21 வயது பெண் தன் பாலின உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மதுரை ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு

தன் பாலின உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்தால் கடத்தப்பட்ட பெண் 21 வயது பூர்த்தியடைந்தவர் என்பதால் அவரது விருப்பப்படி செல்ல அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த ஆணாக மாறிய பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தோம். கடந்த ஜூலை 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து … Read more

அதிமுகவை ஒன்றிணைக்க இறங்கிய முக்கிய புள்ளி.! வெளியான அறிவிப்பு.!!

அதிமுக தற்போது பல அணிகளாக பிரிந்துள்ளது. டிடிவி தினகரன் அணி, சசிகலா அணி, எடப்பாடி பழனிசாமி அணி, ஓ பன்னீர் செல்வம் அணி என அதிமுக பல அணிகளாக பிரிந்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் எம்ஜிஆர் ஆதரவாளர்கள் அணி ஒன்றும் உள்ளது.  இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்க அதிமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே சி பழனிசாமி இறங்கியுள்ளார். இதற்காக அவர் சென்னை வடபழனியில் பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள டிஜே … Read more

கள்ளக்குறிச்சி கலவரத்தால் இடமாற்றமான எஸ்.பி செய்த மனிதநேய உதவி..! பஹ்ரைனில் தவித்தவர் மீட்பு

கள்ளக்குறிச்சியில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்காக சென்று 31 வருடங்களாக சொந்த ஊருக்கு திரும்ப இயலாமல் தவித்த முதியவர் ஒருவர், அங்குள்ள அன்னை தமிழ் மன்றம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு சொந்த ஊருக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கலவரத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி எஸ்.பி செல்வக்குமாரின் மனிதநேய உதவி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கள்ளக்குறிச்சியை சேர்ந்த பச்சமுத்து என்பவர் 1991 ஆம் ஆண்டு வேலைக்காக பஹ்ரைன் நாட்டிற்கு சென்றார். அங்கு சென்ற பின்னர் பச்சமுத்து குடும்பத்தினரை … Read more

தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா

சென்னை: சென்னை, தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் 388 விமானப்படை வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களது பயிற்சி நிறைவு பெற்றதையடுத்து பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இம்மையத்தின் அதிகாரி ஏர் கமாடோர் விபுல் சிங் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அவர், “பயிற்சி முடித்த வீரர்கள் தங்களது பணியில் சிறந்து விளங்க பாடுபட வேண்டும். மேலும், அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களின் அறிவு மற்றும் திறன்களை … Read more

‘நீங்கதான் ரியல் சூப்பர் ஸ்டார்’ – பாதுகாப்பு கொடுத்த போலீஸாரை வீட்டுக்கு அழைத்து ரஜினி பாராட்டு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு தன்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலீஸாரை நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டுக்கு நேரில் அழைத்து ‘நீங்கதான் ரியல் சூப்பர் ஸ்டார்’ என்று பாராட்டினார். மாமல்லபுரத்தில் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 28-ம் தேதி மாலை நடைபெற்றது. போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு … Read more

நிர்வாண சேலஞ்ச்: விஜய் டி.வி பிரபலம் போட்டோவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஒருவர் பெட் ரூமில் நிவாண போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிர்வாணமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டிருந்த போட்டோஷூட் இணையத்தில் வைரலாக பரவியது. இந்த புகைப்படத்திற்கு ஒரு சாரார் தங்களது … Read more

20 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்து.! ஓட்டுநர் படுகாயம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் 20 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் படுகாயமடைந்துள்ளார். சென்னை மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் ஓட்டுனர் சாய் கிருஷ்ணன். இவர் நேற்று காலை தனது மினி லாரியில் மரப்பொருட்களை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் சாலையில், மினி லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு … Read more

சென்னையில் புலிகள் உச்சி மாநாடு: முதல்வர் தகவல்

சென்னை: சென்னையில், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு அக்டோபர் மாதம் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஜூலை 29-ம்தேதி உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள வங்கப் புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி, அதாவது 3,346 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. புலிகள் கணக்கெடுப்பு அடிப்படையில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி புலிகள் எண்ணிக்கை 2,967 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உலக புலிகள் தினத்தை முன்னிட்டு … Read more

அப்துல் கலாமின் அறிவியல் சிந்தனைகள் எல்லா தலைமுறைக்கும் ஏற்றவை – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

சென்னை: இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில், இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், மூத்த விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு இருவரும் பங்கேற்றனர். இக்கலந்துரையாடலில் அவர்கள் பேசியதாவது: பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கடந்த ஓராண்டு … Read more