‘6 மாதங்களாக வெற்றி பெற்றிருந்தாலும் சிறப்பாக விளையாடவில்லை’ -கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா

கடந்த 6 மாதங்களில் பல தொடர்களை வென்று இருந்தாலும் நான் சிறப்பாக விளையாடவில்லை, போட்டிகளில் மாற்றங்கள் மேற்கொள்வது குறித்த பயிற்சிகளை தற்போது பயிற்சியாளருடன் இணைந்து மாற்றங்களை மேற்கொண்டு வருகிறேன் என இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா புதிய தலைமுறைக்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் பி டீம் அணிக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரக்ஞானந்தா புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில்: “ஒலிம்பியாட் தொடரில் … Read more

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… வீடு இடிக்கும் வேலையா இருக்குமோ?

அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குட எதிரிவினையாற்றுபவர்கள் நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். நகைச்சுவை உணர்வு, நகைச்சுவைப் படம் பார்க்கும் பழக்கம், அரசியல் அறிவு, நாகரிகமான கிண்டலான வார்த்தைகள் இவை இருந்தால் போதும் நீங்களும் நல்ல அரசியல் மீம்ஸ் கிரியேட்டர்தான். நாகரிகமான அரசியல் மீம்ஸ்கள், கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும். அப்படி, சமூக ஊடகங்களில் இன்று கவனம் பெற்ற நல்ல அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம். நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “ஜனாதிபதி தேர்தலில் பொது … Read more

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ரவீந்திரநாத் எம்.பி அந்த ரகசியம் என்ன.?! சந்திப்பில் பேசப்பட்டது என்ன? 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி. முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த போது, திமுக ஆட்சியை பாராட்டியதாக அமைச்சர் துரைமுருகன் அம்பலப்படுத்தி விட்டார் என்று ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து தி.மு.க. கூட்டம் ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேசுவதுபோல உள்ள அந்த பதிவில், “நானும் முதல்வரும் அறையில் உட்கார்ந்து இருந்தோம். அப்போது அங்கு ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி. மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்தார்.  அவர் எம்.பி. என்பதால் வரச்சொல்லுங்கள் என்று முதல்வர் தெரிவித்தார். அவர் … Read more

பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த குழந்தையின் வீடியோ வைரல்

தமிழகத்தில் நேற்று முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கிய நிலையில், பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த குழந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியில் பள்ளி தொடங்கிய முதல் நாளில் ஏராளமான மாணவச் செல்வங்கள் ஆர்வத்தோடு பள்ளிக்கு சென்ற நிலையில், அரசு உதவி பெறும் குருகுலம் பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த குழந்தையின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சக பெற்றோரும் சிறுவனை ஆறுதல் படுத்த முயன்றனர். தொடர்ந்து, மழலை மொழியில் … Read more

புதுச்சேரி முதல்வரை தள்ளிவிட்ட விவகாரம்:  சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை தள்ளிவிட்ட விவகாரத்தில் தொடர்புடைய சப் – இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் தேரோட்டம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. விழாவில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எதிர்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே தேரோட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மாநில உள்துறை அமைச்சர் … Read more

’எனக்கு வாழப் பிடிக்கவில்லை.. லவ் யூ அம்மா’ – ரயில் முன் பாய்ந்த மாணவனின் உருக்கமான கடிதம்

ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை செய்த நிலையில் மாணவன் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் 2-வது ரெயில்வே கேட் அருகே 17வயது சிறுவன் ரெயிலில் அடிப்பட்டு சடலமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து ரெயிலில் அடிப்பட்டு இறந்த சிறுவன் யார் … Read more

திருமணத்தை நிறுத்திய விஜய் டிவி சீரியல் நடிகை… காரணம் இதுதானா?

சன்டிவியின கேளடி கண்மணி சீரியல் மூலம் பிரபலமானவர் திவ்யா கனேஷ். தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு. சுமங்கலி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த இவர். தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமுி சீரியலில் ஜெனிபர் என்ற ரோலில் நடித்து வருகிறார் இந்த சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இவருக்கு பிரபல திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ்க்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இருவரும் இணைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் … Read more

தேமுதிக ஆலோசனை கூட்டம்.! தக்கார் ம.சோ.விக்டர் ஆவணப்படம் வெளியீட்டு விழா.!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் உத்தரவுப்படி, பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் இன்று (14.06.2022) ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், உட்கட்சி தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவர் Dr.V.இளங்கோவன், கழக கொள்கைப்பரப்பு செயலாளர் அழகாபுரம்.R.மோகன்ராஜ்,Ex.MLA., கழக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி,Ex.MLA., ஏ.எஸ்.அக்பர் கலந்துகொண்டனர்.  மேலும் ஒரு அரசியல் செய்தி : … Read more

‘பார்வையாளர்கள், பொதுமக்கள் வாகனங்களுக்கு அனுமதி இல்லை’ – சென்னையில் திகைக்கவைத்த அறிவிப்பு பலகை

சென்னை: சென்னை மாநகராட்சி சாலைகளில் "பார்வையாளர்கள், பொதுமக்கள் வாகனங்களுக்கு அனுமதி இல்லை" என்று சாலையின் தொடக்கத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகள் என்று பிரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சாலைகளில் உரிய அனுமதி பெறாமல் குடியிருப்பு வாசிகள் இணைந்து ‘செக் போஸ்ட்’ அமைந்து உள்ளனர். இது போன்று சென்னை, புரசைவாக்கம் காந்தி அவென்யூ, ஈ.வெ.ரா பெரியார் … Read more

ஒற்றை தலைமையை நோக்கி அதிமுக – யார் அந்த ஒற்றைத் தலைவர்?

தாங்கள் தான் எதிர்க்கட்சி என்று பாஜக சொல்லிவரும் சூழ்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒற்றை தலைமையை நோக்கி செல்கிறது. இந்த நடவடிக்கை அதிமுகவுக்கு எந்த அளவிற்கு கைகொடுக்கும்? சட்டப்பேரவையில் 65 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்கட்சியாக இருக்கிறது அதிமுக. ஆனால் அவர்களது செயல்பாடு பிரதான எதிர்க்கட்சியாக இல்லை என்ற குறைபாடு அதிமுக தொண்டர்கள் மத்தியிலேயே உள்ளது. அதிமுகவின் இந்த செயல்பாடுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தீவிர முனைப்புக் காட்டுகிறது. பாஜக மாநிலத் தலைவர் … Read more