தமிழகத்தில் குரூப் 4 தேர்வு: 7300 இடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி
சென்னை: நாளை மறுநாள் நடைபெறவுள்ள 7300 இடங்களுக்கான குரூப் 4 தேர்வை தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேர் எழுதவுள்ளனர். தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இளநிலை உதவியாளர், வரித் தண்டலர் நிலை-1, தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 7301 இடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. … Read more