அதிர்ச்சியிலும், வேதனையிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை.!!

பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டி என தேமுதிக தலைவர் விஜயகாந்த தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பதும், தற்கொலைக்கு முயல்வது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில் திருவள்ளூரில் மற்றொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் … Read more

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: ” மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை தரக்கூடிய எத்தகைய இழிசெயல் நடந்தாலும், தமிழ்நாடு அரசு நிச்சயமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தி அதற்குரிய தண்டனையை நிச்சயமாகப் பெற்றுத்தரும். எந்த சூழலிலும் மாணவிகள் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்படக்கூடாது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். … Read more

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு பெண்ணின் தந்தையால் நேர்ந்த கொடூரம்

எட்டையபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவைச் சேர்ந்த முத்துக்குட்டி (50). ஏன்வரது மகள் ரேஸ்மா (20), இவர், கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜை (26) காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை … Read more

‘ஆர்டர்லி’ புகார்: நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க ஐகோட் உத்தரவு!

தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீஸாரை உடனே திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே இதுதொடப்பான வழக்கில் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று (ஜூலை 25) மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் குமரேசன் ஆஜராகி, “தமிழகத்தில் காவல்துறையில் உள்ள ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஏற்கெனவே இதுதொடர்பாக தக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார். … Read more

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

தேனி மாவட்டத்தில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள காட்டுநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜக்கன்(73). இவருடைய மகன் முருகேசன். இந்நிலையில், ஜக்கன் உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜக்கன், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

முன் விரோதத்தால் மர வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை!

தூத்துக்குடியில் முன்விரோதத்தால் மர வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார்கைது செய்தனர். செல்வகணேஷ் என்பவருக்கும் அண்ணாநகரை சேர்ந்த மகா கிருஷ்ணன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 பேரை கூலிக்கு வைத்து செல்வகணேஷ் வீட்டில் மகா கிருஷ்ணன் பெட்ரோல் குண்டு வீசியதாக சொல்லப்படுகிறது. Source link

இலங்கையில் இருந்து ரப்பர் படகில் கோடியக்கரைக்கு வந்த போலந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது

இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கோடியக்கரைக்கு ரப்பர் படகில் வந்த போலந்து நாட்டுக்காரரை போலீஸார் கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு மூணாங்காடு பகுதியில் நேற்று முன்தினம் காலை சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கியது. இதுகுறித்து மீனவர்கள் கொடுத்த தகவலின்பேரில், வேதாரண்யம் கடலோரக் காவல் குழும போலீஸார், தஞ்சை டிஐஜி கயல்விழி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் உளவுத் துறை போலீஸார் விரைந்து வந்து படகை கைப்பற்றி விசாரணை நடத்தினர். … Read more

கீழச்சேரி பள்ளி மாணவி தற்கொலை: வீடியோ பதிவுடன் தொடங்கியது உடற்கூராய்வு பணிகள்

கீழச்சேரி பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடற்கூராய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியின்போது எந்த இடையாறும் ஏற்படாமல் இருக்க, சுமார் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்களூர் பகுதியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியொருவர், மப்பேடு பகுதியை அடுத்த கீழச்சேரியிலுள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் அங்குள்ள விடுதியில் தூக்கிட்ட நிலையில் சக மாணவிகள் நேற்று கண்டறியப்பட்டார். உடன் … Read more

தமிழகத்தின் வளர்ச்சிக்கு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்தான் காரணம்? சபாநாயகர்  வைரல் வீடியோ

கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்தான் திராவிட மாடல் ஆட்சி நடைபெற முக்கிய காரணம் என்று சபாநாயகர் அப்பாவு பேசியது தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி, சபாநாய்கர் அப்பாவு மற்றும் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர், திருச்சியில் நடந்த கிருஸ்துவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு பேசியபோது, “ தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்துவ பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் இல்லையென்றால் தமிழ்நாடு பிகார் போல மாறியிருக்கும். … Read more

செஸ் ஒலிம்பியாட் முன்னிட்டு தமிழகத்தில் எந்தந்த மாவட்டங்களுக்கு, எத்தனை நாள் விடுமுறை.! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.!

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது, சென்னை அருகே மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.  இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா வரும் 28-ந்தேதி கோலாகலமாக நடக்கிறது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.  இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில்கொண்டு, வருகிற 28-ந்தேதி சென்னை, … Read more