அத்துமீறலை வீடியோவுடன் அம்பலப்படுத்திய பெண் உயிரோடு எரித்துக் கொலை..! கடை உரிமையாளர் மனைவி செய்தது என்ன?

ஈரோடு மாவட்டம் பவானியில் டைல்ஸ் கடையில் வேலை பார்த்த பெண் ஊழியரை கர்ப்பிணியாக்கி கருக்கலைப்பு செய்த உரிமையாளரின் அத்துமீறலை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு பவானி கர்ணாபுரம் 5வது தெருவை சேர்ந்தவர் மலர். குழந்தை இல்லாததால் கணவருடன் கருத்து வேறுபாடு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வாழ்ந்த மலர் பவானியில் நவ நீதன் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் மற்றும் … Read more

கோயில் விழாக்களில் ஆடல், பாடலுக்கு அனுமதியில்லை: உயர் நீதிமன்றம் அதிரடி 

மதுரை: கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் 5 வாரம் கோடை விடுமுறை கால நீதிமன்றம் நடைபெற்றது. முதல் நான்கு கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு … Read more

தூத்துக்குடி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தள்ளு முள்ளு – நாற்காலி வீச்சால் பரபரப்பு

தூத்துக்குடி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தள்ளு முள்ளு, கூச்சல் குழப்பம், நாற்காலி வீச்சால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி வளசலன் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ பி சி வி. சண்முகம் பேசுகையில், ’காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்று பேசினால் மட்டும் போதாது, கட்சியை நாம் பலப்படுத்தவேண்டும் என்று பேசினார். அப்போது, மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவரும், மாநில பொதுக்குழு … Read more

கட்டாத நீச்சல் குளம்; இல்லாத தோட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு? திருச்சி மாநகராட்சி கொந்தளிப்பு

Fund allocation for water pool not constructed Trichy corporation fires out: திருச்சி மாநகராட்சி அவசரக் கூட்டம் மற்றும் 2022 -23 பட்ஜெட் விவாதக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி அலுவலக மாமன்றக் கூடத்தில்  நடந்தது.இதில் புதிய மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், துணை மேயர் திவ்யா உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற விவாதம் வருமாறு;- மதிவாணன் மண்டல குழு தலைவர் பேசுகையில் ;-பாதாள சாக்கடை திட்ட … Read more

மக்கள் நீதி மய்யம் வைத்த கோரிக்கை – அரசு தரப்பில் இருந்து வந்த அறிவிப்பு.!

நாளை முகூர்த்த தேதி என்பதால் சென்னையில் இருந்து வெளியூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று, போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு செல்வதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று அதிகளவில் பயணிகள் குவிந்ததால், பேருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டும், நாளை முகூர்த்த நாளை முன்னிட்டு, இன்று சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 300 விரைவு பேருந்துகள் உட்பட 2400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், தேவைப்பட்டால் மாநகர சென்னை மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக … Read more

தண்ணீர் பானையில் மாட்டிக் கொண்டு வெளியேவர முடியாமல் தவித்த சிறுவன் பத்திரமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே தண்ணீர் பானையில் மாட்டிக் கொண்டு வெளியேவர முடியாமல் தவித்த சிறுவனை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பெரியசெவலை கிராமத்தில் யஸ்வந்த் என்ற 3 வயது சிறுவன், வீட்டில் விளையாடிய போது பானைக்குள்ளே இறங்கிய நிலையில், அதில் சிக்கிக் கொண்டான். கால் முட்டி பானைக்குள் மாட்டிக் கொண்டு சிறுவன் வெளியே வர முடியாமல் தவித்த நிலையில், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த அவர்கள், பெரிய இரும்பு வெட்டும் கத்திரிக்கோல் மூலம் பானையை … Read more

மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது: முதல்வர் நாளை வழங்குகிறார் 

சென்னை: மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருதை நாளை முதல்வர் வழங்குகிறார். 2021-22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்விருது ஒவ்வோர் ஆண்டும் கருணாநிதி … Read more

திருட்டு வாகனத்தில் முதல்வர் கான்வாயை முந்த முயன்ற இளைஞர் கைது

சென்னையில் திருட்டு வாகனம் மூலம் முதல்வர் கான்வாயை முந்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மதியம் தலைமை செயலகத்திலிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அவரது கான்வாய் நேப்பியர் பாலத்தை வேகமாக கடந்து சென்றபோது திடீரென போலீஸ் பாதுகாப்பை மீறி எதிர் சாலையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கான்வாய் வாகனத்தை முந்த முயன்றிருக்கிறார். போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்தனர். அந்த நபர் ஓட்டி … Read more

இன்ப அதிர்ச்சியில் இருளர் இன மாணவ, மாணவிகள்; வீடு தேடி வந்து தஞ்சை ஆட்சியர் கொடுத்த சர்ப்ரைஸ்

Thanjavur collector provides community certificate to Irula community people: உரிய ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தங்களுக்கான உரிய இட ஒதுக்கீடு மற்றும் இதர சலுகைகளைப் பெற முடியாமல் இத்தனை ஆண்டு காலம் தவித்து வந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒன்னாம்சேத்தி கிராமத்தைச் சேர்ந்த இருளர் இன மக்களின் துயரைத் துடைக்கும் வகையில் அவ்வின குழந்தைகள் 10 பேருக்கு அவர்களது வீட்டிற்கே நேரில் சென்று ஜாதிச் சான்றிதழ் வழங்கி அசத்தியுள்ளார் மாவட்ட … Read more

சென்னை || இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களுக்கு அதிரடி இலவசத்திட்டம்.! வெளியானது அறிவிப்பு.!

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதன்படி, சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் 2022-2023 கல்வியாண்டில் மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2010-ம் ஆண்டு முதல் சென்னையை சேர்ந்த ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், ‘சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் … Read more