அமைச்சர் பிடிஆர் போட்ட கண்டிஷன்… டாக்டர் சரவணன் செம ஷாக்!

செருப்பு வீச்சு சம்பவம்: ஆகஸ்ட் 13 ஆம் தேதி… ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்த மதரை விமான நிலையத்துக்கு சென்றுள்ளார் அமைச்சர் பிடிஆர். அப்போது அங்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை எதிர்பார்த்து அக்கட்சியினர் கூட்டமாக கூடியிருந்ததை கண்டு, அரசு நிகழ்ச்சியில் ஏன் இவ்வளவு கூட்டம் என்று அமைச்சர் கேட்கவே, ஆக்ரோஷமான பாஜகவினர், அவரது கார் மீது … Read more

வானிலை தகவல்: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.   வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நாளை தமிழ்நாடு, … Read more

தூத்துக்குடியில் கஞ்சா வழக்குகளில் 208 வங்கி கணக்குகள் முடக்கம்: 204 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்டோர் மற்றும் அவர்களது உறவினர்களின் 208 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கஞ்சா விற்பனை, பதுக்கி வைத்ததாக 126 வழக்குகளை எஸ்.பி.பாலாஜி சரவணன் பதிவு செய்துள்ளார். கஞ்சா வழக்குகள் தொடர்பாக 204 பேர் கைது செய்யப்பட்டு 122 கிலோ கஞ்சா மற்றும் 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

'விவசாய நிலத்தில் விமான நிலையம் கட்டுவது என்ன மாதிரியான வளர்ச்சி?' – சீமான் சரமாரி கேள்வி

இருக்கும் விமான நிலையத்தில் பயணிப்பதற்கே பயணிகள் இல்லாத போது, 5000 கோடி செலவில் புதிய விமான நிலையம் அமைப்பது தேவையா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரை தூக்கிலிடக்கூடாது என கோரி கடந்த 2011 ம் ஆண்டு செங்கொடி என்கிற பெண் தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில் செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் … Read more

உதகை | பழங்குடியின பெண் தலைவர் மீது சாதிய வன்மம்: நெல்லியாளம் அதிமுக கவுன்சிலர் மீது புகார்

பந்தலூர்: உதகை நெல்லியாளம் நகராட்சி பழங்குடியின தலைவர் மீது சாதிய வன்ம தாக்குதலில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியின் தலைவர் பதவி பழங்குடியின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் பழங்குடியின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட ஒரே தலைவர் பதவி நெல்லியாளம் நகராட்சி மட்டுமே. மொத்தமுள்ள 21 வார்டுகளில் 13 வார்டுகள் திமுகவும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக தலா 2 வார்டுகளிலும், விடுதலை … Read more

ஜெயலலிதா மரணம்… சசிகலாவுக்கு ஜெயக்குமார் சாட்டையடி கேள்வி!

மறைந்த அதிமுக நிர்வாகி தனசேகரின் நினைவு கோப்பை கால்பந்து போட்டியினை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். அதோடு வீரர்களுடன் கால்பந்தாடி மகிழ்ந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், அதிமுக என்ற கட்சி தலைவர்களை நம்பியோ, சட்டமன்ற உறுப்பினர்களை நம்பியோ, எம்பிக்களை நம்பியோ ஆரம்பிக்கப்படவில்லை என்றும், தொண்டர்களை நம்பித்தான் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார் என்றும் கூறினார். பன்னீர்செல்வத்தின் நடவடிக்கை … Read more

குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் தண்ணீர் புகுந்ததால் பள்ளி பூட்டப்பட்ட அவலம்!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ளது தொளசம்பட்டி கிராமம். இங்கே உள்ள பொதுமக்கள் தண்ணீரால் கண்ணீர் சிந்தி வருகின்றனர். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமான தொழில் விவசாயம், நெசவுத் தொழில். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து தொளசம்பட்டி வழியாக கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, பல்வேறு ஊர்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தொளசம்பட்டி கரியங்காட்டுவளவு பகுதியில், குடிநீர் குழாய் உடைந்து,தண்ணீர் வெளியேறி அப்பகுதி … Read more

மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியுடன், அமர்க்களமாக நடத்த ஏற்பாடுகள் ‘ரெடி’..! கண்காணிப்பு, பாதுகாப்பு குழுக்கள் அமைத்து நடவடிக்கை

மதுரை: மதுரையில் ஆக.31ல் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியுடன், சிறப்புடன் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தயார் படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் மாசின்றி சிலைகள் செய்து, உரிய முன் அனுமதியுடன் விழாவை நடத்த அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கென சிறப்பு குழுக்கள் அமைத்தும் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கிராமம் முதல் நகர்ப்புறம் வரை ‘முழு முதற்கடவுளாம்’ விநாயகருக்கான வரவேற்பு பக்தர்களிடம் நிரம்பி வழிகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட தினமான ஆக.31ஐ அத்தனை பேருமே எதிர்பார்த்துக் கிடக்கிறோம். … Read more

’இதை டெபாசிட் பண்ணிடுங்க’.. வங்கி காவலாளியிடம் கள்ள நோட்டுகளை கொடுத்துவிட்டு பறந்த நபர்!

திருவான்மியூரில் காவலாளியிடம் 8 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏடிஎம்மில் டெபாசிட் செய்ய சொல்லிவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை அடையாறு எல்.பி சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன்(42), என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் மாலை காவலாளி கர்ணன் வேலையில் இருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கர்ணனிடம் 8 ஆயிரம் … Read more

நிதியே இல்லாத அரசாங்கத்துக்கு பேனா வைக்க மட்டும் நிதி வந்தது எப்படி?- இபிஎஸ்

திருச்சி: “நிதியே இல்லை என்று கூறிவரும் இந்த அரசாங்கத்துக்கு பேனா வைக்க மட்டும் எப்படி நிதி வந்தது என்று மக்கள் கேட்கின்றனர்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவபதி இல்ல விழாவில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களாகிறது என்ன செய்தீர்கள்? என்று மக்கள் கேட்கின்றனர். ஆன்லைன் ரம்மி செய்ததுதான் மிச்சம். … Read more