இலங்கை நெருக்கடி..  இந்தியாவின் சர்க்கரை மற்றும் வெங்காய ஏற்றுமதி பாதிப்பு

இலங்கை சர்க்கரை, திராட்சை மற்றும் வெங்காயம் போன்ற விவசாய பொருட்களுக்கான முக்கிய இடமாகும். இந்நிலையில் அங்கு நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி, இந்திய வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. பொருளாதார நெருக்கடி வெடித்ததால், பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் வர்த்தகத்தை நிறுத்தி வைத்துள்ளனர், சிலர் தங்களுக்கு வரவேண்டிய பணம் இன்னும் செலுத்தாமல் இருப்பதாக புகார் கூறினர். 2021-22 நிதியாண்டில் இலங்கை நாட்டிற்கான இந்தியாவின் ஏற்றுமதி பில்  5,208.3 மில்லியன் டாலராக இருந்தது – இது ஒவ்வொரு ஆண்டுக்கும் 65 சதவீத வளர்ச்சியாகும். … Read more

பாதியில் தவித்த பயணிகள்.. அரசுப் பேருந்து கண்ணாடியை உடைக்கச் சொன்ன ஓட்டுனர்..! போலீஸ் வந்ததால் பயணம் தொடர்ந்தது

சிதம்பரத்திலிருந்து ஆண்டிமடம் செல்லும் பேருந்து சேத்தியாத்தோப்போடு நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆண்டிமடம் செல்லும் வழியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பயணிகள், பேருந்தை சிறைப்பிடித்து உரிமைக்குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக ஆண்டிமடம் செல்லும் அரசுப் பேருந்து சம்பவத்தன்று இரவு 10.30 மணி அளவில் சேத்தியாதோப்பு வந்தது. அந்தப் பேருந்து ஆண்டிமடம் செல்லாமல் மீண்டும் சிதம்பரம் செல்ல முயன்றது. இதனால் ஆண்டிமடம் செல்லும் வழியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த … Read more

அதிமுக அலுவலக சீலை அகற்றக் கோரி இபிஎஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை

சென்னை: ஒற்றைத் தலைமை பிரச்சினையால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி, வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார். இந்த சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல் செய்தனர். … Read more

"வாட்ஸ்அப்பில் என் போட்டோவை வைத்து மோசடி”- புகார் அளித்த சென்னை மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் புகைப்படத்தை வாட்ஸ்அப் செயலியில் டி.பி.யாக வைத்து மோசடி முயற்சி நடைபெற்றுள்ளது. மேயர் பிரியா வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்புவதை போன்று, சென்னை மண்டல அதிகாரிகள் 3 பேரிடம் அமேசான் கிஃப்ட் கார்டு மூலமாக அடையாளம் தெரியாத நபர்கள் பணம் கேட்டுள்ளனர். இது குறித்து மேயர் பிரியா தரப்பில் பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அண்மையில் கோவை மேயர் மற்றும் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் புகைப்படங்களை … Read more

Tamil News Live Update: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்.. ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்கள் மீது விசாரணை

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates அதிமுக துணை பொதுச் செயலாளர்கள் நியமனம் அதிமுக துணைப் பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அதிமுக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி. வேலுமணி  ஆகியோரை நியமனம் செய்து, … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | வாக்குப்பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னையில் வாக்களிக்க 2 எம்.பி.க்களுக்கு அனுமதி

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டி சட்டப்பேரவைச் செயலகத்தில், துப்பாக்கி ஏந்தியபோலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளின் எம்.பி.க்கள், தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் வாக்களிக்க உள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெறுகிறது. எம்.பி., எம்எல்ஏ.க்கள் வாக்களிக்கும் இந்த தேர்தல், டெல்லி நாடாளுமன்றம் மற்றும் அந்தந்த மாநிலசட்டப்பேரவை வளாகங்களில் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பெட்டிகள், மாநிலங்களுக்கு நேற்று முன்தினம் அனுப்பிவைக்கப்பட்டன. சென்னைக்கு நேற்று வந்த வாக்குப்பெட்டி, தலைமைச் செயலகத்தில் … Read more

டீ குடிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய நபர் மீட்கப்பட்டது எப்படி? – கூடலூரில் பரபரப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழை காரணமாக மங்குழி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலத்தில் நடந்து சென்ற நபர் தண்ணீருக்குள் விழுந்த நிலையில், ஊர்மக்கள் அவரை பத்திரமாக மீட்டனர். தொடர் கனமழையால் மங்குழி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் வழியாக மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி, மக்கள் வாகனங்களிலும், நடந்தும் பாலத்தின் வழியே கடந்தனர். காலையில் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது தண்ணீருக்குள் விழுந்த நபரை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக வெள்ளப்பெருக்கில் சிக்கிய மாணிக்கம் புதிய … Read more

உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி டேவிட்சனுடன் மோதும் அண்ணாமலை: பின்னணி என்ன?

Arun Janardhanan  TN BJP takes battle against intel chief to Raj Bhavan, seeks NIA probe in passport case: தமிழக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடர்பான போலி பாஸ்போர்ட் வழக்கை பயங்கரவாத தடுப்பு மத்திய அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) விசாரிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க கட்சி தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளது. மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ஏ.டி.ஜி.பி டேவிட்சன், தமிழகத்தில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் … Read more