ஒற்றைத் தலைமை வேண்டாம்; ஜெயக்குமார் மீது நடவடிக்கை தேவை: ஓ.பி.எஸ் வீட்டில் கோவை செல்வராஜ் பேட்டி

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒற்றைத் தலைமை என்ற வார்த்தைக்கே இடமில்லை என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ஒற்றைத் தலைமை குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கட்சியில் நடவடிக்கை தேவை என்று வலியுறுத்திள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எழுந்த அதிமுகவின் … Read more

பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை.!!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத் துறை, மின்சாரத் … Read more

அதிமுக பொதுச் செயலர் பதவியை கைப்பற்ற ஓபிஎஸ், பழனிசாமி தீவிரம்

சென்னை: அதிமுக பொதுச் செயலர் பதவியைக் கைப்பற்ற ஓபிஎஸ், பழனிசாமி ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். இருவரிடமும் கட்சியின் மூத்த தலைவர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. 2017 முதல் இருவரிடையே பனிப்போர் இருந்தாலும், பெரிதாக பிரச்சினை எழவில்லை. இந்நிலையில், வரும் 23-ம் தேதிஅதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. கட்சிக்கு ஒற்றைத் தலைமை, மீண்டும்பொதுச் … Read more

'தலைவா வா தலைமையேற்க வா'- அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாக போஸ்டர்

திருவள்ளூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அதிமுக இரண்டாக பிரிந்தது. இதையடுத்து ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் இணைந்த நிலையில் அதிமுக தற்போது வரை இரட்டை தலைமையுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அதிமுகவிற்கு … Read more

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் திடீர் திருப்பம்.. துணை ஒருங்கிணைப்பாளர் அதிரடி பேட்டி.!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று முன் தினம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமையை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதனிடையே தமிழகம் முழுவதும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை தலைமை ஏற்க கோரி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.  இதனைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம், … Read more

Rasi Palan 16th June 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 16th June 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 16th June 2022: இன்றைய ராசி பலன், ஜூன் 16ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி அரசு பள்ளி தலைமையாசிரியர் உயிரிழப்பு..!

தஞ்சை மாவட்டத்தில் சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி அரசுப்பள்ளி தலைமையாசிரியர் உயிரிழந்தார். கும்பகோணம் அடுத்த தென்னூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க அரசு பள்ளி தலைமையாசிரியர் ராஜி வந்துள்ளார். அப்போது விலை உயர்ந்த இருசக்கரவாகனத்தில் அதிவேகமாக வந்த சிறுவனொருவன் ஆசிரியர் மீது மோதியுள்ளான். இதில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. வளரிளம் பருவத்தினர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது என காவல்துறை எச்சரித்த பின்னரும் இதுபோன்ற சம்பவங்கள் … Read more

கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகரின் இறப்பில் போலீஸுக்கு எந்த தொடர்பும் இல்லை: பிரேதப் பரிசோதனை அறிக்கையை காட்டி கூடுதல் ஆணையர் விளக்கம்

சென்னை: விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்ததற்கும், போலீஸாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பிரேதப்பரிசோதனை அறிக்கையை சுட்டிக்காட்டி கூடுதல் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையை அடுத்த செங்குன்றம், அலமாதியைச் சேர்ந்த குற்றப்பின்னணி கொண்டவர் ராஜசேகர் என்ற அப்பு (33). இவர் கடந்த12-ம் தேதி போலீஸ் விசாரணையின்போது மர்மமான முறையில்மரணம் அடைந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அடித்துக் கொலை செய்யப்பட்டதாக ராஜசேகர் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் … Read more

நடப்பவை எல்லாம் நன்மைக்கே! #MorningMotivation #Inspiration #PositiveVibes

ஒவ்வொரு நாணயத்துக்கும் இரு பக்கங்கள் இருப்பதை போலவே, நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் நல்லவை தீயவை என இருபக்கமுமே இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு தீயவற்றிலும், நன்மையும் ஒளிந்திருக்கும். வேப்பம்பூவிலும் சிறு தேன் துளி இருக்கும்! அந்தவகையில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே! இதை உணர்த்தும் ஒரு குட்டி ஸ்டோரி, இங்கே இந்தக் காணொளியில்! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

#BREAKING : குடியரசுத் தலைவர் தேர்தல் : எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் – தீர்மானம் நிறைவேற்றிய மம்தா பானர்ஜி.!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க  முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்த நிலையில், டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, இன்று டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு … Read more