விமானத்தைப் போல ரயில் சேவையையும் தனியாருக்கு கொடுக்க முயற்சி: தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

SRMU condemns centre plans giving Railway to private: திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்கத்தின் தொடர்வண்டி மேலாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அந்த சங்கத்தின் தலைவர் ராஜாஸ்ரீதர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் செய்தியாளர்ளை சந்தித்து பேசியதாவது: மத்திய அரசின் ரயில்வே துறை தனியார் மயமாக்குதலை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை ரயில்வே ஊழியர்களிடம் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்.ஆர்.எம்.யூ., சங்கம் சார்பில் விழிப்புணர்வு … Read more

சேலம் | எரியாத தெருவிளக்கு மின் கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி நூதன போராட்டம்

சேலம்: சேலம் அருகே சன்னியாசிகுண்டு பகுதியில் எரியாத தெருவிளக்கு மின் கம்பத்தில் தீப்பந்தத்தை ஏற்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அருகே உள்ள சன்னியாசிகுண்டு பகுதிக்கு உட்பட்ட காட்டுமரகொட்டை கிராமத்தில் கடந்த பல மாதமாக தெரு விளக்கு எரியவில்லை. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவியர்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் அப்பகுதியில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று, அலுவலர்களிடம் … Read more

ஆட்டம் கண்ட எஸ்பிஐ பங்குகள்; 3 சதவீதம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமான நிலையிலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 3.13 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.514க்கு வணிகமாகின. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதலாம் காலாண்டு அறிக்கை வெளியானது. அதில் வங்கி 7 சதவீதம் நிகர லாபத்தை இழந்திருப்பது தெரியவந்தது.இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. திங்கள்கிழமை வர்த்தகத்தின் தொடக்கம் முதலே மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) எஸ்பிஐ பங்குகள் 3.13 சதவீதம் வரை … Read more

பெற்றோர் இறந்ததால் மன வேதனை அடைந்த பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை

திண்டுக்கல் மாவட்டத்தில் பெற்றோர் இறந்ததால் மன வேதனை அடைந்த பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் முத்துலாபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகள் நாகலெட்சுமி (44). இவருக்கு திருமணமாகவில்லை என்பதால் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் தந்தை சுந்தரராஜன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதையடுத்து நாகலட்சுமி, தனது தாயுடன் வசித்து வந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு நாகலட்சுமியின் தாயாருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அவரும் உயிரிழந்து உள்ளார்.  இதையடுத்து … Read more

இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா | வெற்றி பதக்கங்களை முதல்வர் வழங்குகிறார்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடக்கிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, போட்டியை தொடங்கிவைத்தார். தொடக்க விழாவில் தமிழர்களின் … Read more

பாக்யாவையே குற்றவாளி ஆக்கும் கோபி: திகைத்து நிற்கும் எழில்

Vijay TV Baakiyalakshmi serial new promo: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. கதையின் முக்கிய முடிச்சு அவிழ்ந்த நிலையிலும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையால் சுவாஸ்யமாக சென்று கொண்டிருக்கும் சீரியலுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர். கதையில் தன்னுடைய தோழி ராதிகாதான், தன் கணவன் கோபியின் காதலி என தெரிந்ததும் துடித்துப்போகிறாள் பாக்கியா. இதனையடுத்து, இருவரும் டைவர்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது ஒளிப்பரப்பாகி வருகின்றன. இதையும் படியுங்கள்: கணவர் … Read more

திருச்சி || சடலமாக மீட்கப்பட்ட இளைஞர், காவல்துறையினர் விசாரணை..!

இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பெருமாள்பாளையம் குரும்பர் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல பால்கறக்க சென்ற அவர் திரும்ப வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர். அப்போது, ஒட்டம்பட்டி ஆற்று வாரியிலுள்ள மரத்தில் தூக்கிட்டு சடலமாக தொங்குவதாக தெரியவந்தது. அதனை அடுத்து, அங்கு சென்ற அவர்கள் முருகானந்தத்தின் சடலத்தை கண்டு … Read more

'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு' ஆசிரியர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: 2021-22-ம் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக 386 ஆசிரியர்களை எவ்வாறுதேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் குழுவுக்கு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழுவும், மாநில அளவில் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்கவேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் மாவட்ட தேர்வுக் குழுவின்முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்யவேண்டும். மேலும், மாவட்ட தேர்வுக்குழுவின் … Read more

ரூ.200 வீதம் சேமித்தால் ரூ72,000 பென்ஷன்: மத்திய அரசின் இந்த ஸ்கீம் தெரியுமா?

நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி அரசு பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்தான் (Pradhan Mantri Shram Yogi Maan-dhan) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இந்தத் திட்டத்தின்படி அமைப்புசாரா திருமணமான தம்பதியர் மாதத்திற்கு ரூ.200 முதலீடு செய்வது மூலம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெற முடியும்.இந்தத் திட்டத்தில், இணைய அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆன வீட்டுத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மதிய உணவுத் தொழிலாளர்கள், தலை … Read more