பல்லடத்தில் பா.ஜ.க சார்பில் வருகின்ற 17-ம் தேதி தாமரை மாநாடு நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார்.  இந்த மாநாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து  தொடங்கப்பட்டுள்ளது.  திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர்  ‘ரோபோடிக்’ பிரசாரத்தை தொடங்கி வைத்துள்ளனர்.  மேலும், மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், … Read more

ஓபிஎஸ் செய்த இன்றைய செயல்பாடுகளால் அவர் நீக்கம்.. அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் இபிஎஸ் உரை

  அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் இபிஎஸ் உரை கட்சிக்கு அஸ்திவாரம் கிளைக்கழகம் ஆகும் – இபிஎஸ் அதிமுக தேர்தலில் வெற்றிப்பெற்ற நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வாழ்த்து “பெரியார், அண்ணா, ஜெ.ஜெ.வுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்” நீங்கள் விரும்பிய தீர்மானங்கள் நிறைவேற்றம் – இ.பி.எஸ் சில எட்டப்பர்கள் களங்கம் கற்பிக்கின்றனர் – இ.பி.எஸ் எதிரிகளோடு உறவு வைத்த எட்டப்பர்கள் – இ.பி.எஸ் அம்மாவின் கட்டளையை நிறைவேற்றுவதே என் வேலை – இ.பி.எஸ் என்னை அமைச்சராக்கி அம்மா அழகு பார்த்தார் … Read more

அதிமுக அலுவலகத்திற்கு சீல்: என்ன சொல்கிறது சிஆர்பிசி 145?

சென்னை: குற்றவியல் நடைமுறை சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை – ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்த வன்முறை காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்தச் சட்டம் என்ன கூறுகிறது என்று வழக்கறிஞர் சங்கர் சண்முகத்திடம் கேட்டபோது “நிலம் தொடர்பாகவும், தண்ணீர் தொடர்பாகவும், நீர்ப்பாசனம் தொடர்பாகவும் இரண்டு தரப்புகளும் … Read more

அதிமுக பொதுக்குழுவில் கே.பி. முனுசாமி- சி.வி. சண்முகம் வாக்குவாதம்: என்ன காரணம்?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் வலுப்பெற்றதை அடுத்து, கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்பு என இரு கோஷ்டிகள் உருவாகின. இருவரும் மாவட்டச் செயலாளர்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவை திரட்டி வந்தனர். இதில் ஈபிஎஸ்-கே அதிக அளவில் ஆதரவு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி … Read more

Hair care tips: முடி உதிர்வா? சிம்பிள் ஹோம்மேட் ஷாம்பூ.. இப்படி பண்ணுங்க!

நாம் அனைவரும் நீளமான, பளபளப்பான கூந்தலை விரும்புகிறோம். அழுக்கைப் போக்க நீங்கள் உச்சந்தலையில் சேர்க்கும் அனைத்து இரசாயனப் பொருட்களும் அதன் தரத்தை மோசமாக்கும். இதனால்தான் தாய்மார்களும் பாட்டிகளும் கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவதை எப்போதும் வலியுறுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக முடி உதிர்தல் என்பது பலர் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. சரியாக கவனித்த போதிலும்’ சிலருக்கு மெதுவாகவே முடி வளர்கிறது. உங்களுக்கும் இதே பிரச்சனை இருந்தால், பயனுள்ள ஹோம்மேட் ஷாம்பூ இங்கே இருக்கிறது. … Read more

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனபின், எடப்பாடி கே பழனிச்சாமி போட்ட முதல் டிவிட்.!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்த நிலையில், நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி டிவிட் செய்துள்ளார். “சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின்  இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  அவர்களின் பணி சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில், எடப்பாடி கே பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, … Read more

நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு..!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 13 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையின் ஒரு … Read more

நாமக்கல் எம்.பி சின்ராஜ் தரையில் அமர்ந்து தர்ணா: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

நாமக்கல்: நாமக்கல் எம்.பி சின்ராஜ் தரையில் அமர்ந்து தர்ணா செய்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியம் லத்துவாடி ஊராட்சி தலைவர் மீது புகார்கள் வந்தது. அதன்பேரில், லத்துவாடி ஊராட்சி அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கடந்த வாரம், நாமக்கல் எம்.பி.ஏ. கே. பி. சின்ராஜ், லத்துவாடிக்கு சென்றார். அப்போது ஊராட்சி தலைவர், பஞ்சாயத்து ஆவணங்களை தனது அலுவலகத்தில் வைத்துப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். அங்கிருந்த ஊராட்சி செயலாளரிடம் எம்.பி … Read more

எஸ்.பி. வேலுமணியின் நண்பரின் இடங்களில் தொடரும் வருமான வரி சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் நெருங்கிய நண்பரான சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்களில் 6-வது நாளாக வருமான வரித்துறையினர் இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருங்கிய நண்பராகவும், கோவை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆகவும் இருப்பவர் சந்திரசேகர். இவரது வீட்டில் கடந்த 6-ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சந்திரசேகரின் வீடு, அவரது தந்தை, தம்பி செந்தில் பிரபு ஆகியோரின் வீடுகள், … Read more

திராவிடம் பற்றிய ஆளுனர் பேச்சில் பீதி வெளிப்படுகிறது: டி.ஆர் பாலு கண்டனம்

தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு, ஆளுநரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: தமிழ்நாடு ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை தனது வழக்கமாக வைத்திருக்கிறார். சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி தன்னை நோக்கி அனைவரையும் பார்க்க வைக்கும் நோக்கத்துடன் இப்படி ஆளுநர் நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படும் வண்ணம் அவரது கருத்துக்கள் தமிழ்நாட்டின் பொதுவெளியில் அமைந்து வருகின்றன. தமிழகத்திற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் … Read more