குறிஞ்சிப்பாடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!!

கடலூர், குறிஞ்சிபாடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சிவசங்கரி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தீர்த்தனகிரி மதுரா T. கள்ளயங்குப்பம் கிராமம், பொட்ட கரைமேடு காலனியைச் சேர்ந்த ஜெயசங்கர் என்பவரின் மனைவி சிவசங்கரி (வயது 33) (23.07.22) பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் அவர்களது வீட்டில் உறங்கிக் கொண்டிந்தபோது, எதிர்பாராதவிதமாக வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் அடிப்பகுதி அவர்மீது இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற … Read more

வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில் பதுங்கி இருந்த போலந்து நாட்டவர் கைது.!

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில்  வந்து பதுங்கி இருந்த போலந்து நாட்டுக்காரரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படகு சீனா நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.  தோப்புத்துறையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது போலந்து நாட்டைச் சேர்ந்த வாத்திஸ்வாப்  என்பவரை பிடித்து விசாரித்த போது அந்த படகில் வந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் இலங்கயில் இருந்து வந்த அந்த நபர் … Read more

மரம் வளர்த்தால் இலவச மின்சாரம்: தமிழகமும் பின்பற்றலாம் ஜார்க்கண்ட் மாநில திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு

மரம் வளர்த்தால் இலவச மின்சாரம்: தமிழகமும் பின்பற்ற வேண்டிய ஜார்க்கண்ட் மாநிலத்தின் திட்டம்: ராமதாஸ் மரம் வளர்த்தால் இலவச மின்சாரம் என்ற ஜார்க்கண்ட் மாநிலத்தின் திட்டத்தை தமிழகமும் பின்பற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்றுதனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”ஜார்க்கண்ட் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்திருக்கிறார். சுற்றுச்சூழலை காக்க பசுமைப்போர்வையை … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: மோடி வருகை முழு நிகழ்ச்சி நிரல்

PM Modi attends Chess Olympiad opening ceremony in Chennai: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துக் கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார் பிரதமர் மோடி. சர்வதேச 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதில் 188 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட … Read more

மினி வேன் மீது அதிவேகமாக வந்த கார் மோதி 3 பேர் உயிரிழப்பு..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மினி வேன் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இருக்கன்குடி பகுதியில் சாமி கும்பிட்டுவிட்டு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கழுவன்பொட்டல் கிராமத்திற்கு 15 பேருடன் சென்று கொண்டிருந்த மினி வேன் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சாலையோர ஓடையில் விழுந்த மினி வேனில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த … Read more

வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்றதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க ஏக்கம் தீர்ந்துள்ளது. நீரஜ் சோப்ராவுக்கு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ அமெரிக்காவின் … Read more

பெண்கள் கட்டாயம் ‘ப்ரா’ அணிய வேண்டுமா? மருத்துவம் கூறுவது என்ன?

பொதுவாக பெண்கள் ஆடை, ஆபரணங்கள் மற்றும் அணிகலன்கள் விரும்பியாகவே இருப்பார்கள். தனது உடல்வாகுக்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டும் என அக்கறை காட்டுவார்கள்.அந்த வகையில் தங்களின் ‘ப்ரா’ உள்ளிட்ட உள்ளாடைகளிலும் சிறப்பு கவனம் செலுத்துவார்கள். ஏனெனில் ஆடை மிகச் சரியாக இருந்தாலும், உள்ளாடை தேர்வு சரியாக அமையாவிட்டால் சிக்கல்தான். இன்றைய காலகட்டத்தில் பெண்களின் ப்ராக்கள் சந்தைகளில் நிரம்பி வழிகின்றன. புதுபுது மாடல்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. பேடு வைக்கப்பட்ட ப்ராக்கள், பேடு இல்லாத,, வயர் ப்ராக்கள் என … Read more

நாளை மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் இசைஞானி இளையராஜா.!

விளையாட்டு, கலை, இலக்கியம் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பதவியேற்றுக் கொண்டனர்.  இந்த வகையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிரபல இசைஞானி இளையராஜா அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றதால் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க முடியவில்லை.  இந்த நிலையில், மாநிலங்களவை நியமன உறுப்பினராக … Read more