மாணவிகளுக்கு மாதம் ரூ.1000… இன்று முதல் சிறப்பு முகாம்.! தமிழக அரசு அறிவிப்பு.!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் ஜூலை 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.  இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்காக அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் தற்போது உயர்கல்வி தொடரும் மாணவிகளின் விவரங்களை அந்தந்த கல்வி நிர்வாகம் … Read more

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை வாய்ப்பு குறைவு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் 3 நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மழை வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேட்டபோது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழக பகுதிகளில் கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வலுவாக நிலவியது. அதன் காரணமாக பரவலாக … Read more

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்: விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வெளியீடு

சென்னை: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை இன்று (ஜூன் 24) வெளியிட்டார். இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: சென்னை, பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கஞ்சா, மெத்தம்பெட்டமைன், ஆம்பெட்டமைன், LSD ஸ்டாம்புகள், Hash எனப்படும் கஞ்சா ஆயில் போன்ற நவீன காலத்து போதை பொருட்கள் மற்றும் டைடல், நைட்ரவிட் … Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்க போகும் மாவட்டங்கள்.!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.06.2022 முதல் 28.06.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் … Read more

பல்கலை. திருத்தச் சட்டம் உட்பட 21 மசோதாக்கள் நிலுவை – ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல்

சென்னை: 2020 ஜனவரி மாதம் முதல் கடந்த மே மாதம் வரை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட, பல்கலைக்கழக திருத்தச் சட்டங்கள் உட்பட 21 சட்ட மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின் சட்டமாக்கப்படும். ஆனால், தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, முதல்வர் ஸ்டாலினும் நேரில் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், … Read more

69% இட ஒதுக்கீடு : வெள்ளை அறிக்கை கோரும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

மெட்ரிக் பள்ளிகளில் 69% இட ஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை  ஆணையிட்டிருக்கிறது. மாணவர் சேக்கையில் சமூகநீதியை நிலைநாட்ட பள்ளிக்கல்வித்துறை காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது! தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அவை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பது … Read more

ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ள ‘நான் முதல்வன்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

சென்னை: “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 25) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைக்கவுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ். 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சியினை நாளை (ஜூன் 25) காலை 9 மணிக்கு சென்னை, … Read more