விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: ஸ்தம்பித்தது போக்குவரத்து
வெளியூர் சென்றவர்கள் கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் வசிக்கும் பலர், கோடை விடுமுறையை கழிக்க குழந்தைகளுடன் சொந்த ஊர் மற்றும் வெளியூர்களுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கார்களிலும் மற்ற வாகனங்களிலும் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் நேற்று மாலை மற்றும் இரவில் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் … Read more