கடந்த முறை நடந்தது இந்த முறை நடக்கக்கூடாது.. எடப்பாடி பழனிசாமியின் புதிய பிளான்.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.  கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி (இன்று) நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் … Read more

முதலமைச்சர் உத்தரவின் பேரில் விபத்தில் பெற்றோரை இழந்த சிறுவர், சிறுமிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நிதியுதவி..!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் விபத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று நிதி உதவி வழங்கினார். நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்து முருகன் – அனிதாசெல்வி தம்பதியினருக்கு சிவகுருநாதன் என்ற மகனும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தாய் அனிதா செல்வி விபத்தில் உயிரிழந்த நிலையில், தந்தை முத்து முருகன் நோயினால் காலமானார். இந்நிலையில் பெற்றோரை இழந்து தவித்த இந்த குழந்தைகள் … Read more

இன்று 36-வது உலக மக்கள் தொகை தினம் – தமிழக மக்கள்தொகை 50 ஆண்டுகளில் இருமடங்காக உயர்வு :

கரூர்: தமிழக மக்கள்தொகை 50 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மிக மெதுவாக அதிகரித்து வந்த உலக மக்கள்தொகை, அதன்பின் வெகுவேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. 1987 ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது. அந்நாளே உலக மக்கள்தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று (ஜூலை 11) 36-வது உலக மக்கள்தொகை தினமாகும். நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு, 1881-ம் ஆண்டு முதல் … Read more

ஓ.பன்னீர்செல்வத்தை பொருளாளர் பதவியிலிருந்து நீக்க இபிஎஸ் தரப்பு முடிவு?

சென்னை வானரகத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் இடம் தயாராக உள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக பொருளாளரை மாற்ற தனித் தீர்மானம் இயற்றப்படக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு வெளியாக உள்ள நீதிமன்ற உத்தரவை அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு உயர்நீதிமன்ற உத்தரவு வர உள்ள நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. மண்டபத்தின் திடலில் பொதுக்குழு மற்றும் செயற்குழுவிற்காக … Read more

மூன்றாக உடைந்த அதிமுக.. ஓபிஎஸ், சிபிஎஸ், சசிகலா காரணம் இல்லை.. இவர்கள்தான் காரணம்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!!

வேலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வேலூர் சிப்பாய் புரட்சியின் உயிர் நீத்தவர்களின் நினைவாக வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி, முன்னாள் அமைச்சர் கே வி தங்கபாலு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் டீக்காராமன், சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹீத் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் பேசிய கே எஸ் அழகிரி, வலிமையான அதிமுகவை மூன்றாக உடைத்து இருப்பதற்கு யார் காரணம் என்றால், அந்த கட்சியில் … Read more

விபரீத பல் டாக்டர் தோழியுடன் கைது..! கிளினிக் நடத்துவதே இதுக்கு தானாம்..!

சென்னையில் விவாகரத்தான பெண்ணுக்கு வாழ்வு தருவதாக கூறி சீரழித்து வீடியோ எடுத்து மிரட்டிய பல் மருத்துவரையும், கூட்டாளியான பெண் டாக்டர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை காமாட்சி ஆஸ்பத்திரி அருகில் கிறிஸ்டல் பல் மருத்துவமனையை நடத்தி வருபவர் டாக்டர் நிஷாந்த் ரவிசந்திரன். இவர் மீது கணவனை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதில் பிரபல பல் டாக்டராக சமூகத்தால் அறியப்பட்ட நிசாந்த் … Read more

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: கூடுதலாக 1,000 போலீஸார்

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் 11-ம் நாளில் அத்தி வரதர் காவிப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். அத்தி வரதர் வைபவத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பணியில் கூடுதலாக 1,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரிசையில் வருவதற்காக தடுப்புக் கட்டைகள் மேற்கூரை அமைத்தல் போன்ற விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை 11 நாட்களில் அத்தி வரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. Source link

நீலகிரி மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.!

பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடரும் கனமழையால் மாயார், பாண்டியாறு, பொன்னம்பழ ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாக பாயும் மாயார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தெப்பக்காடு தற்காலிக பாலத்தை தண்ணீர் முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் தெப்பக்காடு-மசினகுடி நெடுஞ்சாலையை இணைக்கும் தற்காலிக பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் ராட்சத பைப்புகளில் ஏற்பட்ட … Read more