இளைஞர் தலைக்கேறிய மதுபோதை – தள்ளாடி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

மது போதையில் தள்ளாடி விழுந்த வட மாநில இளைஞர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜவாதி ராமாராவ் ஆச்சாரி (32) என்ற இளைஞர் அவிநாசி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வார விடுமுறை நாளான இன்று அவிநாசியில் பொருட்கள் வாங்க வந்தவர், மது அருந்தியுள்ளார். மது போதை மிக அதிகமானதால் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு நிதானமின்றி பின்நோக்கி வளைந்தவாறு … Read more

மின் கட்டணம் செலுத்தவில்லை; மின் இணைப்பு துண்டிக்கப்படும் போலி எஸ்.எம்.எஸ்… மக்களே உஷார்!

உங்களுடைய செலுத்தப்படாத மின் கட்டணத்தை செலுத்த இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு எஸ்.எம்.எஸ் வந்துள்ளதா? அல்லது உங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்? ஜாக்கிரதை என்று குறுஞ்செய்தி வந்துள்ளது என்றால் அது உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைப் பறிப்பதற்கான ஏமாற்றுவேலை. அதனால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருங்கள். சென்னையில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக தெரியாத எண்களில் இருந்து உங்களுடைய மின் கட்டணம் செலுத்தப்படாததால் இரவு 10:30 மணிக்குள் மின்சாரம் துண்டிக்கப்படும் என ஒரே மாதிரியாக போலியான எஸ்.எம்.எஸ் … Read more

தமிழக தொழில் அதிபரை டெல்லியில் வைத்து கடத்திய மர்ம கும்பல் கைது.! 

டெல்லி விமான நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட தமிழக தொழிலதிபரை, ஹரியாணா போலீஸார் மீட்டுள்ளனர்.  தமிழகம் : திண்டுக்கல் மாவட்டம், சென்னம நாயக்கன்பட்டியை சேர்ந்த தொழிலதிபர்  கே.எஸ்.வில்வபதி (வயது 56), கடந்த தொழில் சம்மந்தமாக ஜூன் 5-ஆம் தேதி, தனது கணக்காளர் வினோத் குமாருடன் (வயது 28) டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று மாலை 6 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்ற வில்வபதி, கணக்காளர் வினோத்குமாரை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளது. பின்னர் அந்த … Read more

முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாக பாயும் மாயார் ஆற்றில் வெள்ளபெருக்கு..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாயார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தெப்பகாடு தற்காலிகப் பாலத்தை சூழ்ந்த தண்ணீரை வனத்துறையினர் வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர் மழையால் மாயார், பாண்டியாறு, பொன்னம்புழ ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாயார் ஆற்றில் பாயும் தண்ணீரால் தெப்பக்காடு – மசினகுடி நெடுஞ்சாலையை இணைக்கும் தற்காலிக பாலம் துண்டிக்கப்பட்டது. அங்கு விரைந்த வனத்துறையினர், ராட்சத பைப்புகளில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.  Source link

'இயற்கை விவசாயத்தில் வருவாய் ஈட்டலாம்' – எளிய யோசனைகள் சொல்லும் விவசாயி கருணாகரன்

மதுரை: ரசாயன உரங்களுக்கு செலவு செய்யமுடியாமல் பணத்தை மிச்சப்படுத்தும் வகையில் இயற்கை முறை விவசாயத்திற்கு மாறிய செல்லம்பட்டி விவசாயி அதன்மூலம் வருவாய் ஈட்டுகிறார். மேலும், இயற்கை முறையில் விளைந்த விளை பொருட்கள் உண்பதையே வாழ்க்கை முறையாக்கியுள்ளார். மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகே சக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி என்.கருணாகரன் என்ற அலெக்ஸ் (வயது 50). இவர் தனக்கு சொந்தமான கிணற்றுடன் கூடிய 3 ஏக்கர் நிலத்தில் ரசாயன உரங்களிட்டு நெல், காய்கறிப் பயிர்கள் செய்தார். இதில் ரசாயன உரங்கள், … Read more

அதிமுக-வின் 3 சர்ச்சை பொதுக்கூட்டங்களும், அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளும்!

தலைமை தொடர்பாக அதிமுகவில் எப்போதெல்லாம் பொதுக்குழு கூட்டங்கள் நடந்துள்ளன, அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன என்பது பற்றிய சிறு தொகுப்பு இங்கே. 2016 டிசம்பர் பொதுக்குழு வி.கே.சசிகலா பொதுச் செயலாளராக தேர்வானார். அதிமுக 2 அணியாக பிளவு பெற்றது. ஓபிஎஸ் அணி – சசிகலா அணி என இரு அணிகள் பிரிந்தது. சசிகலா ஆதரவுடன் ஈபிஎஸ் முதல்வராகிறார். பின் அதிமுக மீண்டும் 3 அணியாக பிளவு பெற்றது. ஓபிஎஸ் அணி – ஈபிஎஸ் அணி – சசிகலா … Read more

இந்தியாவின் ஒற்றுமையை பலவீனப் படுத்த ஆங்கிலேயர்கள் செய்த சதி: ‘திராவிடம்’ பற்றி ஆளுனர் ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சனாதனம் குறித்தும், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா குறித்தும் பேசியது மாநிலத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளால் சர்ச்சையாக்கப்பட்டு வந்த நிலையில், பாரதத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்த, புவியியல் வெளிப்பாடான திராவிடத்தை இன அடையாளமாக மாற்றி ஆங்கிலேயர்கள் சதி செய்ததாக பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக திமுக அரசு விமர்சனம் செய்ததையடுத்து, தமிழக அரசுக்கும் … Read more

#Video || ஒரே சிரிப்பாய் சிரித்த பொன்முடி., அப்படி என்ன சொல்லி இருப்பாரு முதல்வர் ஸ்டாலின்.?!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காதில் ரகசியமாய் சொல்வதைக் கேட்டு, அமைச்சர் பொன்முடி விழுந்து, விழுந்து ஒரே அடியாக சிரிப்பாய் சிரித்த காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அரசு நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஒன்றாக அருகருகே அமர்ந்து இருக்கும் காணொளி ஒன்றை, பொன்மொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தலைவர் என்று தலைப்பிட்டுள்ள அந்த காணொளியில், முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியின் … Read more

கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி ரவுடி கொடூரமாக கொலை.. காரணம் என்ன.?

ராணிப்பேட்டை அருகே, போலீசார் எனக்கூறி அழைத்துச் சென்று ரவுடியை கை, கால்களை துண்டு துண்டாக வெட்டிக் கொடூரமாக கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கூத்தம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயதான சரத்குமார் என்ற ரவுடி மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. முன்விரோதம் காரணமாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சரத்குமாரை கொலை செய்யும் முயற்சி நடைபெற்றதாகவும் இதில் தப்பித்த சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் … Read more

தமிழகத்தில் இன்று 2,537 பேருக்கு கரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 10) ஆண்கள் 1,418 பெண்கள் 1,119 என மொத்தம் 2,537 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 804 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து ,44,682 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,560 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட … Read more