#புதுக்கோட்டை || கார் மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கணவன்-மனைவி உயிரிழப்பு.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கார் மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கணவன்-மனைவி உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(50). இவரது மனைவி கல்யாணி(45). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை விராலூர் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் பேருந்திற்காக கணவன்-மனைவி இருவரும் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக அதிவேகத்தில் வந்த கார் ஒன்று கணவன்-மனைவி மீது மோதி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ … Read more