முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு.!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, ராஜேஷ்குமார், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ். ஆர் சுப்பிரமணியன் ஆகிய 6 பேரின் பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பில் 4 இடங்களில் உள்ளது.  அதில் திமுக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், … Read more

தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவர் அடித்துக் கொலை… வாழை தோப்பில் புதைத்து 9 மாதம் காணவில்லை நாடகம்

கடலூரில் கணவரை கொன்று புதைத்து 9 மாதம் காணவில்லை என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். எஸ்.புதுக்குப்பத்தை சேர்நத விஜயலட்சுமிக்கும், மோகன் என்பவருக்கும் தவறான உறவு இருந்ததாகவும், அதை கணவர் ராஜசேகர் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆண் நண்பரின் உதவியுடன் ராஜசேகரை கொன்று வாழைத் தோப்பில் புதைத்து காணவில்லை என விஜயலட்சுமி நாடகமாடியதாக கூறப்படுகிறது. அடிக்கடி ராஜசேகர் குடும்பத்தினரிடம் கோபித்துக் கொண்டு வெளியூர் செல்வது விஜயலட்சுமிக்கு காரணம் கூற ஏதுவாக இருந்தது. இந்நிலையில் ராஜசேகரின் சகோதரர் … Read more

மதுரை, கோவை, ஆவடி உள்ளிட்ட 6 மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம்: தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு

சென்னை: மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், ஆவடிஆகிய 6 மாநகராட்சிகளின் ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமைச்செயலர் வெ.இறையன்பு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் சிம்ரன்ஜித் சிங்காக்லோன், மதுரை மாநகராட்சிஆணையராகவும், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.பிரதாப், கோவை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.வைத்தியநாதன், திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை … Read more

பாயும் காளைகள் பந்தாடும் காளையர் – இது நிலவாரப்பட்டி ஜல்லிக்கட்டு

சேலம் நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 400 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர். சேலம் நிலவாரப்பட்டி மூலக்காடு பகுதியில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைத்தார். இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400 காளைகளும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை பிடிக்க வீரர்கள் ஆர்வத்துடன் களத்தில் … Read more

மாநிலங்களவை எம்.பி ஆக எனக்கு தகுதி இல்லையா? நடிகை நக்மா கேள்வி

மாநிலங்களவை தேர்தலில் பேட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்கப்படடாதது குறித்து நடிகையும் மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான நக்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று (மே 29) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில். தமிழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். கர்நாடகத்தின் ஜெய்ராம் ரமேஷ்,  ராஜஸ்தான் மாநிலத்தின் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக். பிரமோத் திவாரி, மத்திய பிரதேசத்தின் விவேக் தன்கா, சத்திஸ்கர் மாநிலத்தின் … Read more

கடலூர் அருகே கட்டப்பையில் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை.! நடந்தது என்ன.?

கடலூர் அருகே அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட காவல்துறையினர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் அருகே குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டதால், அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது கட்டப்பையில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்துள்ளது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், குழந்தையை கைப்பற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர். மேலும் பிறந்த குழந்தையை அனாதையாக விட்டுச் … Read more

தீப்பொறி பறக்க சியர் கேர்ள்ஸுடன் அண்ணாச்சி அரங்கேற்றம்.. ரஜினி, விஜய் தான் ரோல் மாடலாம்.!

தன்னை விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துகள் கூறி முன்னோட்ட வெளியீட்டு மேடையில் தீப்பொறி பறக்க விட்ட லெஜெண்ட் சரவணன், தான் சினிமாவில் நடிப்பதற்கு ரஜினி விஜய் ஆகியோர் தான் இன்ஸ்பிரேசன் என்றார். இந்தியாவின் முன்னணி நாயகிகள் வாழ்த்த…. தீப்பொறி பறக்க தி லெஜண்ட் ஆடியோ மற்றும் முன்னோட்ட மேடையை தெறிக்கவிட்டார் அண்ணாச்சி சரவணன்..! முன்னதாக செய்தியாளர்களிடம் தான் நடிப்பதற்கு இன்ஸ்பிரேசனே ரஜினிகாந்தும், விஜய்யும் தான் என்று பெருமையாக கூறிய சரவணன் தன்னை விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக் கூறினார் தி லெஜண்ட் படம் … Read more

மாநிலங்களவையில் சிதம்பரத்தின் வாதங்களை எதிர்கொள்ள முடியாததால் குறிவைக்கின்றனர்: சிபிஐ சோதனை குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து

சென்னை: டெல்லியிலிருந்து நேற்று சென்னை வந்த கார்த்தி சிதம்பரம், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சோதனை என்பது எனக்குப் புதிதல்ல. 6 முறை சோதனை நடத்தி, எதைக் கண்டுபிடித்தார்கள். இந்தியாவில் இதுவரை யாரையும் 6 முறை சோதனை செய்ததில்லை. என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் உண்மை எதுவுமில்லை. புலன் விசாரணை என்ற பெயரில், எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் முயற்சிதான். என்னிடம் 27 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். என்ன கேள்வி கேட்டனர் என்பதை சிபிஐ வெளியிடாமல் … Read more

இன்று முதல் மதுரை – ராமேஸ்வரம் வழிதடத்தில் மீண்டும் தொடங்கியது பயணிகள் ரயில் சேவை

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என்று மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்திருந்த நிலையில், அதன்படி இன்று இந்த வழிதடத்தில் ரயில் சேவை தொடங்கியது. மதுரை – ராமேஷ்வரம் இடையில் காலை மாலை என இருவேளைகளாக இயக்கப்பட்ட ரயில் சேவை, கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த இரு ரயில்களும் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என … Read more

Tamil News Today Live: மாநிலங்களவை தேர்தல் – ப.சிதம்பரம் இன்று வேட்புமனு

Go to Live Updates Tamil Nadu News Updates: டெல்டா பாசன மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம். முதல்கட்டமாக இன்று புதுக்கோட்டையில் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் மதுரை மாநகராட்சியில் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவை சேர்ந்த 6 ஆயிரம் பேர் இன்று முதல் வேலைநிறுத்தம். தொழிலாளர் நலத்துறை, மாநகராட்சி சிறப்புக் குழு, மேயர் என 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போராட்டத்தில் … Read more