ஒற்றைத் தலைமை பிரச்னை; பா.ஜ.க தலையீடு இல்லை: ஜெயக்குமார் உறுதி

Former AIADMK minister D.Jeyakumar Tamil News: அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் (ஜூன் 23ம் தேதி) சென்னையில் உள்ள வனகரத்தில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர்களால் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு பேசிய அவர் வருகிற ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால், இது சட்ட விரோதமானது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கூறியுள்ளனர். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைன் … Read more

#காஞ்சிபுரம் || தொழிற்சாலையில் கிரேன் மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு.!

காஞ்சிபுரத்தில் தொழிற்சாலையில் கிரேன் மோதியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோரோல் சிங். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது கோரோல் சிங் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த கிரேன் கோரோல் சிங் மீது மோதி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த கோரோல் … Read more

“புதியவகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடிய வீரியமுடையது, ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் குடும்பத்தில் அனைவருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு” – அமைச்சர் மா.சு

தற்போது பரவக்கூடிய பிஏ 4, பிஏ 5 வகை தொற்று மிக வேகமாக பரவக்கூடிய அளவுக்கு வீரியமுடையதால், அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் ஏகாட்டூரில் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது பரவக்கூடிய பிஏ 4, பிஏ 5 வகை தொற்று மிக வேகமாக பரவக்கூடிய அளவுக்கு வீரியமுடையது என்றும், … Read more

திண்டுக்கல் அரசு மருத்துவமனை டீன் பணியிடை நீக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை டீன் விஜயகுமார் நேற்றுபணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகப் பணிபுரிந்தவர் டாக்டர் கே.விஜயகுமார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் முதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விஜயகுமார் இதற்கு முன்பு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி டீனாகப் பணிபுரிந்தார். அப்போது இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தன. இதன் மீதுவழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் ஜூன் 30-ம் … Read more

பறிமுதல் ஆன 1300 கிலோ கஞ்சா ஒரே நேரத்தில் அழிப்பு.. மாஸ் காட்டிய சென்னை கமிஷனர்!

சென்னை பெருநகர பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சா போதைபொருட்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டது.  செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் மருத்துவக்கழிவுகளை எரியூட்டும் பகுதியில் சென்னை பெருநகர பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் 37 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சாவை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வடக்குமண்டல இணை இயக்குநர் ரம்யா பாரதி ஆகியோர் முன்னிலையில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை அழித்தனர். … Read more

பொறியியல் சேர்க்கை; குறைந்த கட் ஆஃப்-க்கும் டாப் காலேஜ் கிடைக்கும்; எப்படி?

Tamilnadu Engineering Admission 2022 low cut off also get top colleges: பிளஸ் 2வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து, கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக உள்ளவர்களும் பொறியியல் படிப்புகளுக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு தமிழகத்தின் டாப் கல்லூரிகளிலே இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் இடையே சற்று குழப்பம் இருக்கும். … Read more

இரட்டை இலை சின்னதுக்கே ஆப்பு….? இது என்ன புது டிவிஸ்ட்டா இருக்கே.. பீதியில் அதிமுகவினர்.!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் ஒரு ஒற்றை தலைமை வரவேண்டும் என்ற குரல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் அந்த ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக முழு கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும் என்றும் பெரும்பாலான தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏகோபித்த ஆதரவு இருந்ததால், பொதுக்குழு மொத்தமும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும் அதிமுகவின் … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.2.85 லட்சம் பணம் வழிப்பறி செய்த இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போல் நடித்து 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 15ம் தேதி புதுக்கோட்டையிலிருந்து தேவகோட்டைக்கு சென்று கொண்டிருந்த ஞான பாக்கியராஜ் என்பவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அவரிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்த நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.  Source link

நியாய விலை கடைகளை நவீனமாக மாற்ற நடவடிக்கை – முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

கோவை: தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாநில எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கோவைக்கு இன்று (ஜூன் 25-ம் தேதி ) மதியம் வந்தார். பீளமேடு புதூரில் உள்ள நியாய விலைக்கடை, ரயில் நிலையம் சாலையில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று … Read more

'இபிஎஸ்க்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுகிறேன்’ – மேலூரில் பேனரால் பரபரப்பு

ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டித்தேவன்வலசையில் ஒன்றிய கவுன்சிலர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளை செயல்பட்டதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அதேபோன்று, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக நகரச் செயலர் பாஸ்கரன் என்பவர் பேனர் வைத்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும் , அதிமுக வின் … Read more