வீடு வீடாக போய் சேரும் செஸ் ஒலிம்பியாட் ‘தம்பி’: ஆவின் அசத்தல் முயற்சி

Chess Olympiad 2022 – சென்னையில் நடைபெறவிருக்கும் சர்வதேச செஸ் போட்டிக்காக விளம்பரங்கள் மக்களை வியக்கவைக்கும் வண்ணம் பரப்பப்படுகிறது. நேப்பியர் பாலத்தை சதுரங்க பலகைப் போல வர்ணம் பூசியதிலிருந்து, இசை ஜாம்பவானான ஏ.ஆர்.ரகுமான் இப்போட்டிக்காக பிரத்யேகமாக பாடல் இசையமைப்பது, சென்னை முழுவதும் ‘தம்பி’ (செஸ் ஒலிம்பியாடின் இலச்சி உருவப்படம்) சிலையாகவும், பதாகையாகவும் விளம்பரப்படுத்துவது, சமூக வலைத்தளங்களில் இத்தகவல்களைப் பரப்புவது போன்ற பல்வேறு வகையில் மக்களின் முன் இப்போட்டியை  கொண்டு சேர்க்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஆவின் பால் பாக்கெட்டுகளில் … Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களி இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் மதுரை, கன்னியாகுமரி, … Read more

தமிழ்நாட்டில் உள்ள 3 சதுப்புநில பகுதிகள் ராம்சார் பட்டியலில் சேர்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள 3 சதுப்புநில பகுதிகள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு தமிழக வனத்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து 13 சதுப்புநில பகுதிகளை ராம்சார் பட்டியலில் சேர்க்க கோரியிருந்த நிலையில்  பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, பிச்சாவரம் சதுப்பு நிலப்பகுதி, காஞ்சிபுரத்தில் உள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் சதுப்பு நிலங்களுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்ட சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை 54 -ஆக … Read more

இபிஎஸ் மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: ஆக.3-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.48,000 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, கடந்த 2018-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி … Read more

“வேலையும் கெடைக்கல..பணமும் திருப்பி தரல”.. கால்நடை துறை அதிகாரியின் ஆபிஸ் முன்பு போராட்டம்

கால்நடை துறையில் வேலை வாங்கித் தருவதாக 3 பேரிடம் தலா 50 ஆயிரம் பணம் பெற்று ஏமாற்றியதாக கால்நடை துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் 5 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூர் கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் சாந்தி. இவர் தற்போது குடியாத்தம் கல்லூர் கால்நடை மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாந்தி கடந்த 2019ஆம் ஆண்டு மாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசந்திரன், இவரது சகோதரர் பிரபுதேவா … Read more

பணத்தை தேடும் புதையல் வேட்டை… 30 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்க ‘லக்கி’தான்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக ஒரு சூறாவளியைப் போல இணையத்தை தாக்கி வருகிறது. கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி தருகிற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்களுக்கு விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுகிற கதைதான். அதனால்தான், அது சுவாரசியமானதாக இருக்கிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பணத்தை வேறு யாராவது கண்டுபிடிக்கும் முன் … Read more

புதுச்சேரியில் ஆக.10-ல் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்: பேரவைக்குள் பதாகை, பேனருக்கு தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 10-ல் துணைநிலை ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. பேரவைக்குள் பதாகைகள், பேனர்கள் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது என்று பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேரவைத் தலைவர் செல்வம் கூறியது: ”புதுவை 15-வது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபை அலுவல் நாட்களை முடிவு செய்யும். … Read more

"ஒரே இரவில் அனைத்தையும் மாற்றிவிட இயலாது" – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வனத்திற்குள் வீசிச் செல்லும் போது, அப்பகுதி மக்களை மட்டும் எப்படி குற்றம் சாட்ட முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜட்கா எனும் நிறுவனத்தின் சார்பில் அங்கு பணியாற்றும் அவிஜித் மைக்கேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” கொடைக்கானல் சீராடும்கானல் பகுதியில் 3.77 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் கொடைக்கானல் பகுதி கழிவுகள் கொட்டப்படுகின்றன. காய்கறி சந்தை … Read more

Chess Olympiad Latest News: தமிழகம் வந்த ஒலிம்பியாட் ஜோதி; பா.ஜ.க-வினர் புறக்கணிப்பு

Chess Olympiad Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது. 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் … Read more

“குடும்ப பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி”… கடிதத்தை கைப்பற்றிய காவல்துறை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், தனியார் பி.பார்ம் கல்லூரி மாணவி, கல்லூரியின் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று காயமடைந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மாணவி எழுதியதாக கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதில், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என மாணவி எழுதிவைத்திருந்தாகத் தெரிகிறது. Source link