குள்ளஞ்சாவடி அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி எரிந்த  தனியார் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்

கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே தனியார் பேருந்து டிரான்ஸ்பார்மரில் மோதி எரிந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். எனினும், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. கடலூரில் இருந்து இன்று (ஜூலை 7) இரவு 7 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் விருத்தாச்சலம் புறப்பட்டு சென்றது. பேருந்து குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெரிய காட்டு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே பைக்கில் … Read more

சென்னையில் காற்று மாசு அளவு எவ்வளவு? கூடியதா குறைந்ததா?

இந்தியாவில் காற்று மாசு அதிகம் ஏற்படும் 10 நகரங்களில் ஒன்றான சென்னையில் இந்தாண்டு காற்றின் தரம் அதிகரித்துள்ளது. சிக்காகோ பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனம் இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக, சராசரி ஆயுளில் டெல்லியில் வசிப்பவர்களுக்கு 10 வருடமும் நாட்டின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 5 வருடமும் குறைவதாகவும் ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதற்கிடையே தேசிய சுத்தமான காற்று திட்டம் (National clean air programme) மூலம் இந்திய அரசு காற்று மாசுபாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும், காற்றில் … Read more

எறையூரில் 350 ஏக்கர் நிலம்… நரிக் குறவர்களுக்கு பட்டா கிடைக்குமா?

க.சண்முகவடிவேல், திருச்சி பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் நரிக்குறவர்கள் சமூகத்தினர் சாகுபடி செய்து வரும் நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி நரிக்குறவர்கள் நலச் சங்கத்தினர் திருச்சியில் அமைச்சர்களிடம் மனு அளித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு எறையூரில் 350 ஏக்கர் நிலம் பட்டா கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவரும், சீர் மரபினர் அமைப்பின் பொறுப்பாளருமான அய்யாக்கண்ணு தலைமையில் நரிக்குறவர் நல சங்க தலைவர் கணேசன், செயலாளர் நம்பியார், பொருளாளர் பாபு ஆகியோர் இன்று திருச்சி … Read more

காளி ஆவணப்படம் ஒளிபரப்பப்பட மாட்டாது – மன்னிப்பு கேட்டு கனடா நாட்டு இஸ்லாமிய கலை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வரும் ஆகா கான் அருங்காட்சியகம் அறிக்கை.!

கனடா நாட்டின் டொரன்டோ நகரில் ‘ஆகா கான்’ அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதன் முக்கிய செயல் இஸ்லாமிய கலை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வருவதுதான்.  இந்நிலையில், இந்த ‘ஆகா கான்’ அருங்காட்சியகத்தில் டொரன்டோ மெட்ரோ பாலிடன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இன, கலாச்சார பின்னணி உடைய மாணவர்கள் தயாரித்த 18 ஆவணப்படங்களை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த லீனா மணிமேகலையின் (கனடாவில் வசித்து வருபவர்) ‘காளி’ என்ற ஆவணப்படமும் இடம்பெற்றது. இந்த படத்தில் இந்து கடவுளை இழிவுபடுத்தும் வகையில் … Read more

கட்டுப்பாட்டை இழந்து மின்மாற்றியில் மோதிய பேருந்து தீக்கிரையாகி விபத்து.!

கடலூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்த நிலையில், விபத்துக்குள்ளான பேருந்து தீக்கிரையானது. விருத்தாச்சலத்திற்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து குள்ளஞ்சாவடி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் வந்த நிலையில், அதனை இடித்துச்சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்மாற்றி மீது மோதியது. இதனை அடுத்து பேருந்தில் தீப்பற்ற தொடங்கியபோது அதிலிருந்த பயணிகள் உடனடியாக வெளியேறினர். தீ மளமளவென பரவிய நிலையில், தீயணைப்பு … Read more

திட்டக்குடி அருகே சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 சிறுவர்கள் கைது

திட்டக்குடி: திட்டக்குடி அருகே சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 சிறுவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் அளித்த தகவல்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், அதே பள்ளியில் பிளஸ் 2 மாணவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மே 22-ம் தேதி அந்த மாணவர் தனது பிறந்தநாளை 10-ம் வகுப்பு மாணவியுடன் கொண்டாடியுள்ளார். அப்போது … Read more

அதிகரிக்கும் கொரோனா: இணை நோய்கள், கோவிட் தொற்றால் உயரும் வயது முதிர்ந்தோர் உயிரிழப்புகள்

தமிழகத்தில் 4-ம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை 2700-க்கும் மேல் உயர்ந்துள்ளது. எனவே தொற்றுடன் தனிமைப்படுத்தலில் இருப்போர் எண்ணிக்கையும் 19,000 ஐ நெருங்கியுள்ளது. பரவல் அதிகரிக்க அதிகரிக்க, கடந்த 3 மாதங்களாக இல்லாமல் இருந்த கோவிட் உயிரிழப்பு மீண்டும் ஏற்படத் தொடங்கியுள்ளது. மார்ச் 10-ம் தேதிக்குப் பிறகு, கடந்த ஜூன் 14-ம் தேதி தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட இளம்பெண், அதே நாளில் கோவிட் தொற்றால் … Read more

ஓங்கி அறைந்த வனிதா… விறுவிறுப்பை கூட்டும் ஜீ தமிழ் சீரியல்கள்

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் கடந்த வாரம் ஒரே நாளில் புதிதாக 3 சீரியல்கள் ஒளிபரப்பு தொடங்கியது. இந்த 3 சீரியல்களுமே தொடக்கத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமுதாவும் அன்னலட்சுமியும் ஜீதமிழில் கடந்த ஜூலை 4ந் தேதி முதல்  தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். ஓரிரு எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி உள்ள நிலையில் சீரியல் கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. அம்மாவை … Read more

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல் – மாநகராட்சி நிர்வாகம்.!

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம் என்றும் மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது.  இந்த நிலையில், சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  Source link

10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. சக மாணவர்கள் 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு பள்ளியில் படித்து வரும் அந்த மாணவி சக மாணவரின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார். அந்த மாணவருடன் அவர் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டிய சக மாணவர்கள் 3 பேர் அந்த மாணவியை தனியாக வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது பிற மாணவர்களுக்கும் தெரியவந்ததால் … Read more