தந்தூரி சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு.. கெட்டுப்போன சிக்கன்.. உணவகங்களில் அதிரடி ரெய்டு..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சிக்கன் தந்தூரி சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருமுருகன் என்ற அந்த மாணவர் கடந்த 24ம் தேதி 5 ஸ்டார் எலைட் என்ற ஓட்டலில் சிக்கன் தந்தூரி, பிரைட் ரைஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். இதையடுத்து மாணவனுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மாணவன், கடந்த 29ம் தேதி உயிரிழந்தார். மாணவனின் தந்தை அளித்த … Read more

ஊழல் முறைகேடு செய்யவே புதிய மது ஆலைகளுக்கு அனுமதி: புதுச்சேரி அரசு மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: ஊழல் முறைகேடு செய்யவே புதிய மது தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி வழங்க உள்ளது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்று நடத்தி வந்த அந்தப்பத்திரிகைக்கு ரூ.90 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டதால், அந்தக்கடனை … Read more

அரியலூர்: கோயில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய அரசு ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அரியலூரில் போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போன நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் மின் நகர் 9வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் ராமச்சந்திரன், இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளையில் ஸ்டோர் கீப்பர் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊரான கீழநத்தம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஊர் திரும்பிய … Read more

விஜயகாந்த் பூர்வீக வீடு: இப்போ எப்படி இருக்கு தெரியுமா?

Tamil Cinema Actor Vijayakanth Native Place : தமிழ் திரையுலகில் கேப்டன் என்ற என்ற அடைமொழியுடன் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். நடிப்பு மட்டுமல்லாது தனது நல்ல குணத்திற்கும் பெயர் பெற்ற இவர், மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். ரஜினி கமல் ஆகிய இருவரும் பெரிய வெற்றிப்படங்கள் கொடுத்த காலத்தில் அவர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு திரைத்துறையில் வளர்ந்தவர் விஜயகாந்த். 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் … Read more

கள்ளகாதலை கண்டித்ததால் கள்ளகாதல் ஜோடி தற்கொலை.. திருப்பூர் அருகே பரபரப்பு..!

கள்ளகாதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் எருக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.  இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவருக்கும் நடராஜ் என்பவரின் மனைவி மாரியம்மாள் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறவே இருவரும் பழகி வந்துள்ளனர். இது இரு வீட்டாருக்கும் தெரியவரவே இருவரையும் பழக கூடாது என எச்சரித்துள்ளனர். இதனை அடுத்து, இருவரும் மாயமாகியுள்ளனர். இந்நிலையில், ஆணும், பெண்ணும் இறந்து கிடப்பதாக … Read more

திண்டுக்கலில் தகாத உறவை கண்டித்ததால் ஆண் நண்பரை வைத்து சொந்த தம்பியை வெட்டி கொலை செய்த பெண்.!

திண்டுக்கலில் தகாத உறவை கண்டித்ததால் ஆண் நண்பரை வைத்து உடன் பிறந்த தம்பியை வெட்டிவிட்டு, அதை மறைக்க விஷம் அருந்தியதாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். பாறைபட்டியை சேர்ந்த மனீஷா மற்றும் அவரது சகோதரி சீமாதேவி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.          Source link

மக்களுக்கு பயன் தரும் புதிய உத்திகள் எங்கிருந்தாலும் கொண்டு வாருங்கள்: துறை செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: “புதிய உத்திகள் எங்கிருந்தாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் என்றால், அவற்றை நம் மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்” என்று அரசுத் துறைச் செயலர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்த நிலையில், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசுத் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இரண்டாவது ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “நேற்றைய தினம் இதேபோன்று … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மாலை சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைப்பெறும் சந்திப்பில், மூத்த அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், சட்ட மசோதாக்களுக்கு விரைந்து அனுமதி தர வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பல்கலைக்கழக துணை வேந்தராக முதலமைச்சரை நியமனம் … Read more

இந்தியாவிற்குள் மீண்டும் நுழையும் டிக்டாக்… முக்கிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

TIK-TOK ReEntry: இந்திய சந்தைக்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் முயற்சியில் பைட் டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் வீடியோ பகிர்வு தளமான டிக்டாக் செயலிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் இந்திய சந்தைக்குள் என்ட்ரி கொடுத்திட, புதிய கூட்டாளர்களை பைட் டான்ஸ் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020 ஆம் ஆண்டில் டிக்டோக் உட்பட 59 செயலிகள் சீனாவுடன் பயனர் தரவைப் பகிர்ந்ததாகக் கூறி இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. … Read more

பா.ம.க. 2.0: தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  “என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நான் உங்களின் பாச மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். மருத்துவர் அய்யா அவர்களுக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு, பாசம், மரியாதை, நம்பிக்கை அனைத்துக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்றிருந்தாலும் என்னைப் … Read more