போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம்: ஆக.3-ல் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ஆக.3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 கட்டங்களாக நடந்துள்ளன. இறுதியாக கடந்த 11-ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தொழிற்சங்கத்தினரின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான … Read more

தன்பால் உறவில் இருந்த பெண்ணை கடத்திய குடும்பம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு

குடும்பத்தினரால் கடத்தப்பட்ட பெண் 21 வயது பூர்த்தியடைந்தவர் என்பதால், அவரது விருப்பப்படி செல்ல அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த ஆணாக மாறிய பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,  எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தோம். கடந்த 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு … Read more

Tamil News Live Update: அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை: இ.பி.எஸ் தரப்புக்கு அழைப்பு!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அணி வெற்றி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் … Read more

மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினம்.!!

முத்துலட்சுமி ரெட்டி : மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார். அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றார். இந்திய மாதர் சங்கத்தை தொடங்கி வைத்தவர் இவர்தான். மேலும் சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ஆவார். மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர்தான். தற்போது … Read more

'வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கை ரீதியான கூட்டணி' – சலசலப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி

தமிழகத்தில் திமுக கூட்டணி தொடரும். இது வெறும் தேர்தலுக்காக அமைந்த கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மலையாள ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாகப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் திமுக கூட்டணி தொடரும். இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி” என்று கூறினார். முன்னதாக செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். … Read more

சாலையில் அச்சமின்றி சாரை பாம்பை விழுங்கிய ராஜ நாகம் – வைரல் வீடியோ

கூடலூர் அருகே சாலையில் சென்று சாரை பாம்பை கொன்று விழுங்கிக் கொண்டிருந்த ராஜ நாகத்தை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் பசுமைமாறா காடுகள் அதிக அளவில் உள்ளன. இந்த சூழல் ராஜ நாகங்கள் வாழ்வதற்கு ஏற்ற காலநிலையாக உள்ளது. அதன்படி கூடலூர் மற்றும் பந்தலூரில் ராஜ நாகங்கள் அதிக அளவில் வாழ்கின்றன. இந்த நிலையில் கூடலூரில் இருந்து கீழ் நாடுகாணி வழியாக கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்குச் செல்லும் … Read more

தேனி || விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை

தேனி மாவட்டத்தில் விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள உப்புத்துரை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வெயில்முத்து(48).  இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த வெயில்முத்து தற்கொலை செய்து கொள்வதற்காக நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து வெயில்முத்துவை மீட்டு சிகிச்சைக்காக கடமலைக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வெயில்முத்து அங்கு சிகிச்சை பலனின்றி … Read more

பழமைவாதங்களை புறந்தள்ளி மாணவர்கள் பகுத்தறிவு பாதையில் செல்ல வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: மாணவர்கள் பழமைவாத கருத்துகளை புறந்தள்ளி, பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தின் விவேகானந்தர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு ஆளுநரும், பல்கலை. வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். முதன்மை விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்கலை. அளவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 69மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள், சான்றிதழ்களை நேரடியாக வழங்கினார். இந்த விழாவின் மூலம் 1,813 … Read more

அமெரிக்காவில் மாப்பிள்ளை… குமரியில் மணப்பெண்… வீடியோ கான்ஃபரன்ஸ் திருமணத்திற்கு ஐகோர்ட் அனுமதி!

Madurai High Court Tamil News: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வம்சி சுதர்ஷினி. இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இந்தியாவைச் சேர்ந்த ராகுல் எல் மது, தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். இவரும் நானும் பழகினோம். தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். இதற்கு எங்கள் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாங்கள் இருவரும் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள். நாங்கள் இங்குள்ள சிறப்பு திருமணச்சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள … Read more

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி, தந்தை, 2 மகன்கள் பலி

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி, தந்தை, 2 மகன்கள் பலி சட்டவிரோத முயல் வேட்டைக்கு சென்றபோது பரிதாபம் மின்வேலியில் சிக்கி பலியான மூவரில் ஒருவர் இராணுவ வீரர் விருதுநகர் மாவட்டம் திருச்சூழி ஒன்றியத்துக்கு உட்பட்ட முகவூர் கிராமத்தைச் சேர்ந்த தந்தை, அவரது 2 மகன்கள், மின்வேலியில் சிக்கி பலி சிவகங்கை மாவட்ட எல்லை அருகே முயல் வேட்டைக்கு சென்றபோது, காட்டுப் பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி பலி முகவூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், அவரது மகன்கள் அஜீத், சுகந்திரபாண்டி … Read more