சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (31.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 31/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 18/14/12 நவீன் தக்காளி 70 நாட்டு தக்காளி 65/60 உருளை 34/24/22 சின்ன வெங்காயம் 45/30/26 ஊட்டி கேரட் 52/50/45 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 70/50 பீட்ரூட். ஊட்டி 50/40 கர்நாடக பீட்ரூட் 32 சவ் சவ் 20/16 முள்ளங்கி 20/16 முட்டை கோஸ் 35/30 வெண்டைக்காய் 30/15 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி … Read more

சென்னையில் ரயில் நிலையத்தில் இளைஞரை கத்தியால் தாக்கி செல்போனை பறித்துச் சென்ற மர்ம 2 நபர்கள்.!

சென்னை சைத்தாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞரை கத்தியால் தாக்கி செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சொடலா அசோக் என்பவர் தனது நண்பரை சந்திக்க பெண் தோழியுடன் புறநகர் ரயிலில் சைத்தாப்பேட்டை சென்றுள்ளார். ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள் இருட்டில் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். செல்போனை தரமறுத்ததால் ஆந்திரமடைந்த அவர்கள் … Read more

குடிமைப் பணித் தேர்வில் வெற்றியை அடையும் வரை முயற்சியை கைவிடக் கூடாது: மாநில அளவில் முதலிடம் பிடித்த ஸ்வாதிஸ்ரீ கருத்து

கோவை: குடிமைப் பணித் தேர்வில், வெற்றியை அடையும் வரை முயற்சியை கைவிடக் கூடாது என மாநில அளவில் முதலிடம் பிடித்த கோவையைச் சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ தெரிவித்துள்ளார்.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், 2021-ம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், கோவை துடியலூர் அருகேயுள்ள தொப்பம்பட்டியைச் சேர்ந்த கே.தியாகராஜன் – ஜி.லட்சுமி தம்பதியின் மகள் ஸ்வாதிஸ்ரீ(25) குடிமைப் பணித் தேர்வில் அகில இந்தியளவில் 42-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்து … Read more

பட்டுக்கோட்டை: தேர்வு சரியாக எழுதவில்லைnm – 10ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

பட்டுக்கோட்டையில் தேர்வு சரியாக எழுதவில்லை என பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சூரிய பாண்டி என்பவரின் மகள் யோகேஸ்வரி (15). இவர், பட்டுக்கோட்டை இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தவர் இந்நிலையில், தேர்வெழுதிவிட்டு பள்ளியில் இருந்த வீட்டுக்கு வந்த அவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சரியாக எழுதவில்லை என மன உளைச்சலில் பேசிக்கொண்டிருந்துள்ளார், இதையடுத்து நேற்றிரவு தனது … Read more

தேசிய கல்விக் கொள்கை: பொன்முடியிடம் நேரில் கோரிக்கை வைத்த ஆளுனர்; தி.மு.க எதிர்ப்பு

DMK oppose governor’s request to accept National education policy to Ponmudi: தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொள்ளுங்கள், அமைச்சர் பொன்முடியிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். புதிய தேசிய கல்விக்கொள்கை வந்தால் நாடு வேகமாக வளர்ச்சி பாதைக்கு செல்லும். கல்வி கொள்கைகளை அரசியல் ரீதியாக பார்க்க கூடாது. நம்மளுடைய … Read more

தமிழக அரசை கண்டித்து பாஜக இன்று போராட்டம்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.!

தமிழக அரசை கண்டித்து இன்று தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21-ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசுகளும் குறிக்கப்பட்டன. இதனையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த … Read more

தமிழகம், புதுச்சேரியில் 4 நாள் மழைக்கு வாய்ப்பு – 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மே 31-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். ஜூன் 1, 2, 3-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் … Read more

கோழிக்கறி சோறு சாப்பிட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 40 பேருக்கு வாந்தி மயக்கம்

மணலூர்பேட்டை அருகே கோழிக்கறி சோறு சாப்பிட்ட கரும்பு வெட்டும் தொழிலாளிகள் 40 பேருக்கு வாந்தி மயக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 40 பேர் ஒன்று சேர்ந்து நேற்றிரவு கோழிக்கறி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், சாப்பிட்ட சிலமணி நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அனைவரும் மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை … Read more

Rasi Palan 31st May 2022: இன்றைய ராசிபலன்!

Rasi Palan 31st May 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 31st May 2022: இன்றைய ராசி பலன், மே 31ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

பிரபல பத்திரிக்கையாளர் விபத்தில் மரணம்.. முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல்.!!

ஊடகத்துறையில் 19 ஆண்டுகாலம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கல் மற்றும் தி ஹிந்து நாளிதழ்களில் பணியாற்றிய கார்த்திக் மாதவன் உயிரிழந்ததையடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஊடகத்துறையில் 19 ஆண்டுகாலம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கல் மற்றும் தி ஹிந்து நாளிதழ்களில் பணியாற்றிய கார்த்திக் மாதவன் அவர்கள் (29.5.2022) அன்று இரவு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தார் என்பதை அறிந்து … Read more