ஆண்மையற்றவர் என்பதை மறைத்து 200 பவுன் நகை வாங்கி திருமணம் -வழக்குப்பதிய உத்தரவு

தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது ஐபிசி 417,420 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 4 வாரத்தில் விசாரணை செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இர்பானா ரஸ்வீன் தனது கணவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் சில பிரிவுகளை சேர்க்கக்கோரி மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், “மனுதாரரின் … Read more

திருச்சி விசிட்… மீண்டும் துப்பாக்கி எடுத்த அஜித்!

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், பிஸ்டல் மற்றும் ரைபிள் சுடும் போட்டி கடந்த 24-ம் தேதி தொடங்கியது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருச்சி மாநகர ரைபிள் கிளப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து … Read more

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்

சென்னை: சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. இந்தியாவின் மகத்தான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஜோதியை எடுத்துச் சென்றார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஜோதி நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்ட இன்று சென்னை வந்தது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இன்று நடைபெற்றது. மாநிலக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் வரை ஜோதி … Read more

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? – சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர – தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை நீடிக்கும் என்றும், சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது. ஆந்திர – தமிழக கடலோரப் பகுதிகலின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஜூலை 27) அடுத்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் … Read more

#தென்காசி || நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.! வியாபாரி உயிரிழப்பு.!

தென்காசியில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்துள்ளார். தென்காசி சங்கரன்கோவில் அருகே உள்ள நைனாபுரத்தைச் சேர்ந்தவர் பால் வியாபாரி மாடசாமி(32). இவருடைய மனைவி ராமசீதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மாடசாமி, இன்று காலை டீக்கடை ஒன்றிற்கு பால் ஊற்றிவிட்டு இரு சக்கர வாகனத்தில் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் … Read more

கோடநாடு வழக்கு | ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோடாநாடு கொலை , கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் இருந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சோலூர்மட்டம் காவல் … Read more

'மாணவிக்கு கொடுமைகள் நடந்ததற்கான சூழ்நிலை இருந்துள்ளது'-குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

கள்ளக்குறிச்சி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நேரில் விசாரணை மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் கள்ளக்குறிச்சி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் வீட்டில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கனு தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். இதில், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், … Read more

தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: சிற்றுண்டி மெனு முதல் குறிக்கோள் வரை – முழு விவரம்

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தைப் பார்ப்போம். திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்பதும் ஒன்று. மேலும், இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு … Read more

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: கைதான 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஐந்து பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி பள்ளியில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரில் சின்னசேலம் போலீஸார் … Read more