Tamil nadu schools holiday (Oct 2022): 5 நாட்கள் தொடர் விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையாக ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. மேலும், பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறவில்லை. நடப்பு 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு … Read more

பம்புக்கு மேல் ரோடு: அலப்பறை செய்த அதிமுக ஒப்பந்ததாரர்!

சாலைகள், மேம்பாலங்கள் என அரசின் திட்டங்கள் ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் தலைமையில் மக்களுக்கான சாலைகள் போடப்படுகிறது. அது தரமாக இருக்க வேண்டும் இல்லையா ?. ஆனால், கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு சாலை போடுகிறோம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போகும் சூழல் நிலவி வருகிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ராசிபுரம் அருகே உள்ள சாலையில் லட்சணத்தை பொதுமக்களே கேள்வி கேட்டுள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன் பாளையம் … Read more

போச்சம்பள்ளி அருகே ஒரு கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ள சுவாரசிய சம்பவம்.!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகேயுள்ள கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள மக்கள் மழை பெய்ய வேண்டியும் புரட்டாசி மதங்களில் முதல் வாரம் நெல் அறுவடையை துவங்குவதற்கு முன்னதாக விரதமிருந்து ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஊரை காலி செய்து விட்டு பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளில் திருப்பதிக்கு சென்றனர். இந்நிலையில் கீழ் குப்பம் கிராமம் முழுவதும் … Read more

அடிபம்பு மீது கான்கிரீட் சாலை போட்ட ஒப்பந்ததாரர்! இது நாமக்கல் சம்பவம்! தொடரும் அவலம்

ராசிபுரம் பகுதியில் சாலையில் காங்கிரீட் போடும் பணியின்போது அடிபம்பை அகற்றாமல் அப்படியே காங்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன் பாளையம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில தினங்களாக சாலையில் சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் காங்கிரீட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. காங்கிரீட் அமைக்கும் ஒப்பந்தப் பணிகளை மதியழகன் என்பவர் … Read more

28-ம் தேதி’ இபிஎஸ் திருச்சி பயணம்.. பிரம்மாண்டத்தை நிரூபிக்க அதிமுகவினர் ஏற்பாடு

முன்னாள் அமைச்சர் சிவபதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்காகவும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை சந்திப்பதற்காகவும், எடப்பாடி பழனிசாமி வரும் 28-ம் தேதி திருச்சி வருகின்றார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தில் எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே பொதுக்குழுவை கூட்டி பிரம்மாண்டம் காண்பித்ததற்கு பின், முதன்முறையாக இபிஎஸ் திருச்சிக்கு வருகிறார். அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் . இதனையடுத்து அவரை வரவேற்பது தொடர்பாக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் மற்றும் முன்னாள் … Read more

அதிகரிக்கும் பரவல்: மதுரையில் 81 பேருக்கு டெங்கு பாதிப்பு

மதுரை: மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் இதுவரை 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டாக கரோனா தொற்று நோய் மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு தொற்று நோயாக இல்லாததால் தொற்று நோயாக பரவிய கரோனாவை ஒழிக்க சுகாதாரத்துறை முக்கியத்துவம் கொடுத்தது. அதனால், கடந்த 2 ஆண்டாக டெங்கு பரவிய போதும் அதன் பாதிப்பு வெளியே தெரியாமல் இருந்தது. தற்போது … Read more

டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறுவதில் சிக்கல் – தமிழக அரசு தகவல்!

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இந்த திட்டம், 10 மலைப்பகுதி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இதை அமல்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு … Read more

அரசு பள்ளி மாணவர்கள் விமானத்தில் பயணம் – நெகிழ வைக்கும் ஊராட்சி தலைவர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி தலைவராக ஞானசேகரன் செயல்பட்டு வருகிறார். இவர் ஊராட்சியிலுள்ள இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவருகிறார். இதன் ஒருகட்டமாக அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது. இதனை நிறைவேற்றும் விதமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ,மாணவிகள்,ஆசிரியைகள் உள்பட மொத்தம் 110 பேரை கொரோனா பேரிடர் காலத்திற்கு … Read more

ஊத்தங்கரை வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேர் கைது

ஊத்தங்கரை: வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாம்பாறு அணை கிருஷ்ணன் கோயில் அருகே ரோந்து பணியில் காவல் உதவி ஆய்வாளர் குட்டியப்பன் மேற்கொண்டுள்ளார். அப்போது முட்புதர் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் 4 பேர் மறைந்திருப்பதை கண்ட எஸ்.ஐ. குட்டியப்பன் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஏதாவது ஒரு வங்கியில் கொள்ளையடிக்க வெல்டிங் மிஷினுடன் 5 பேர் வந்தது தெரியவந்துள்ளது.

இருள் நகரமாக மாறிய தூங்கா நகரம் மதுரை! அதிகாரிகள் இவ்வளவு அலட்சியம் காட்டுவது ஏன்?

எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் தூங்காநகரம் என அழைக்கப்படும் மதுரை மாநகரில் தெரு விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியுள்ளது. 100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் 55,500 தெருவிளக்குகள் உள்ளன. கடந்த காலத்தில் தெரு விளக்குகள் அனைத்தும் டியூப் லைட், சிஎஃப்எல் மற்றும் சோடியம் விளக்குகளாக மட்டுமே இருந்தன. இந்த விளக்குகளை எரிய வைப்பதற்கு அதிகளவு மின்சாரம் தேவைப்பட்டதால் தெருவிளக்குகளுக்காக மட்டும் மாநகராட்சி நிர்வாகம், மின்கட்டணமாக 1 கோடி வரை செலுத்தி வந்தது. இந்நிலையில் நிதியிழப்பை கருத்தில் கொண்டு … Read more