‘நிதிக் காரணத்தால் காவல் துறையினர் மன அழுத்தம் போக்கும் திட்டம் நிறுத்தமா?’ – உயர் நீதிமன்றம் காட்டம்
மதுரை: நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி காவல் துறையினர் மன அழுத்தம் போக்கும் திட்டத்தை நிறுத்தியதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா 2-ம் அலையின் போது தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை முதலில் சாத்தான்குளம் போலீஸார் விசாரித்தனர். பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக விசாரித்து, விசாரணையை சிபிஐக்கு மாற்றியது. சிபிஐ … Read more