திருப்பூரில் கூலிப்படையை ஏவி மகனை கொலை செய்த தந்தை கைது.!

திருப்பூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக கூலிப்படை ஏவி மகனை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.  முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த 28ந்தேதி நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பாலசுப்பிரமணியத்தின் தந்தை உள்பட 2பேரை கைது செய்தனர். விசாரணையில் பாலசுப்பிரமணியம் மதுவுக்கு அடிமையாகி பணத்தை கண்டபடி செலவு செய்ததால், மகளுக்கு சொத்து … Read more

பழனிசாமியை கண்டித்து கொளத்தூரில் ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்

சென்னை: முன்னாள் முதல்வர் பழனிசாமியை கண்டித்து, கொளத்தூரில் ஓபிஎஸ் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கொளத்தூர் அகரம் சந்திப்புப் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அதிமுக இளைஞரணி வடசென்னை மாவட்டச் செயலாளர் கொளத்தூர்கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பழனிசாமியைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், பழனிசாமிக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை … Read more

பொள்ளாச்சி: ஹாஸ்பிடலில் சிசிடிவி இல்லை; ஆனாலும் அதிரடி காட்டி குழந்தையை மீட்ட போலீஸ்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 22 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொடுவாயூரில் தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டுள்ளனர். தொடர்ந்து, குழந்தையை கடத்திய பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த யூனிஸ், திவ்யபாரதி தம்பதியினரின் பிறந்த நான்கு நாட்களேயான பெண் குழந்தையை நேற்று அதிகாலை நான்கு மணி அளவில் மர்ம நபர்கள் கடத்தியுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவை … Read more

சேப்பங்கிழங்கு.. இது ஏன் இயற்கையின் அற்புதம் தெரியுமா?

சேப்பங்கிழங்கு சுவையானது மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, மெக்னீசியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இயற்கையின் இந்த அற்புத பரிசு நல்ல சுவையை மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் உங்கள் தட்டில் கொண்டு வருகிறது.  இதை ஒப்புக்கொண்ட ஊட்டச்சத்து நிபுணர் ரச்சனா அகர்வால், “சேப்பங்கிழங்கை குறைந்த அளவில் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க மிகவும் நல்லது. இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க … Read more

அதிமுக பொதுக்குழு நடைபெறுமா.? இன்று நடக்கப்போகும் திருப்பம்.. பரபரப்பில் அதிமுகவினர்.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.  கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் நியமிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவால் … Read more

பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கிவிட்டு 5 வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள்.!

வேலூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கிவிட்டு 5 வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொரப்பாடி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அவரது தாயார் அம்சாவை சரமாரியாக தாக்கிவிட்டு மர்மநபர்கள் குழந்தையை கடத்திச் சென்றனர். தனது கணவர் ரவி யாதாவ் தான் ஆள் வைத்து … Read more

பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சியால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: வெங்கம்பாக்கம் அரசுப் பள்ளியில் இடநெருக்கடி

கல்பாக்கம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை ஏளிய மாணவர்களுக்கு ஞானம் தரும் போதிமரமாக இருக்கிறது வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி. 25 ஆசிரியர்களைக் கொண்டு சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு அறிவை புகட்டும் அரும்பணியை செய்து வருகிறது. நடந்து முடிந்த பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்ற 113 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். செங்கல்பட்டு மாவட்ட அளவில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஒரே அரசுப்பள்ளி என்ற சாதனையை நிகழ்த்தியது. இதேபோல் … Read more

நீ எந்த ஏரியா?- மெரினாவில் போட்டோகிராபர் மீது தாக்குதல் நடத்திய சிறுவர்கள்

மெரினா கடற்கரையில் திருமண போட்டோஷூட் நடத்திய போட்டோகிராபரை திடீரென தகராறு செய்து சிலர் வெட்டியுள்ளனர். மேலும் நடைபயிற்சி சென்ற பொதுமக்களை அவர்கள் ஆயுதங்களுடன் மிரட்டியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளது காவல்துறை. சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் இளமாறன் (வயது 23). இவர் திருமண நிகழ்ச்சிகளுக்கு போட்டோஷூட் எடுக்கும் தொழில் செய்து வருகிறார். … Read more

இடத்தை வழங்குங்கள்… கமல்ஹாசனுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ்

மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 61 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. தற்போது சென்னையில் களங்கரை விளக்கம் பகுதி முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மெட்ரோ ரயில் பாதை ஆழ்வார்பேட்டை வழியாக செல்கிறது. இதனால், மெட்ரோ ரயில் பணிகளுக்காக அப்பகுதியில் … Read more

சென்னையில் இன்று தொழில் முதலீட்டாளர் மாநாடு.. 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு முதலீடு மாநாடு என்ற பெயரில் அவ்வப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது. இதனுடைய முதலமைச்சரின் மு க ஸ்டாலின் துபாய், அபிதாபி ஆகிய நாடுகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து வந்தார்.  இந்நிலையில், தமிழக அரசு சார்பில் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இன்று காலை 10 மணிக்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 60 புத்துணர்வு … Read more