'திமுக தன்னை எதிர்க்கும் குரல்களை ஒடுக்குகிறது' – கார்த்திக் கோபிநாத் கைதிற்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: “திமுக தன்னை எதிர்க்கும் குரல்களை ஒடுக்குகிறது. வழக்கம் போல் போலி குற்றச்சாட்டுகள் கூறி கார்த்திக்கை கைது செய்துள்ளது” என்று யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலைர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்போதும்போல் அறிவாலயம் சில மிரட்டல் உத்திகளைப் பயன்படுத்தி கார்த்திக் கோபிநாத்தை முற்றிலும் போலியான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்துள்ளது. இது கண்டனத்துக்குரியது. இந்தச் செயல், திமுக அரசு தனக்கு எதிரான குரலை ஒடுக்க … Read more

டயர் வெடித்து சாலை தடுப்பு மீது மோதிய கார்: ஓய்வு வட்டாட்சியர் உட்பட இருவர் பலி

பர்கூர் அருகே டயர் வெடித்து சாலையின் தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி புதிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மோகன் (67). இவரது மனைவி ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் சசிகலா (63). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர்களது மகன் ரமேஷ் (39). மகள் சங்கீதா (31). மற்றும் 4 குழந்தைகள் உட்பட 8 … Read more

நீங்கள் பார்ப்பது முதலையா? தீவா? இந்த படம் உங்க ஆளுமை பற்றி என்ன சொல்லுது பாருங்க!

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களைப் பற்றி நிறைய கூறுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் அடிப்படையிலான ஆளுமை சோதனை உங்களைப் பர்றி உங்களுக்கு தெரிந்ததாக நினைத்துக்கொண்டிருக்கிற அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த படத்தைப் பாருங்க, நீங்கள் பெரிய சிந்தனையாளரா, மக்களுக்காக போராடக் கூடியவரா அல்லது வணிக படைப்பாளியா என்று கண்டுபிடியுங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், நாம் பார்க்கும் விதத்தை, சிந்திக்கும் விதத்தை மறு பரிசீலனை செய்ய சவால் விடுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் … Read more

தமிழக ஊர்க்காவல்படை & கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு.!!

கடலூர் ஊர்க்காவல்படை & கடலோர காவல்படையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஊர்க்காவல்படை, கடலோர காவல்படைகாலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு  கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கடலூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : கடலூர் ஊர்க்காவல்படை & கடலோர காவல்படை பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் கல்வித்தகுதி : பத்தாம் … Read more

நாமக்கல்லில் 19 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் 5 பேர் கைது.!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே 19 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். குப்பநாயக்கனூரை சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநரான ஜீவா, ஹரிஹரசுதன் என்பவருக்கு சொந்தமான 40 டன் மிளகை விற்பனை செய்துவிட்டு வந்த போது அவரது பைக்கை வழிமறித்த கும்பல்,  ஜீவா மீது மிளகாய் பொடியை தூவி 19 லட்சம் ரூபாய், பைக், செல்போனை பறித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சரக்கு … Read more

'திமுக ஆட்சியில் தான் நிறைய பெண்கள் முன்னேற்ற திட்டங்கள் வரும்' – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. இன்றைக்கு வரலாற்றில் பேசக்கூடிய அளவிற்கு அவை எல்லாம் விளங்கிக் கொண்டிருக்கின்றன என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் உள்ள எஸ்ஐஇடி (SIET) கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக் குழுவால், A++ தகுதியைப் பெற்றதற்கான பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் அவர் பேசுகையில், “சென்னையில் ஆண்களுக்கென்று பல … Read more

ஸ்தம்பிக்கும் மதுரை: காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தை தொடங்கிய 6,000 தூய்மைப் பணியாளர்கள்

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பணிபுரியும் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவை சார்ந்த 6 ஆயிரம் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறத்தப் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அவர்களின் வேலை நிறுத்தத்தினால் குடிநீர் விநியோகம், தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 4,500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் & 1,500 க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் இன்று முதல் … Read more

இந்த நாற்காலி எந்தப் பக்கம் இருக்கிறது சொல்லுங்க… கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தரும் புதிர்!

சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற மனதை மருளச் செய்கிற படங்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. ஒரு வெள்ளை அறையில் வைக்கப்பட்டிருக்கிற நாற்காலி எந்தப் பக்கம் அமரும்படி இருக்கிறது என்று கண்டறிய முடியாத அளவில் குழப்பும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதான் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற புதிர். இந்த நாற்காலி எந்தப் பக்கம் இருக்கிறது சொல்லுங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு … Read more

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4775 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38200-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

கட்டப்பையில் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

கடலூர் அருகே கட்டப்பையில் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்ட போலீசார், தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர். திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் சூப்பர் மார்கெட் அருகே பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கட்டப்பையில் இருந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், குழந்தையை கைப்பற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பச்சிளம் குழந்தையை அனாதையாக விட்டுச் சென்ற … Read more