விளை நிலத்தில் காட்டுப் பன்றிக்காக வைத்த மின்வேலியில் சிக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு.!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வயல்வெளியில் காட்டுப் பன்றிக்காக வைத்த மின்வேலியில் சிக்கி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மானாமதுரையில் இருந்து மிளகனூர் செல்லும் பீசர்பட்டினம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ், தனது விளை நிலங்களில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க அனுமதியின்றி மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மிளகனூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில் முருகன், சிறுநீர் கழிக்க வயல்வெளியில் இறங்கிய போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  Source link

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற்ததில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதல்வர் பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், ‘‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் … Read more

சவாலில் வென்ற மாணவி: தலைமை ஆசிரியர் செய்த கௌரவம்

சவாலில் வென்ற ஐந்தாம் வகுப்பு மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த தலைமை ஆசிரியரின் வீடியோ வைரலாகி வருகிறது. திருவாரூர் நகர் பகுதியில் மெய்பொருள் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி, அங்கு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளை நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார் இந்நிலையில் தலைமை ஆசிரியர் சுமதி,  1 முதல் 20 வரையிலான வாய்ப்பாட்டை ஒப்பிக்கும் மாணவர்களை தனது இருக்கையில் அமர வைத்து, … Read more

பொடுகு வராமல் தடுக்கும், உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கும்.. பிரகாசமான தலைமுடிக்கு சூப்பர் ஹேர் மாஸ்க் இங்கே!

நாம் அனைவரும் பளபளப்பான, வலுவான முடிக்கு ஆசைப்படுகிறோம். ஆனால் அதை ஒரே இரவில் அடைய முடியாது. அதற்கு, ஒருவர் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும், மேலும் முடி எப்போதும் நீரேற்றமாகவும், எல்லா நேரங்களிலும் ஊட்டமளிப்பதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, டீப் கண்டிஷனிங் ஹேர் மாஸ்க்குகளை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.  அதை நீங்கள் கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. சமையலறையில் கிடைக்கும் பொருட்களிலிருந்து நீங்களே சொந்தமாக ஹேர் மாஸ்க் செய்யலாம் ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம், முடிக்கு அற்புதங்களைச் … Read more

#BigBreaking || உச்சநீதிமன்றம் பிறப்பித்த 3 தடை உத்தரவுகள்.. கதிகலங்கி நிற்கும் ஓபிஎஸ்.! கொண்டாட்டத்தில் எடப்பாடி.! முழு விவரம்.!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அதிமுக பொதுக்குழுவில் இடம் பெற்றுள்ள 10க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனர்.  இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று காலை தொடங்கியது. அதில், உட்கட்சி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது சட்டத்திற்கு எதிரானது என்று ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.  அப்போது நீதிபதிகள், “சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் எடுத்துக் கொள்ள … Read more

தேங்காய் விலை வீழ்ச்சியால் 2 ஏக்கரில் இருந்த 143 தென்னை மரங்கள் வெட்டி அழிப்பு: தஞ்சை விவசாயி விரக்தி

தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டதால் மனமுடைந்த விவசாயி ஒருவர், தனது 2 ஏக்கரில் இருந்த 143 தென்னை மரங்களை வெட்டி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழதிருப்பூந்துருந்தி பகுதியைச் சேர்ந்தவர் என்.ராமலிங்கம்(57). இவர் கண்டியூரில் உள்ள தனக்குச் சொந்தமான 2 ஏக்கரில் தென்னந்தோப்பு வைத்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக தேங்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் வேதனையடைந்த அவர், தனது தோப்பில் இருந்த 143 தென்னை மரங்களையும் வெட்டி அழிக்கும்பணியில் ஈடுபட்டுள்ளார். … Read more

கடலூர்: 15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

15 வயது சிறுமியுடன் 28 வயது இளைஞருக்கு நடக்க இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, விருத்தாசலம் அடுத்த படுகளானத்தம் கிராமத்தைச் சேர்ந்த வீர தமிழன் (28) என்வருடன் இன்று காலை நல்லூரில் உள்ள வில்வனேஸ்வரன் ஆலயத்தில் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில், தகவலின் பேரில் அங்கு சென்ற சமூக நலத்துறையினர் நடக்க இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இது குறித்து ஆவினன்குடி காவல் … Read more

சென்னையில் இந்த பகுதிகளில் இன்று (ஜூலை:6) மின்வெட்டு!

Chennai power disruption July 6, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். சென்னையின் தாம்பரம், கிண்டி, அடையாறு, ஐடி காரிடார், போரூர், கே.கே.நகர், அம்பத்தூர், மாதவரம், ஆவடி, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் … Read more

இரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் அதிகாரபூர்வ இணையதளத்தில் பொறியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ, பட்டதாரி, பி.இ, பி.டெக் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கொச்சின் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெ பணியின் பெயர் : வேலையாட்கள் கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ … Read more

சுமார் 418 வருடங்களுக்கு பின் திருவட்டார் ஆதிகேசவர் கோவிலில் கும்பாபிஷேக விழா..!

சுமார் 418 வருடங்களுக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவர் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலும் உறையூர் வெக்காளியம்மன் கோவிலிலும் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதிட கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. திருவாரூர் குமரக்கடவுள் ஆலயத்திலும், நெல்லை வண்ணாரப் … Read more