“நான் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி” – விஜயகாந்த்

சென்னை: தான் விரைவில் பூரண நலன் பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொலைபேசி வாயிலாகவும், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் எனது உடல் நிலைகுறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தொலைபேசி வாயிலாக விசாரித்த பிரதமர் மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக எதிர்கட்சித் … Read more

தருமபுரி: சிறிய பூங்காவாக மாறியுள்ள சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம்

தருமபுரியில் சூழல் பூங்காவைப்போல் மாற்றப்பட்டுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அலுவலகத்தை பார்வையிட தினமும் ஏராளமானவர்கள் வருகை புரிந்து வருகின்றனர். விருந்தினரைபோல மூலிகை டீ, ஐஸ்கிரீம் கொடுத்து ஊழியர்களும் உபசரித்து வருகின்றனர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இயங்கும், தருமபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், முன்பு கிருஷ்ணகிரியில் அமைந்திருந்தது. இந்த அலுவலகம் மூலம் இரு மாவட்டங்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான பணிகள் நிர்வகிக்கப்பட்டன. பின்னர் 2016-ம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்துக்கென தனி அலுவலகம் பிரிக்கப்பட்டு தருமபுரியில் … Read more

தேங்காய்களை தரையில் உடைத்து போராட்டம்: பட்டுக்கோட்டை விவசாயிகள் கிளர்ச்சி

Novel agitation by coconut farmers in Pattukkottai: தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பாக தேங்காய்களை தரையில் போட்டு உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் தேங்காய் காய்க்க தொடங்கிய நிலையில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு … Read more

கழக தலைவனாக உருமாறும் உதயநிதி.?! உடன்பிறப்புகளை உசுப்பேற்றிய தகவல்.! 

நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். இவரது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தற்போது தமிழில் 90% படங்களை வாங்கி தமிழகத்தில் ரிலீஸ் செய்து வருகின்றது.  படத்திற்கான விளம்பரமும் பயங்கரமாக இருக்கிறது. படத்தின் வசூல் மற்றும் கணக்கு வழக்குகள் அனைத்தும் சரியாக இருப்பதால் மற்ற தயாரிப்பாளர்கள் அனைவருமே படத்தை விநியோகம் செய்ய ரெட் ஜெயன் மூவிஸை நாடி வருகின்றனர்.  அத்துடன் அவர் சினிமாவில் நடிக்கும் கதைகள் அனைத்துமே சரியாக … Read more

கோவையில் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்

கோவையில் பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவு முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென அறிவிப்பு தினந்தோறும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர் Source link

தமிழகத்தில் புதிதாக 1,382  பேருக்கு கரோனா; சென்னையில் 607 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 759, பெண்கள் 623 என மொத்தம் 1,382 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 607 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து, 66,872 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 22,169 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 617 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 1,359 … Read more

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் ஞாயிறன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் … Read more

சிலம்பம், கில்லி, நுங்கு வண்டி… பாரம்பரியத்தை மீட்க திருச்சியில் ஒரு முயற்சி!

Traditional event will held at Trichy on June 26: திருச்சி கிருஷ்ண மூர்த்தி நகர் ஜெகன் மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை ஜூன்-26-ம் தேதி பாரம்பரியம் காப்போம் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்த பாரம்பரியம் காப்போம் நிகழ்ச்சி பாரம்பரிய உணவுகள், பழங்கால சிறார் விளையாட்டுகள், பாரம்பரியக் கலைகள், பழங்கால பொருள்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை மீட்டெடுக்கும் விதமாக நடக்கவிருக்கின்றது. இதையும் படியுங்கள்: ‘ஓவரா ஆடாதீங்க; ஓட்ட நறுக்கி விடுவோம்’: திருச்சியில் போலீசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த … Read more

அம்பேத்கர் பெயரில் மாவட்டம் அமைக்க தீர்மானம்.. முதலமைருக்கு மனமார்ந்த நன்றி – விசிக தொல்.திருமாவளவன்.!

ஆந்திரா மாநிலத்தில் 13 மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக 26 மாவட்டங்களாக அம்மாநில அரசு பிரித்து செயல்படுத்தி வருகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரம் நகரை மையமாகக் கொண்டு கோணசீமா என்ற மாவட்டம் பிரிக்கப்பட்டது. அப்போது அதற்கு டாக்டர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். அந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த … Read more

லால்குடி அதிரடி | ரூ.1.5 கோடி நிதியிழப்பால் தச்சங்குறிச்சி கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் சொத்துகளை ஏலம் விட அறிவிப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள தச்சங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதால், சங்க முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 7 பேரின் அசையா சொத்துகளை ஏலம் விட கூட்டுறவுத் துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிராம அளவில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வைப்புக் கணக்கு, நிரந்தர வைப்பு, நகைக் கடன் மற்றும் பயிர்க் கடன் உள்ளிட்ட பிற கடன்கள் வழங்குதல், விவசாயிகளுக்குத் தேவையான உரம், பூச்சிக் … Read more