தமிழகத்தில் கத்திரி நிறைவு – வெப்பம் தணிய வாய்ப்பு

சென்னை: அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி தொடங்கி நேற்று (மே 28) வரை நீடித்தது. கத்திரி வெயில் தொடங்கியதும் அசானி புயல் உருவானதால், சில நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. இனி வரும் நாட்களில் வெயில் தனிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு … Read more

ஸ்டான்லி மருத்துவமனையில் குறைந்த விலையில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

வட சென்னை மக்கள் பயன்பெறும் வகையில், ஆயிரம் ரூபாய் செலவில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சுகதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், மாணவர் நூலகம் மற்றும் முழு உடல் பரிசோதனை மையத்தை திறந்து வைத்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். Source link

‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறுகிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி இன்று (ஞாயிறு) காலை 9 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள விவேகானந்தா அரங்கில் நடைபெற உள்ளது. யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவு ஆகுமா என ஏராளமான கேள்விகளுடன் … Read more

உங்கள் ஆதார் கார்டு நகலை இவர்களிடம் தரவேண்டாம் – மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை.!

ஆதார் கார்டு நகலை, எந்தவொரு நிறுவனத்திடமும் வழங்கவேண்டாம் என்று பொது மக்களுக்கு தங்கள் மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, “ஓட்டல்கள், திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து ஆதார் கார்டுகளின் நகல்களை சேகரிக்கவோ, அதனை வைத்திருக்கவோ அனுமதி இல்லை. பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொது மையங்களில் ஆதார் டவுன்லோடு செய்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். அப்படி டவுன்லோடு செய்தால், நகல் எடுத்ததும், கம்ப்யூட்டரில் … Read more

ரவி 2 நாளில் ஓய்வு: தாம்பரத்தின் புதிய காவல் ஆணையர் யார்? – கூடுதல் டிஜிபிக்கள் இடையே கடும் போட்டி

தாம்பரம் காவல் ஆணையர் ரவி அடுத்த இரு நாளில் ஓய்வுபெறுகிறார். இதையடுத்து அப்பதவிக்கு கூடுதல் டிஜிபிக்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை பெருநகரக் காவல் துறை சென்னை, தாம்பரம், ஆவடி என 3 காவல் ஆணையரகமாக பிரிக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம் காவல் ஆணையரகம் சோழிங்கநல்லூரிலும், ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் ஆவடி சிறப்புக் காவல்படை 2-ம் அணி வளாகத்திலும் செயல்படுகிறது. இந்த புதிய இரு காவல் ஆணையர் அலுவலகங்களையும் … Read more

பலியாகிய இரு உயிர்கள்., காட்டு யானையை பிடிக்க, இரு கும்கி, ட்ரோன்கள் மூலம் தேடுதல் வேட்டை.!

நீலகிரி அருகே பொதுமக்கள் இரண்டு நபர்களின் உயிரை பறித்த காட்டு யானையை, ட்ரோன்கள் மூலமும், இரண்டு கும்கி யானைகள் மூலமாகவும் வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் இடங்களில் உலா வந்து கொண்டிருந்த காட்டு யானை ஒன்று, கடந்த 26ஆம் தேதி கோவிந்தன் கடை என்ற இடத்தில் ஆனந்தன் என்பவரை படுகொலை செய்தது.’ அதனைத் தொடர்ந்து மறுநாள் 27ஆம் தேதி மும்தாஜ் என்ற பெண்ணையும் தாக்கிக் கொலை செய்தது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் … Read more

கோயம்பேடு சந்தையில் மாம்பழம் வரத்து அதிகரிப்பு… விலை குறைந்தும் மாம்பழம் வாங்க ஆர்வம் காட்டாத மக்கள்.!

சென்னை கோயம்பேடு சந்தைக்கு மாம்பழம் வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ள போதிலும், விற்பனை குறைவாகவே இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தைக்கு ஒரு நாளைக்கு 25 லாரிகள் மாம்பழ லோடு வரும் நிலையில், அனைத்து ரக மாம்பழங்களும் கிலோவுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. எனினும் கல் மற்றும் ரசாயன பொருட்கள் மூலம் மாம்பழம் பழுக்க வைக்கப்படுவதாக அச்சப்படும் மக்கள், மாம்பழங்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.  Source … Read more

மாநகராட்சி மன்றத்தில் கவுன்சிலரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் கண்டனம்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராணி விக்டோரியா நினைவாக டவுன்ஹாலில் கோவை மாநகராட்சி மன்றம் 1892-ல் கட்டப்பட்டது. இது ஒரு நியோ-பாரம்பரிய நகராட்சி கட்டிடம் ஆகும். 1887-ல் இக்கட்டிடத்துக்காக சமூக ஆர்வலரும், பத்திரிகையாளருமான எஸ்.பி.நரசிம்மலு நாயுடு ஆயிரம் ரூபாயை நன்கொடையாக அளித்து, பொதுமக்களிடம் நிதி திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார். நகராட்சி நிர்வாகம் ரூ.3 ஆயிரம் நன்கொடையாக அளித்தது. மொத்தம் ரூ.10 ஆயிரம் செலவில் இக்கட்டிடம் கட்டப்பட்டது. இப்படி … Read more

பா.ம.க சாதிக்கட்சி என்கிற பிம்பத்தை உடைத்தெறிவோம் – அன்புமணி ராமதாஸ்

சென்னை அருகே திருவேற்காட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜிகே மணி தலைமை தாங்கினார். அதில், பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, பாமக 2. 0, கட்சியின் சாதிப் பிம்பத்தை உடைத்து, தமிழக மக்களுக்கு நல்லது செய்யவே வந்துள்ளோம் என்பதை எடுத்துரைப்பதே கட்சியின் அடுத்தக்கட்ட இலக்காக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தொண்டர்களிடையே உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், ” மாநிலத்தை ஆளத் தேவையான … Read more

திருமணமான ஒன்பதே மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!

இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் அங்குள்ள பாத்திர கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தரண்யா என்ற மனைவி இருக்கிறார். சம்பவத்தன்று ஐயப்பன் வேலைக்கு சென்ற நிலையில் தனது மனைவிக்கு கைபேசியில் அளித்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் பயந்துபோன வீட்டு உரிமையாளருக்கு அழைத்து தரண்யாவை பார்க்குமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து … Read more