ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்: பொள்ளாச்சி ஜெயராமன்
திருப்பூர்: “வரும் ஜூலை 11-ம் தேதி , நிச்சயமாக ஒரே தலைமையாக அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மூலம் ஏகோபித்து ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், திமுகவை எதிர்க்கின்ற வல்லமை படைத்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்” என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். திருப்பூர் மாநகர அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். … Read more