தஞ்சை கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகளுக்கு பாதிப்பு இல்லை: நுகர்பொருள் வாணிபக் கழகம் விளக்கம்

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் சுமார் 6 ஆயிரத்து 933 டன் நெல் இருப்பு வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழையால் நெல் மூட்டைகள் நனைந்துவிட்டது என்று சில பத்திரிகைகளில் … Read more

தி.மலையில் கிராம மக்களை ஏமாற்றி பணம், நகை மோசடி: 4 பெண்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார்

தி.மலை: திருவண்ணாமலையில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கடனாக பெற்று ஏமாற்றி வந்த 4 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்கள் 100-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து தங்களுக்கு வங்கியில் இருந்து ரூ.40 கோடிக்கு மேல் பணம் வர வேண்டி உள்ளதாக கூறி பொதுமக்களிடம் கைவரிசை காட்டியுள்ளனர். தங்களுக்கு பணம் மற்றும் நகைகளை … Read more

'நினைவாலே சிலை செய்து உங்களுக்காக வைத்தேன்' – தாய்க்கு சிலை வைத்த தனயன்

தாய் மீது இருந்த பாசத்தால் உயிரிழந்த தாயின் நினைவாக வீட்டின் முன்பாக கொத்தனார் மகன் சிலை வைத்துள்ளார். குமரி மாவட்டம் அடயாமடை பகுதியைச் சேர்ந்தவர்கள் சோமன் – கனகபாய் தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்; உள்ள நிலையில், மூத்த மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், தம்பதியர் இருவரும் இவர்களது இளைய மகன் மத்தேயுவுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் மத்தேயு, நோய் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த தனது தாய் தந்தையை பேணி காத்து … Read more

அதிமுக அலுவலக மோதல் தொடர்பான 4 வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பான 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், சீல் அகற்றப்பட்டு இபிஎஸ் வசம் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இதன் பிறகு, மோதல் சம்பவம் தொடர்பாக அதிமுக … Read more

எப்படி அரசியல் பண்ணுவது யோசிப்பது நான் இல்ல: பாஜக தலைவர் அண்ணாமலை பதற்றம்

சென்னை: இதை எப்படி அரசியல் பண்ணுவது யோசித்துக் கொண்டிருக்கிறேன்…” என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு  அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினரோடு ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உட்பட 5க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த சட்டமன்ற … Read more

திருச்சி அருகே பள்ளி வேன், பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

திருச்சி: திருச்சி, ஶ்ரீரங்கம் அருகே பள்ளி வேன், பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 3 மாணவர்கள் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைய வேண்டுமா ? 7 பேர் கொண்ட குழு அமைக்கிறோம்: அன்புமணி ராமதாஸ்  

ஜி.கே. மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து, பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மக்களின் எதிர்ப்புகளை ஆய்வு செய்ய உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம்,  அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகள் எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரந்தூர் … Read more

70-வது பிறந்தநாள் கொண்டாட்டம் | தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்: ஆளுநர் தமிழிசை, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளையொட்டி கட்சித் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அவருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து ம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகாலை முதலே தலைமை அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர். பகல் 12 மணி அளவில் விஜயகாந்த் வந்தார். … Read more

கால்சென்டர் அமைத்து பொதுமக்களிடம் பல லட்சம் மோசடி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அபிராமி நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் மணிகண்டன்(36). மரவாடியில் கூலி வேலை பார்க்கும் இவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் தனியார் நிதி நிறுவனத்தில் (மகேந்திரா பைனான்ஸ்) இருந்து பாண்டிச்சேரியை சேர்ந்த சுந்தரபாண்டியன் என்று செல்பொனில் தொடர்பு கொண்ட நபர் ரூ.2 லட்சம் தனிநபர் கடன் தருவதாக கூறியுள்ளார். லோன் பெறுவதற்கு முதலில் லோன் பிராசஸிங்குக்கு இன்ஸியல் தொகையாக ரூ.8000-ஐ வங்கிக்கணக்கில் செலுத்தச் சொல்லியுள்ளார். மணிகண்டன் பணம் அனுப்பியதைத் தொடர்ந்து மறுநாள் ரூ.7340 … Read more

மக்கள் கோரிக்கைகளை துரிதமாக நடைமுறை படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் அறிவுறுத்தல்

தஞ்சை: தஞ்சாவூரில் மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் உஷா புன்னியமூர்த்தி தலைமையில் துணை தலைவர் முத்துச்செல்வன், ஊராட்சி செயலர் முன்னிலையில் நேற்று காலை பனகல் கட்டடத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கூறினார். இதில் ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் கூறியதாவது: அனைத்து புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்து ஆணையர்களுக்கும் வலிவுறுத்தினர். மேலும் அடுத்த கூட்டத்தில் … Read more