கிண்டி கிங்ஸ் மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் – அமைச்சர் மா.சுப்ரமணியன்

கிண்டி கிங்ஸ் மருத்துவமனையை மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் கார் நிறுவன பராமரிப்பு நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்… உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தினசரி 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொரோனா பரவல் அதிகரித்து … Read more

21 செகண்ட் டைம் தர்றோம்… இதில் ஒளிந்திருக்கும் 5 எலுமிச்சை பழங்களை கண்டுபிடிங்க!

Optical Illusion game: ஒளியியல் மாயைகள் (Optical illusions) காட்சி ஏமாற்றத்தால் உருவாக்கப்பட்டவை மற்றும் அவை காட்சி மாயைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இத்தகைய மாயைகள் ஒருவரின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இது படங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட விதம், வண்ணங்களின் விளைவு, ஒளி மூலங்களின் தாக்கம் அல்லது பிற காரணிகளைப் பொறுத்தது. பல்வேறு தவறான காட்சி விளைவுகள் மனித கண்களால் உணரப்படுகின்றன. மேலும், எல்லோரும் ஒரே மாதிரியான காட்சி மாயைகளை அனுபவிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சிலருக்கு … Read more

இந்த வழிமுறைகளை மேற்கொண்டால் மட்டுமே இதனை நிறுத்த முடியும் – ஆலோசனை சொல்லு டிடிவி தினகரன்.!

கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிறிய அளவிலான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் நேற்று வழக்கம்போல ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வானவேடிக்கை பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உருகுலைந்த நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும்,  இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அதில் ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதற்கிடையே, கடலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட … Read more

தேர்தல் ஆணையத்தை நாடினார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கட்சி விதிகளில் மாற்றம் செய்து ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பதிலாக பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். Source link

முகக்கவசம் அணிவது அவசியம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது கவனமாக அனுப்ப வேண்டும். அவர்களுக்கு … Read more

சாலையில் ஓட தகுதியில்லா வாகனத்தை ஆம்புலன்ஸாக அறிமுகம் செய்ய எதிர்ப்பு – காரணம் என்ன?

பணகுடியில் எந்த ஆவணமும் இன்றி சாலையில் ஓட தகுதியில்லா வாகனத்தை ஆம்புலன்ஸ் என அறிமுகம் செய்துவைத்த காவல் உதவி ஆய்வாளருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. நெல்லை மாவட்டம் பணகுடியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட இருப்பதாக துண்டுப் பிரசுரங்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பாகவே விநியோகிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த ஆம்புலன்ஸ் அறிமுக விழா பணகுடி காவல் நிலையம் முன்பு நடைபெற்றது. இதை காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருண்ராஜா துவக்கி … Read more

முதலீடுகள் மூலம் இலங்கையின் பொருளாதார மீட்புக்கு உதவ தயார்.. இந்தியா உறுதி!

வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா தலைமையிலான நான்கு பேர் கொண்ட தூதுக்குழு, கொழும்பின் விரைவான பொருளாதார மீட்சிக்கு புதுடில்லி உதவத் தயாராக இருப்பதாக வியாழனன்று இலங்கைத் தலைமைக்கு உறுதியளித்தது. அஜய் சேத், செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை, நிதி அமைச்சகம்; டாக்டர் வி ஆனந்த நாகேஸ்வரன், தலைமை பொருளாதார ஆலோசகர்; மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே, வெளிவிவகார அமைச்சகம் (MEA) – ஆகிய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் … Read more

5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியரை நையபுடைத்த உறவினர்கள்..!

5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், சித்தன்பட்டி குட்டை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 20ம் தேதி அந்த பள்ளி திறக்கப்பட்டது.அந்த பள்ளியில் தலைமையாசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய போது மீண்டும் பள்ளிக்கு … Read more

பூட்டிய வீட்டில் கொள்ளை அடித்த 50சவரன் நகைகள் மீட்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பூட்டிய வீட்டில் கொள்ளை அடித்த 50சவரன் நகைகளை சிசிடிவி உதவியுடன்  காவல்துறையினர் மீட்டனர்.  ராஜரத்தினம் நகரில் மரியதாஸ் என்பவரின் வீட்டில் கடந்த திங்களன்று நடந்த  திருட்டு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் உடன்குடியைச் சேர்ந்த செல்வராஜ், சங்கர் மற்றும் இடைச்சிவிளையை சேர்ந்த மைக்கேல்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 3பேரும் இரும்பு, தகரம், பிளாஸ்டிக் போன்றவற்றை விலைக்கு வாங்குவதாக கூறி தெருவை நோட்டமிட்டு பூட்டிய வீட்டில் கொள்ளை அடிப்பதை தொழிலாக கொண்டது தெரிய … Read more

உடுமலை அருகே ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு

திருப்பூர்: உடுமலை அருகே ஜம்பலப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிராமத்தில் ஜம்பலப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் 87 சென்ட் புஞ்சை நிலம் உள்ளது. இதனை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக 10 பேர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்தனர். இந்நிலையில், திருப்பூர் இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில், சட்டப் பிரிவு 78-ன் கீழ் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. … Read more